Tuesday, April 26, 2011

பைபிளில் வரும் சைரஸ் மகாராஜா

இப்போது வேண்டுமானால் ஈரானும் இஸ்ரேல் தேசமும் எதிரும் புதிரும், எலியும் பூனையுமாக இருக்கலாம். ஆனால் கிமு 558-ல் பெர்சியா எனப்பட்ட இன்றைய ஈரானை ஆண்ட பேரரசரான சைரஸ்(கி.மு.590-529) யூதர்களுடன் மிகவும் பட்சமாக இருந்தார்.மேதிய பெர்சிய ராஜியம் எனப்படும் பாரசீகப் பேரரசை நிறுவிய இவர் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் யூத தேவாலயத்தை மீண்டும் எடுத்து கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு யூத வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.

சைரசின் ஆட்சிக்காலத்தில் அவர் பல வெற்றிவாகைகளை சூடிக்கொண்டிருந்தபோது கி.மு. 539 ஆம் ஆண்டில் பாபிலோன் அரசு அவர் போரிடாமலேயே சைரஸ் பேரரசரிடம் சரணடைந்தது. பாபிலோனியப் பேரரசில் சிரியாவும், பாலஸ்தீனமும் இணைந்திருந்ததால், அந்த மண்டலங்களும் சைரசின் ஆளுகையின் கீழ் வந்தன.கி.மு. 540 ஆம் ஆண்டில் சைரசின் பாரசீகப் பேரரசு, இந்தியாவில் சிந்து ஆறு முதல் மேற்கே மத்தியத் தரைக்கடல் வரையிலும் பரவியிருந்தது.உலகின் மிகப் பெரிய பேரரசின் பேரரசராக விளங்கிய சைரஸ் வேறு பல வெற்றியாளர்கள் கையாண்ட அட்டூழியங்களையும், கொடூரங்களையும் அவர் சிறிதும் கையாளவில்லை. எடுத்துக்காட்டாக, பாபிலோனியர்களும், அவர்களை விட மோசமாக அசீரியர்களும், பல்லாயிரக்கணக்கில் மக்களைப் படுகொலை செய்தார்கள். மக்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என அஞ்சி, மக்கள் அனைவரையுமே நாடு கடத்தியதும் உண்டு. உதாரணமாக, பாபிலோனியர்கள் 586 ஆம் ஆண்டில் யூதேயாவை வென்றபோது, அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோரைப் பாபிலோனுககு நாடு கடத்தினார்கள். அதற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனை சைரஸ் வெற்றி கண்ட போது யூதர்கள் தங்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதித்தார். சைரஸ் மட்டும் இல்லாது போயிருப்பின், கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் யூதர்கள் ஒரு தனிக் குழுவாக மாண்டு போயிருப்பார்கள். அவர்களின் உயிரைக் காப்பாற்ற சைரஸ் எடுத்த முடிவில் அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம். எனினும், அவர் காலத்திலிருந்த அரசர்கள் அனைவரிலும் மிகவும் மனிதாபிமானம் வாய்ந்தவராக விளங்கியவர் சைரஸ் என்பதை மறுப்பதற்கில்லை. இன்றுங்கூட, ஈரானில் சைரஸ் பாரசீக அரசை நிறுவிய ஒரு மகாராஜாவாக போற்றப்படுகிறார்.மகா சைரசின் ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் ஒரு பெருந் திருப்புமுனை எனக் கருதப்படுகிறது.

பதினோராம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் சைரஸ் பற்றிய குறிப்பு (Cyrus II of Persia commonly known as Cyrus the Great)


இந்த சைரஸ் மகாராஜாவின் பெயருடன் கூடிய வசனங்கள் குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

ஏசாயா:45:1,13 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசு (சைரஸ்)..நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

Isaiah:45:13 I will raise up Cyrus in my righteousness: I will make all his ways straight. He will rebuild my city and set my exiles free, but not for a price or reward, says the LORD Almighty.”

தானியேல்:10:1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ((சைரஸ்) அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது;

Daniel 10:1 In the third year of Cyrus king of Persia, a revelation was given to Daniel (who was called Belteshazzar).

எஸ்றா:1:1,2 கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (சைரஸ்) ஆவியை ஏவினதினாலே அவன்:பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Ezra 1:2 “This is what Cyrus king of Persia says: “‘The LORD, the God of heaven, has given me all the kingdoms of the earth and he has appointed me to build a temple for him at Jerusalem in Judah.

II நாளாகமம்:36:22 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (சைரஸ்)முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (சைரஸ்) ஆவியை ஏவினதினாலே, அவன்:பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

2 Chronicles 36:22 In the first year of Cyrus king of Persia, in order to fulfill the word of the LORD spoken by Jeremiah, the LORD moved the heart of Cyrus king of Persia to make
a proclamation throughout his realm and also to put it in writing:

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment