Tuesday, June 21, 2016


Friday, June 17, 2016

Happy Fathers Day!! My God is my Rock in whom I find protection. 2 Samuel:22:3 கர்த்தர் என் கன்மலை. II சாமுவேல் 22:3



Wednesday, June 15, 2016

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள உம்மை விட யாரும் இல்ல சொத்து என்று அள்ளிக் கொள்ள உம்மை விட ஏதும் இல்ல இயேசுவே இயேசுவே எல்லாம் இயேசுவே 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன் உம் வார்த்தையினால் நான் பெலனானேன் ... நான் பெலனானேன், நான் பெலனானேன் 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன் உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் ... நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன் உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் ... நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்


உலகில் முதன்முறையாக‌ தந்தி அனுப்பப்பட்டபோது அது சுமந்து சென்ற வாசகம் ஒரு வேதவசனமாகும். ஒற்றைக்கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சாமுவேல் மோர்ஸ் 1844ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி அன்று உலகின் முதல் தந்திச் செய்தியை அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் இருந்து பால்டிமோர் நகருக்கு வெற்றிகரமாக அனுப்பி ஒற்றைக்கம்பி தந்தி முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அவர் அனுப்பிய அந்த முதல் தந்தி வாசகம் புனித வேதாகமத்தின் எண்ணாகமம்:23:23 வசனத்தை கொண்டிருந்தது. அது நினைவாக மேரிலாண்ட் நெடுஞ்சாலையொன்றில் நிறுவப்பட்டுள்ள பலகையை நீங்கள் படத்தில் காணலாம். What was the first telegraph message? Sent by inventor Samuel F.B. Morse on May 24, 1844, over an experimental line from Washington, D.C., to Baltimore, the message said: "What hath God wrought?" Taken from the Bible, Numbers 23:23.


Tuesday, June 14, 2016

Jerusalem temple coming soon.. Church (Bride of Christ) going soon.. These two cannot coexist. Get ready for the rapture.


Tuesday, June 07, 2016


Thursday, June 02, 2016

இஸ்ரேலின் 70 சதவீத பகுதி பாலைவனம் தான். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இஸ்ரேல் கடும் வறட்சியை சந்தித்து வந்தது. ஆனால் தற்போது தண்ணீர் உபரியாக உள்ளது. எப்படி அது சாத்தியமாகியது. தேவனின் தீக்கதரிசன நிறைவேறுதல் அது. வேதவசனம் சொல்லுகிறது... "யாக்கோபு என்னும் பூச்சி, இஸ்ரவேலின் சிறுகூட்டம். தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்கி வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்திம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாருவிருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன். கர்த்தருடைய கரம் அதைச்செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள்" ஏசாயா:41