Tuesday, June 07, 2011

அமெரிக்காவில் திறப்பின் வாசல் ஜெபம்

அமெரிக்காவிலிருந்து ஒரு கிறிஸ்தவ சகோதரர் வேதனையாக இச்செய்தியைக் கூறினார். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வரும் பெரும்பாலான ஊழியர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என தெரியாவிட்டாலும் அவர்களில் அநேகர் எல்லாரும் தவறாமல் செய்வது, அமெரிக்காவினையும் அந்நாட்டுமக்களையும் சபிப்பதும், இந்த நாடு சீக்கிரத்தில் பிச்சைக்காராக நாடாகிவிடும் எனவே இங்குள்ள இந்தியர்களெல்லாம் மீண்டும் இந்தியாவுக்கு வர தயாராக இருங்கள் என அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியா சீக்கிரத்தில் வல்லரசு நாடாகிவிடும் எனக் கூறி இந்தியாவை வானளாவ உயர்த்தி கூறுவதும் அமெரிக்காவை மட்டம் தட்டி தங்கள் செய்திகளில் பேசுவதுமாக இருக்கிறார்கள். இந்தியாவின் எழுப்புதலுக்காக அமெரிக்காவில் கூடி ஜெபிக்கும் இவர்கள் அமெரிக்காவுக்காக ஜெபிக்கும் போது மட்டும் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் போவது உண்டு. இவர்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும். அமெரிக்க மண்ணை மிதித்துக் கொண்டு இங்குள்ள உப்பை தின்றுவிட்டு,தங்கள் வாயை விரிவாய் திறந்து இந்நாட்டை சபிப்பது ஏன்? ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் என தானே இயேசு கிறிஸ்து சொன்னார்.பாத்திரமாயிருந்தால் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது என தானே இயேசு சொன்னார். பைபிளில் அமெரிக்கா பற்றிய தீர்க்கதரிசனம் எதுவும் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் இறுதிகாலத்தில் இந்நாடே இல்லாமல் போயிருக்கும் என யூகித்து அது அழிந்துவிடும் என முடிவெடுத்து இப்போதே இந்த ஊழியர்கள் அந்நாட்டின் மீது நியாயத்தீர்ப்பை கூறிக்கொண்டிருப்பது என்ன நியாயம்? ஆபிரகாம் ஆண்டவரிடம் போராடும்போது ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? எனத் தொடங்கி படிப்படியாக பத்து நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? என விடாமல் ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக எனச் சொல்லிச் சொல்லி போராடினானே? தேவனின் திட்டம் இன்னதுவென தெளிவாகத் தெரிந்திருந்தும் இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் “பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும் என வேண்டிக்கொள்ளவில்லையா?” என அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை எழுப்பினார்.பதிலற்று நின்றிருந்தோம்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்த திறப்பின் வாசல் ஜெபங்கள் அமெரிக்காவின் எழுப்புதலுக்காகவும் அதன் மனம் திரும்புதலுக்காகவும் கூட ஜெபிக்கும் என நம்புவோம்.

Thirappin vaasal jebam 2011 at Maryland Baltimore Washington DC USA July 21,22 and 23




மேலும் விவரங்களுக்கு.

http://indianprayerfellowship.com
Thirappin vasal jebam 2011 at Highland Lakes Camp North Spicewood Texas USA July 08,and 09

Thirapin vaasal jebam 2011 at Family Community Church San Jose Bay Area Sanfrancisco California USA July 14,15 and 16

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment