Monday, June 27, 2011

முடிவு என்னமாயிருக்குமோ?.



அளவுக்கு அதிகமான சுதந்திரம் கிடைத்தால் இப்படித்தான் ஆகும் என்று ஓரு நணபர் சொன்னார் . அவர் சுட்டிக்காட்டியது அமெரிக்காவில் வளர்ந்து வரும் ஓரினச் சேர்க்கை திருமணங்களைப் பற்றி.போன வெள்ளிக்கிழமையன்று அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் இது போலஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கி சட்டம் நிறைவேற்றியது. மாபெரும் முழக்கங்களும் சந்தோசக் கூக்குரலும் நகரிலே காணப்பட்டது. வெற்றி பரேடுகள் பல நடத்தப்பட்டன.நியூயார் மாகாண கவர்னரை கொண்டாடினார்கள்.”Jesus forgives sin" என்ற வாசகம் அடங்கிய போர்டும் கும்பலின் இடையே காணப்பட்டது. வேதமோ "தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்" என்கிறது. "அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல்,ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்" என்கிறது (ரோமர்:1:26,27). கிறிஸ்து பாவங்களை மன்னிக்கிறார் என்று சாக்கு சொல்லிக் கொண்டு இதுபோன்ற துணிகரங்களை செய்கிறார்கள்.ஆனால் மன்னிப்பே வழங்கப்படாத, சட்டத்தை மீறுபவர்களுக்கு சிரச்சேதமே தண்டனையாக வழங்கப்படும் இன்ன்னொரு ஆட்சி வந்து கொண்டிருப்பதை இவர்கள் அறியார்கள்.அவர்கள் பூமியை நிறைக்க ஐந்தும் பத்துமாக பிள்ளைகளைப் பெற்று பலுகிபெருகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களோ கருக்கலைப்பு தொடங்கி ஓரினச்சேர்க்கை வரை ஆண்டவருக்கு எதிராக துணிந்திருக்கிறார்கள்.சாதிக்க வேண்டியது எத்தனையோ இருக்கின்றது. அமெரிக்காவின் கடன் சுமை மட்டும் 62 டிரில்லியன் டாலர்கள் எனச்சொல்லி USA Today பத்திரிகை சமீபத்தில் தலைப்புச்செய்தி வெளியிட்டது.இதெல்லாம் இத்தலைமுறையினருக்கு முக்கியமில்லை. பதிலாக ரெயின்போ கொடியை ஏந்திக்கொண்டு அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் சொன்னார் ”அமெரிக்காவை ஆண்டவர் தண்டியாமல் விட்டால், அவர் சோதோம் கொமாராவிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும்” என்று. இதன் முடிவு என்னமாயிருக்குமோ?.

6 comments:

  1. இது போன்ற செய்திகளை படிக்கும்போது மனதி்ற்கு வருத்தமாக உள்ளது. தேவனின் கட்டளைகளை துச்சமாக மதித்து ஒழுக்கக் கேடான இத்தகைய திருமணங்களினால் சாபமே வரும்

    ReplyDelete
  2. இதில் வரும் செய்திகளை எவ்வாறு தரவிறக்கம் செய்வது ??

    ReplyDelete
  3. How To Download This Message?

    ReplyDelete
  4. கீழிருக்கும் M பட்டனை கிளிக்செய்து உங்களுக்கு ஈமெயில் செய்துகொள்ளலாம்.

    ReplyDelete
  5. IDHU PONRA MSG UNMAILE VIYAPADAYA SEITHU. ADU MATTUM ALLA INNUM ADHIGAMA GEBIKKA VAIKAVUM UDHAVUGIRADU MSG KU NANDRI

    ReplyDelete