Wednesday, June 15, 2011

அந்திக்கிறிஸ்து - சரியான பதமா?

Antichrist என்ற ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் அன்றிகிறைஸ்ட் அல்லது அந்திகிறிஸ்து என மொழி பெயர்த்திருக்கிறார்கள். ஆனால் அந்தி எனும் பதம் தமிழில் வேறு அர்த்தத்தை தருவதால் Antichrist-ஐ அந்திக்கிறிஸ்து என அழைப்பது சரியா என இந்த இமெயில் ஒரு சர்ச்சையை ஏற்ப்படுத்துகிறது. யோசித்துப்பார்த்தால் இந்த வாதம் சரியாகவே படுகிறது. இங்கே அந்த இமெயில்.

அந்திக்கிறிஸ்து எனும் பதம் வேதத்தில் வரும் நான்கு இடங்கள்:

I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

I யோவான் 2:22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

I யோவான் 4:3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

II யோவான் 1:7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment