Thursday, June 11, 2009

தமஸ்குவின் பாரம்

இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஒரு அரபு நாடு சிரியா. இந்நாட்டின் தலைநகரம் டமாஸ்கஸ். இதை வேதாகமத் தமிழில் தமஸ்கு என காண்கிறோம். இந்நகரம் மிகப்பழமையான தொன்று தொட்டு தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரங்களில் ஒன்றாக திகழ்கின்றது. இந்நகரத்தை பற்றிய வருத்தமான தீர்க்கதரிசனம் ஒன்றை ஏசாயா 17-ம் அதிகாரத்தில் நாம் காணலாம்.

ஏசாயா:17:1.
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.

இந்த தீர்க்கதரிசனத்தின் பொருள் டமாஸ்கஸ் நகரமானது வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மக்கள் வசிக்கும் நகரமாக இராமல் முற்றிலும் அழிக்கப்பட்டு பாழான மண்மேடாகும் என்பதாகும். விக்கிப்பீடியாவோ இதை continuously inhabited நகரம் என்கின்றது. அதன் அர்த்தம் தொடர்ந்து மக்கள் வசித்துவரும் நகரம் என்பதாகும். அதாவது மேற்சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது இதுவரை நடைபெற்று தீரவில்லை என்பதையே அது குறிக்கின்றது. இதனாலேயே சிரியாவின் அரசியல் நிலவரம் மற்றும் யுத்த ஆயத்த நடவடிக்கைகளை இப்போது வேதாகம வல்லுனர்கள் தொடர்ந்து கூர்ந்து கவனித்து வந்து கொண்டிருக்கின்றார்கள்..

எசேக்கியேல் 38-ல் சொல்லப்படும் கோகு மாகோகு யுத்தத்தில் பங்கு பெரும் நாடுகளின் வரிசையில் கூட சிரியாவின் பெயர் வராதிருப்பதை கவனியுங்கள். எகிப்தின் பெயர் கூட அங்கு தவறுவது நமக்கு எதோ ஒரு ரகசியத்தை சொல்கின்றது.

ஏசாயா 17-ன் படி டமாஸ்கஸ் பாழான மண்மேடாகும்.இது எப்படி நடக்கும்? எதாவது பயங்கரமான பூமி அதிர்ச்சியினாலா அல்லது பகைநாடுகள் வீசும் அணுகுண்டாலா? நாம் அறியோம். எப்போது நடக்கும்? கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு முன்பா அல்லது கிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு பின்பா? அதையும் நாம் அறியோம். தேவன் அறிவார்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment