Friday, September 04, 2009

அராபிய நாடுகளும் இஸ்ரேலும்

கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொடுக்கமாட்டார் - இமாம் அலி இப்ன் அபி தாலெப்.

அரேபிய கூட்டமைப்பு நாடுகள் மொத்தம் 22 நாடுகள். இதில் சவுதி அரேபியா, மொராக்கோ, குவைத், ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரின், கத்தார், ஓமான் ஆகியவற்றில் பரம்பரை மன்னராட்சி நடைபெற்று வருகிறது, லிபியா, சிரியா, சூடான், டுனீசியா, அல்ஜீரியா, சொமாலியா, சவுதிஅரேபியா, லிபியாவில் எப்போதும் கெடுபிடி ஆட்சியும் மக்களின் சுதந்திரம் ஒடுக்கப்படுதலும் அதிகம். அராபிய ஆட்சியாளர்களின் கீழ் வாழும் 330 மில்லியன் இஸ்லாமிய சகோதர சகோதரிகளில் வெறும் 486,530 பேர் அதாவது வெறும் 0.15 சதவீதம் பேருக்கு தான் ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இஸ்ரேலின் மக்கள்தொகை 7,411,000 இதில் 76 சதவீதம் பேர் யூதர்கள் 23 சதவீத பேர் யூதர்கள் அல்லாதவர்கள்.(பெரும்பாலும் அராபியர்கள்). இஸ்ரேல் விஞ்ஞான ஆராய்ச்சிக்கென ஆண்டுதோறும் நபருக்கு $110 செலவிடுகிறது. ஆனால் அரேபிய உலகம் செலவிடுவதோ வெறும் இரண்டு டாலர் தான். இதனால் உண்டான அறிவியல் அறிவு இஸ்ரேலியர்களை உற்பத்தியில் வருடம் 5.2 சதவீதம் வளரவிடுகிறது. ஆனால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியிருந்த அராபிய உலகம் 1980 மற்றும் 90களில் பெரும்பாலும் உற்பத்தி வளர்ச்சி மைனசிலேயே இருந்தது.

உண்மைகளை நாம் மறுக்க முடியாது. உலகின் டாப் 400 பல்கலைக் கழகங்களில் ஆறு தலை சிறந்த பல்கலைக்கழகங்களை இஸ்ரேல் நாடு கொண்டுள்ளது. இதில் எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகம் டாப் 100-ல் அதாவது உலகின் சிறந்த முதல் நூறு பல்கலைக் கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. Technion Israel Institute of Technology, Tel Aviv University மற்றும் Weizmann Institute of Science டாப்-200-றிலும் Bar Ilan University மற்றும் Ben Gurion University டாப்-300-றிலும் வருகின்றது. (இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களான பெங்களூரின் Indian Institute of Science-ம் கரக்பூரின் IIT-யும் மட்டும் டாப்-300-ல் வருவது குறிப்பிடத்தக்கது.) உலகின் டாப்-400 பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகம் கூட அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலிருந்து இல்லை. இரு அராபிய பெண்மணிகளில் ஒருவருக்கு எழுத அல்லது படிக்க தெரியாது. (நினைவிருக்கட்டும்,”கடவுள் ஒரு மனிதனை கேவலப்படுத்த நினைத்தால் அவனுக்கு அவர் ஞானத்தை கொடுக்கமாட்டார்”)

இஸ்ரேலிய கல்விநிறுவனங்கள் தரமான அறிவை தனது இளம்வயதினருக்கு அளிக்க அந்த இஸ்ரேலிய சமுதாயமோ அந்த அறிவை சரியான வழியில் பயன்படுத்தி அதை உற்பத்தி திறனுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் அரேபிய கூட்டமைப்பு நாடுகளிலுள்ள சமூக, மத, கலாச்சாரரீதியான தடைகள் ஜனங்களை ஒடுக்குவதால் அவர்களால் எழுந்து பிரகாசிக்க முடிவதில்லை.

அராபிய உலக்தை விட்டு கல்வித்திறமைகள் எப்படியெல்லாம் பறந்து செல்கின்றனவென பாருங்கள். 1998க்கும் 2000க்கும் இடையே 15,000 அராபிய மருத்துவர்கள் அராபிய உலகிலிருந்து இடம்பெயர்ந்து பிற மேற்கத்திய நாடுகளுக்கு பறந்து சென்றுவிட்டனர். உலக வங்கி கணக்குப் படி ஏறத்தாழ 300,000 பட்டப்படிப்பை முடித்த முதல் அராபிய பல்கலைக்கழக மாணவர்களில் 25 சதவீதம் பேர் அப்படியே வெளி உலகுக்கு பறந்துவிட்டனர். ஏறத்தாழ 23 சத அராபிய எஞ்சினியர்கள், 50 சத அரேபிய மருத்துவர்கள், 15 சத அரேபிய அறிவியல் பட்டதாரிகள் பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்துவிட்டனர்.

இஸ்ரேலோ மறுபுறம் 10,000 இஸ்ரேலியர்களுக்கு 145 எஞ்சினியர்கள் அல்லது விஞ்ஞானிகள் என வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு எத்தனை நபருக்கு எத்தனை அறிவியல் அறிஞர்கள் என்ற வீதத்தில் அதிகம் கொண்டுள்ளது. பேட்டண்டுகளிலும் இது டாப்-7 நாடுகளில் ஒன்றாக உள்ளது.

டேவா மருந்துகள் தொழிற்சாலை இஸ்ரேலின் மிகப்பெரிய பார்மசி கம்பனி.உலகின் அதிக அளவில் ஆண்டிபயாடிக் தயாரிப்பதும் இதுவேயாகும்.

