Tuesday, March 20, 2012

கடவுள் காமெடி

சாதி மத இன பேதமின்றி உலகெங்கிலுமிருந்து அனைத்து தரப்பிலும் கடவுளை வம்புக்கிழுத்து காமெடியாய் பேசுகிறவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதில் சமீபத்தில் ஜிம்பாவே அதிபர் ராபட் மொகாபேயும் அடக்கம். பல்வேறு சுகவீனங்கள் மத்தியிலும் தப்பி பிழைத்து தனது 88-ஆவது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த முகாபே, “பல முறை நான் செத்திருக்கிறேன். அதனால் நான் கிறிஸ்துவையும் மிஞ்சிவிட்டேன்” என்று ஜோக்கடித்திருக்கின்றார். நல்ல காமெடி சார்.

“கடவுள் மனிதனாக பிறந்து திருவள்ளுவர் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்” என்று ஒரு மிமிக்ரி பாடகர் காமெடியாக பாடியது நினைவுக்கு வருகின்றது. இது தான் அவர் தன் மனிதப்பிறவியில் கண்ட மாபெரும் பாடு போல. மேற்கண்ட இருவரின் புரிதலும் நல்ல ரசனை. நல்ல காமெடி.

அதையும் மிஞ்சியது இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு “அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வந்தது கிருஸ்தவ சர்ச் மிஷனரிகள்” என்பதாம்.
எல்லா காமெடியிலும் கடைசி காமெடி தான் சூப்பரோ சூப்பர்.

I கொரிந்தியர் 14:20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

Ref: Time March 5,2012 ”I have died many times.That`s where I have beaten Christ"- Zimbabwe President Robert Mugabe.

http://tamil.oneindia.in/news/2012/03/20/tamilnadu-rama-gopal-sees-christian-churches-behind-koodankulam-aid0090.html

Friday, March 16, 2012

முன்னாள் திரைப்பட நடிகை மகாலட்சுமியின் சாட்சி

1980-களில் ராணிதேனி, நன்றி முதலான பல தமிழ் திரைப்படங்களில் மகாலட்சுமி என்ற பெயரிலும், பின்பு கர்நாடக திரை உலகில் ஸ்ரீ என்ற பெயரிலும் நுழைந்து பிரபல நடிகையாக வாழ்ந்த முன்னாள் நடிகர் ஏ.வி.எம் ராஜன் அவர்களின் மகள் ரேச்சல் அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு அவருக்கு சாட்சியாக வாழும் அனுபவ சாட்சி. நீங்கள் விசுவாசத்தில் வளரவும் உறுதிப்படவும் இங்கே வழங்குகிறோம். இந்த சாட்சிகளை உங்கள் ஜெபத்தில் நினைத்துக்கொள்ளுங்கள்.
Testimony of old Kannada actress Mahalakshmi Shree daughter of AVM Rajan.
Part:1


Part:2

Download as MP3
AVM Rajan daughter Mahalakshmi Testimony 01
AVM Rajan daughter Mahalakshmi Testimony 02
எபிரெயர் 12:1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;

Friday, March 09, 2012

துக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்


பாடல் இயற்றியவர் : சாது கொச்சுகுஞ்ஞு உபதேசி

1. துக்கத்தின்டே பானபாத்ரம் கர்த்தாவென்றே கையில் தந்தால்
சந்தொஷத்தோடது வாங்கி அல்லெலூயா பாடிடும் ஞான்..

2. தோஷமாயிட்டொன்னும் என்னொ டென்றே நாதன் செய்கயில்லா
என்னெயவன் அடிச்சாலும், அவனென்னெ ஸ்னேகிக்குன்னு..

3. கஷ்டனஷ்டம் ஏறிவன்னால் பாக்யவானாய் தீருன்னு ஞான்
கஷ்டமேற்ற கர்த்தாவொடு, கூட்டாளியாய் தீருன்னு ஞான்..

4. லோகத்தே ஞான் ஒர்க்குன் னில்லா, கஷ்டனஷ்டம ஒர்க்குன் னில்லா,
எப்பொடென்றே கர்த்தாவினெ, ஒன்னு கானமென்னெயுல்லு..

Thukaththintre Baanabathram Lyrics: Sadhu Kochukunju Upadeshi

1. Dukhathinte paanapaathram, karthavente kayil thannal
Santhoshathodathu vaangi, halleluiah paadidum njan..

2. Dhoshamayittonnum enno dente naathan cheykayilla
Enneyavan adichalum, avanenne snehikkunnu..

3. Kashtanashtam erivannal bhagyavaanayi theerunnu njan
Kashtametta Karthavodu, koottaliyaayi theerunnu njan..

4. Lokathe njan orkkun nilla, kashtanashtam orkkun nilla,
Eppolente Karthavine, onnu kaanamenneyullu..

Thursday, March 01, 2012

மாணிக்க திருமொழிகள் - 2

ஈரமான விறகுக் கட்டையை அடுப்பில் வைக்கும் போது அது எரியுமுன்னே இரைச்சலும் புகைச்சலுமுண்டாகும். அப்படியே தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜெபத்தைத் தேவனுக்கு ஏறெடுக்கு முன் அவர்கள் இதயத்திலிருந்து அலறுதலும், புலம்பலும் உண்டாகி, அதன் பிறகே ஜெபம் கொழுந்து விட்டு எரிவது போலிருக்குமாம்.

டிராம் வண்டி பவர் ஹவுசிலிருந்து வல்லமை வரும் மின்சாரக் கம்பியைத் தொட்டுக் கொண்டிருக்கு மட்டும் எந்நேரமும் ஓடும். அவ்வாரே ஜெபத்தினால் தேவனைத் தொட்டுக் கொண்டிருக்கிறவர்கள் யார் யாரோ அவர்களுக்கு வல்லமை வந்து கொண்டே இருக்கும்.

தேனைப்போன்று தித்திப்பாகவும் இருந்து விடாதே, வேப்ப எண்ணெய் போன்று கசப்பாகவும் இருந்து விடாதே! ஏனெனில் முன்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை இனிக்க இனிக்கப் பேசி ஏமாற்றி விடுவார்கள். பின்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை வெறுத்து விடுவார்கள். ஆகையால் பகுத்தறிவை உபயோகித்து விவேகமாய் நடந்துகொள்.

ஒரு துண்டு இரும்பு விலை ஒரு பவுண்.
அதைக் குதிரை லாடங்களால அடித்தால் 2 பவுண் கிரயமாகும்.
அதே ஒரு பவுண் இரும்பை ஊசிகளாக அடித்தால் 70 பவுண் மதிப்பாகும்.
அந்த ஒரு பவுண் இரும்பையே கடிகார “மெயின் ஸ்பிரிங்” ஆக அடித்தால் 1000 பவுண் பெறுமதியாகும்.
மனுஷனின் வேலைத் திறமை அரிய ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட மனிதனுக்கு வேலை கிடைப்பதில்லை. இது யார் குற்றம்?

அவளுக்குக் குழந்தை குட்டிகள் இல்லையே! ஏன்?
விதை எல்லாம் முளைப்பதில்லையே!
பூவெல்லாம் காய்ப்பதில்லையே!

வித்தையுள்ளவன் தூங்கான்.
விசாரமுள்ளவன் தூங்கான்.
பணக்காரன் தூங்கான்.
பைத்தியக்காரன் தூங்கான்.

வேதப்புத்தகம் பாவம் செய்யாதபடி உங்களைத் தடுக்கும்; அல்லது இப்புத்தகத்தை தொடவிடாதபடி பாவம் உங்களைத் தடுத்துவிடும்.

வாழ்க்கை என்பது
18 வயது வரை கனவு.
40 வயது வரை போர்.
40 க்கு மேல் சுழல்தான்.

சூரியன் பிறருக்கு ஒளி கொடுக்கிறது. காற்று பிறருக்காகவே வீசுகிறது. மரம் கூட பிறருக்காகத்தான் பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குகிறது.நிழல் தருகிறது. ஆனால் இந்த நன்றி கெட்ட மனிதன் மட்டும் தனக்காகத்தான் வாழ விரும்புகிறான்.

உன்னாலான மட்டும் சம்பாதி.
உன்னாலான மட்டும் மீதிபிடி.
உன்னாலான மட்டும் கொடு.

அன்புடனே பழகு - உடனே
அழகனாகிடுவாய்
முன்பின் எண்ணிப் பழகு - உடனே
முன்னுக்கு வந்திடுவாய்
ஆள் தெரிந்து பழகு - உடனே
அறிஞன் ஆகிடுவாய்
கேள்வி கேட்டுப் பழகு - உடனே
கேட்கும் சுகம் பெறுவாய்

ஒரு தரம் பிறந்தவர்களுக்கு இரண்டு சாவு,
இரண்டு தரம் பிறந்தவர்களுக்கு ஒரு சாவு.