Monday, April 25, 2011

பைபிளில் வரும் அகஸ்டஸ் சீசர்

ஓர் ஆண்டிற்கு உரிய மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஆகஸ்ட் எனப்படும் எட்டாவது மாதம் அகஸ்டஸ் சீசர் எனப்படும் மாபெரும் ரோம பேரரசரின் பெயரில் அமைந்ததாகும்.பண்டைய ரோம பேரரசை நிறுவியதில் இந்த அகஸ்டஸ் சீசருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

கி.மு.63 இல் பிறந்து, கி.பி.14 இல் மறைந்த அகஸ்டஸ், 77 ஆண்டுகள் வாழ்ந்தார். வாழ்நாளில், கி.மு.29 முதல் கி.பி.14 வரை, 43 ஆண்டுகள் ரோம் பேரரசைத் திறம்பட ஆட்சி செய்து புகழ் பெற்றார்.இவரது பேரரசின் எல்லை ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கவாஷியா ஆகிய நாடுகளையும் பால்க்கன் நாடுகளில் பெரும்பகுதிகள், கால் (இன்றைய பிரான்ஸ்), பன்னோனியா, தால்மேசியா (இன்றைய ஹங்கேரி), யூக்கோஸ்லேவியாவின் பகுதிகள், எகிப்து வரை விரிந்திருந்தது. வட எல்லை ரைன்-டான்யூப் கோடு வரை நீடித்திருந்தது.


இவரது ஆட்சிக்காலம் ரோமானிய இலக்கியத்திற்கும், கட்டடக்கலைக்கும் பொற்காலம் ஆகும். ரோமாபுரியைச் செங்கற்களால் பார்த்தேன், அங்கு பளிங்குக் கற்களை விட்டுச் சென்றேன் என்று பெருமிதத்துடன் இவர் கூறிக்கொண்டார். இவருக்கு பின்னர், காலிகுலா, நீரோ போன்ற அரசர்கள் ரோமை ஆண்டனர்.

பல்வேறு உள்நாட்டுப் போர்கள் முடிவுக்கு வந்து, அகஸ்டஸ் ஆட்சியுடன் தொடங்கிய உள்நாட்டு அமைதி இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அமைதியும், வளச்செழிப்பும் மிகுந்த இந்த 200 ஆண்டுக் காலத்தில், அகஸ்டஸ்,மற்றும் மற்ற ரோமானியத் தலைவர்கள் வெற்றி கொண்ட நாடுகளில் ரோமானியப் பண்பாடு ஆழவேரூன்றி ஆல்போல் பரந்து விரிந்தது. பண்டைக் காலப் பேரரசுகள் அனைத்திலும் மிகவும் புகழ் வாய்ந்தது ரோமானியப் பேரரசேயாகும். பண்டைய நாகரிகத்தின் உச்ச நிலையாக ரோமானியப் பேரரசு விளங்கியது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள். கிரேக்கர்கள் போன்ற பண்டைய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்ற வடிகாலாகவும் ரோமானியப் பேரரசு திகழ்ந்தது.

ரோம் பேரரசின் கிழக்கு எல்லையில் இருந்த அதன் மாநிலம் பாலஸ்தீனம். அகஸ்டஸ் ஆண்ட காலத்தில், அங்கு பெத்லகாம் என்ற இடத்தில் உலகம் மறவாத ஒரு பெருமகன் பிறந்தார்; அவர் தாம் யேசு கிறிஸ்து!

அகஸ்டர் சீசரின் பெயருடன் கூடிய ஒரு வசனம் குறிப்பு பைபிளின் புதிய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

லூக்கா:2:1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் (அகஸ்டஸ் சீசரால்) கட்டளை பிறந்தது.

Luke:2:1. And it came to pass in those days that a decree went out from Caesar Augustus that all the world should be registered.

1 comment: