பெர்சிய (பாரசீக பேரரசு)
டேரியசுக்கு பின் அவரது மகன் ஆகாசரஸ் (கிரேக்க மொழியில் செர்க்ஸஸ்) கிமு 486 முதல் 465 வரை இருபத்தியொரு ஆண்டுகள் பாரசீகத்தை அரசாண்டார். இவரை குறித்து பைபிளின் எஸ்தர் புத்தகம் முதலாம் அதிகாரம் முதல் வசனம் ”இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு” என்கிறது. இவர் காலத்தில் தான் புகழ்பெற்ற தெர்மோபைலி சண்டை நடைபெற்றது.இப்போரில் ஸெர்க்ஸஸ் சுமார் 50 லட்சம் வீரர்களுடன் ஏதென்ஸை கடல் மார்க்கமாக சுற்றி வளைத்தார். ஆனால் இப்போரில் கிரேக்கமே வெற்றிபெற்றது.இதற்கு பின் நடந்த சில யூதர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.பதினோராம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் செர்க்சஸ் பற்றிய குறிப்பு
இந்த செர்க்ஸஸ் (Xerxes - Ahasurerus) மகாராஜாவின் பெயருடன் கூடிய வசனங்கள் குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.
எஸ்தர்:1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு (செர்க்ஸஸ்)
Esther:1:1 These events happened in the days of King Xerxes, who reigned over 127 provinces stretching from India to Ethiopia.
0 comments:
Post a Comment