உண்மைகளை மறுப்பது கடினம். பெரும்பாலான அரேபிய கூட்டமைப்பு நாடுகளில் மகளிருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகள் மிகவும் குறைவு இவை விவாகம், விவாகரத்து, உடையலங்காரம், பிற சட்ட திட்ட உரிமைகள், கல்வி ஆகியவற்றில் அடங்கும். இஸ்ரேலில் அப்படி இல்லை.

ஆறு மில்லியன் இஸ்ரேலியர்கள் வருடந்தோறும் 12 மில்லியன் புத்தகங்களை வாங்குவதால் இவர்கள் உலகின் அதிக புத்தகங்களை வாங்கும் நாடுகளில் ஒன்றாகிறார்கள். தலைக்கு அதிக அளவில் பட்டதாரி படிப்புகளை கொண்டோர் இஸ்ரேலியர்கள். 10,000 இஸ்ரேலியர்களுக்கு 109 என உலகில் அதிக அளவில் விஞ்ஞான ஆய்வுக்கட்டுரைகள் இங்கு எழுதப்படுகின்றன.

விளைவுகளை நம் எல்லாராலும் கண்கூடாகவும் பார்க்க முடிகிறது. சராசரி தலை வருமானம் இஸ்ரேலில் $25,000 என இருக்க அது அராபிய உலகத்திலோ $5,000.

-பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்த பத்திரிகையாளர் பரூக் சலீம் ”தி நியூஸ்” என்ற பத்திரிகைக்காக எழுதிய பத்தியை சார்ந்து எழுதப்பட்டது.

கர்த்தருக்கு பயப்படுதல் ஞானத்தின் ஆரம்பம். நீதிமொழிகள்:9:10

Arabs vs Israel
By Farrukh Saleem
http://www.thenews.com.pk/daily_detail.asp?id=35880

Imam Ali Ibn Abi Taleb: "If God were to humiliate a human being He would deny him knowledge"

The League of Arab States has 22 members. Of the 22, Saudi Arabia, Morocco, Kuwait, UAE, Bahrain, Qatar and Oman are 'traditional monarchies'. Of the 22, Libya, Syria, Sudan, Tunisia, Algeria and Somalia are 'Authoritarian Regimes' (Source: www.freedomhouse.org). Of the 22, Saudi Arabia, Libya, Iraq, Syria, Sudan, Morocco and Somalia are among the 'world's most repressive regimes' (Source: A special report to the 59th session of the UN Commission on Human Rights). Of the 330 million Muslim men, women and children living under Arab rulers a mere 486,530 live in a democracy (0.15 per cent of the total).

A mere two hundred and fifty miles from the 'League of Dictators' HQ in Cairo is the only 'parliamentary democracy' in the region; universal suffrage, multi-party, multi-candidate, competitive elections. Israel's 6,352,117 residents are 76 per cent Jewish and 23 per cent non-Jewish (mostly Arab).Israel spends $110 on scientific research per year per person while the same figure for the Arab world is $2. Knowledge makes Israel grow by 5.2 per cent a year while "rates of productivity (the average production of one worker) in Arab countries were negative to a large and increasing extent in oil-producing countries during the 1980s and 90s (World Bank; Arab Development Report)."

Facts cannot be denied: The state of Israel now has six universities ranked as among the best on the face of the planet. Hebrew University Jerusalem is in the top-100. Technion Israel Institute of Technology, Tel Aviv University and Weizmann Institute of Science are in the top-200. Bar Ilan University and Ben Gurion University are in the top-300. The Arab League does not have a single university in the top-400 (http://ed.sjtu.edu.cn/ranking.htm). One in two Arab women can neither read nor write (remember, "If God were to humiliate a human being He would deny him/her knowledge").

Israel's universities are producing knowledge. Israeli society is applying that knowledge plus diffusing knowledge produced by others. On the other hand, within the Arab League, repressive regimes have erected religious, social and cultural barriers to the production as well as diffusion of knowledge.

Look at how knowledge is abandoning the Arab world: Between 1998 and 2000 more than 15,000 Arab physicians migrated. According to the World Bank, "roughly 25 per cent of 300,000 first degree graduates from Arab universities emigrated. Roughly 23 per cent of Arab engineers, 50 per cent of Arab doctors and 15 per cent of Arab BSc holders had emigrated."

Israel, on the other hand, has more engineers and scientists per capita than any other country (for every 10,000 Israelis there are 145 engineers or scientists). Israel ranks among the top-7 countries worldwide for patents per capita.

Teva Pharmaceutical Industries Ltd., Israel's pharmaceutical giant, is the world's largest producer of antibiotics (Teva developed Copaxone, a unique immunomodulator therapy for the treatment of multiple sclerosis, the only non-interferon agent available).

Facts are hard to deny: Most members of the Arab League grant Muslim women fewer rights -- with regards to marriage, divorce, dress code, civil rights, legal status and education. Israel does not. Spain translates more books in a year than has the Arab world in the past thousand years (since the reign of Caliph Mamoun; Abbasid, caliph 813-833).

Six million Israelis buy 12 million books every year making them one of the highest consumers of books in the world. Israel has the highest number of university degrees per capita in the world; the Arab world has the lowest. Israel produces more scientific papers per capita than any other country (109 per 10,000 Israelis); the Arab world -- next to nothing.

Results are for everyone to see: The average per capita income in Israel is $25,000 while the average income within the League of Arab States is $5,000.

The writer is an Islamabad-based freelance columnist. Email: farrukh15@hotmail.com

http://www.omanforum.com/forums/showthread.php?t=19247

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment