Wednesday, April 13, 2011

இரு ஊழியர்களின் மேற்கோள்கள்

"இந்தியாவில்தான் ஊடகங்களில் பக்திப் பாடல்கள் காலையும் இரவும் ஒலிக்கிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியதுகூட இந்திய மக்களின் இறைபக்திதான் - அது கிறிஸ்துவாக இருக்கட்டும். கிருஷ்ணனாக இருக்கட்டும். இந்த இறை பக்தி, பயபக்திதான் நம்மை உலக நாடுகளுக்கான கருணை தரும் நாடாக மாற்றும். அனைத்துக்குமான அரிய மருந்து பிரார்த்தனைதான்.”
-கல்கி இதழுக்கு சகோதரன் பால் தினகரன் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.
http://tamilchristians.com

இவரது கூற்றுப் படி பார்த்தால் இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கிலும் காலையில் சுப்ரபாதத்தையும் மாலையில் பஜனை, கீர்த்தனை, சாமியாட்ட பாடல்களையும் வானொலி தொலைகாட்சிகளில் ஒலிபரப்பினாலே பொருளாதார முன்னேற்றம் எல்லா நாடுகளிலும் வந்துவிடும் என்கிறார். என்ன அருமையான சிந்தனை. இதைதான் வேதம் நமக்கு போதிக்கின்றதா?

"ஒரு கல்லை தெய்வமாக பாவித்து அலங்கரித்து யார் வேண்டுமானாலும் தரிசிக்கலாம்; நீ கொலைக்காரனோ கொள்ளைக்காரனோ லஞ்சம் வாங்குபவனோ வேசிக்கள்ளனோ யார் வேண்டுமானாலும் ஒரு சிலையையோ, தெய்வம் எனப்படும் ஒரு ஓவியத்தையோ அல்லது அதன் சிற்பத்தையோ எளிதாக தரிசிக்கலாம்; ஆனால் இந்த உலகத்தைப் படைத்த தெய்வத்தை ஒரு மனுஷன் தரிசிக்கவேண்டுமானால் பரிசுத்தம் வேண்டும்; பாவத்துடனோ பாவத் தன்மையுடனோ பரிசுத்தரான அவரை தரிசிக்கவே முடியாது"
-சகோதரன்.மோகன் சி லாசரஸ் அவர்கள் 07.03.2010 தினம் காலையில் "விஜய்" டிவியில்.

யோவான் 14:6 இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

II கொரிந்தியர் 6:15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

யாத்திராகமம் 20:7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

யாத்திராகமம் 15:11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

சங்கீதம் 96:5 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்

யாத்திராகமம் 23:13 அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.

யாத்திராகமம் 23:32 அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக.

மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்

மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment