Saturday, November 19, 2022

அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்.

 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். ஆதியாகமம் 6:4உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா?

உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா? எரேமியா 3:16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உடன்படிக்கைப் பெட்டி அது இப்போது எங்கிருக்கிறது?வெளி 11:19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. கானான் தேசத்தைக் கொடுத்த தேவனாகிய கர்த்தர் நானே.

 உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. லேவியராகமம் 25:38


ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம்.

 

ஒரே பாஷை, ஒரேவிதமான பேச்சு, ஒரே கூட்டம் இந்த “ஒரே” எல்லாம் யெகோவா தேவனுக்கு பிடிக்காத விஷயம். மனிதர்கள் இப்படி ஒன்று கூடும் போதெல்லாம் உற்றுபார்க்க வந்துவிடுகிறார் இறைவன் (ஆதியாகமம் 11). ஆபத்து மக்களே. இதுவும் "புதிய உலக ஒழுங்கு - NWO New World Order"க்கு இட்டுசெல்லும் பாதையே.

ஐப்பிராத்தென்னும் நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற தூதர்.

 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐப்பிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். வெளி 9:14


"டிஜிட்டல் கரன்சி" வருகிறது.

 

கரன்சி ரூபாய் நோட்டுகள் போய் முழுக்க முழுக்க "டிஜிட்டல் கரன்சி" சீக்கிரத்தில் உலகமெங்கும் வருகிறது. இதனை "மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்" (CBDC) என்கிறார்கள். அரசுகளின் முழு கம்ப்யூட்டர் கட்டுபாட்டில் இந்த டிஜிட்டல் கரன்சி இருப்பதால் அது புழக்கத்துக்கு வரும் போது, மக்கள் தங்கள் டிஜிட்டல் பணத்தை செலவிடும் முழு சுதந்திரம் மக்களிடமிருந்து எளிதில் பறிக்கப்படலாம். உதாரணமாக எவ்வளவு பணம் எதற்கெல்லாம் செலவழிக்கலாம், யாராருக்கெல்லாம் நன்கொடை கொடுக்கலாம், தடுக்கலாம் என கட்டுபாடுகள் எளிதாக மக்கள் மீது போடலாம். இஷ்டத்துக்கும் செலவு பண்ணமுடியாதவாறு வரைமுறைகள் கொண்டுவரலாம். ஒரே சொடுக்கில் உங்கள் பணம் அனைத்தையும் பிடிங்கியும் விடலாம். சர்வாதிகாரி ஒருவனிடம் இந்நிலையில் உலகம் சிக்கினால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வெளி 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

Sunday, November 13, 2022

பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.

 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள். சங்கீதம் 139:14நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

 "நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள்" (ஆதியாகமம் 9:7) என்பதே இந்த பூமியை படைத்தவரின் விருப்பம். பூமியின் மக்கள் தொகையை பல்வேறு விதங்களில் குறைக்க திட்டமிடும் "புதிய உலக ஒழுங்கு -New World Order" எல்லாம் இறைவனின் விருப்பத்துக்கு எதிரானவையே. New world order likes to "Maintain humanity under 500,000,000 in perpetual balance with nature.".