Lyrics
There is power, power, wonder working power
In the blood of the Lamb;
There is power, power, wonder working power
In the precious blood of the Lamb.
Would you do service for Jesus your King?
There's power in the blood, power in the blood;
Would you live daily His praises to sing?
There's wonderful power in the blood.
There is power, power, wonder working power
In the blood of the Lamb;
There is power, power, wonder working power
In the precious blood of the Lamb.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம்
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் 1யோவா.1:8உலகத்தில் வாழுகிற நாம், உயிர் உள்ளவர்களாக வாழ வேண்டுமானால் சரீரத்தில் ரத்தம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது (வெளி.17:11) என்று பார்க்கிறோம். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டால் அவன் மரித்தவன் எனப்படுவான். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை உயிர் உள்ளதாக காணப்பட வேண்டும் என்று நமது அருமை இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக் கொண்டார். அந்த இரத்தத்தினாலே நம்முடைய பாவங்கள் கழுவப்பட்டு, ஆவிக்குரிய வாழ்வில் உயிர்பெற்று காணப்படுகிறோம்.
ஆவிக்குரிய வாழ்வில் மரித்தவன் கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால கழுவப்பட்டால் மட்டுமே மீட்கப்பட்டு, ஆவிக்குரிய வாழ்வில் உயிரோடு காணப்பட முடியும். இரத்தஞ் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை (எபி.9:22) முன்னே தூரமாயிருந்த நாம் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே தேவனுக்கு சமீபமாயிருக்கிறோம். இரத்தம் தேவைப்படுகிறவர்கள், இரத்த வங்கிகளில் இருந்து தங்களுக்குரிய இரத்தத்தை பெற்று, உயிரைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். ஆனால் பாவத்தில் மரித்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு ஆவிக்குரிய வாழ்வில் உயிர்பெற்று வாழ்கிறார்கள். எத்தனையோ பரிசுத்தவான்களின் இரத்தம் பூமியில் சிந்தப்பட்டது என்றாலும், நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டதால்தான் மனிதன் பாவமும், சாபமும், அக்கிரமும், நோயும் நீங்கி சுகம் பெற்று வாழுகிறான்.
1.இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நித்திய ஜீவனைக் கொடுக்கிறது
நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாகவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவா.10:10மனிதனுடைய இரத்தத்தில் ஜீவன் உண்டு. ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் நித்திய ஜீவன் உண்டு. மனிதனுடைய இரத்தம் அசுத்தம் நிறைந்ததும், பாவம் உள்ளதுமானது. இயேசு கிறிஸ்துவின் இரத்தமோ பரிசுத்தமானது, பாவமில்லாதது. அந்த பாவமில்லாத பரிசுத்த இரத்தத்தால் பாவம் செய்த நாம் மீட்கப்படுகிறோம்.
ஆதாமை தேவன் உண்டாக்கியபோது அவனுடைய நாசியிலே ஜீவ சுவாசத்தை ஊதினார். அவன் ஜீவாத்மாவானான். எனவே அவனது ஜீவன் தேவனிடத்திரிருந்து வந்தது. ஆதாம் தேவனுடைய கட்டளையை என்றைக்கு மீறினானோ, அன்றைக்கே அவனது இரத்தம் பாவமுள்ளதாய், அசுத்தம் நிறைந்ததாக காணப்பட்டது. தேவனுக்கு கீழ்ப்படிய மறுத்ததற்கு முன்பு ஆதாமின் இரத்தம் பரிசுத்தம் நிறைந்ததாக, பாவமற்றதாகத்தான் காணப்பட்டது. பாவம் செய்த போதோ, அவனுடைய இரத்தமும் பாவம் நிறைந்ததாக காணப்பட்டது. ஆதாமுக்கு பிறந்த பிள்ளைகளின் மூலமாக பலுகிப் பெருகின, மனுக்குலமும் பாவத்தையே உடையதாக காணப்பட்டது. பாவத்தில் பிறக்கிற மனுக்குலத்தை மீட்க இயேசு கிறிஸ்து தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்த வேண்டியது அவசியமாகக் காணப்பட்டது.
இரத்தம் சிந்துதரில்லாமல் பாவ மன்னிப்பு உண்டாவதில்லை (எபி.9:22) என்ற வேத வசனத்தின்படி இயேசு கிறிஸ்து தமது இரத்தத்தை சிந்தினார். எந்த மனுஷனும் பரிசுத்தன் அல்ல. மனிதனாய் பிறந்த இயேசு கிறிஸ்து மாத்திரமே பாவமில்லாதவரும், பாவம் அறியாதவருமாய் வாழ்ந்ததால் அவருடைய இரத்தம் மாத்திரமே, மனுக்குலத்தை மன்னிக்க, இரட்சிக்க வல்லமையுள்ளதாக காணப்பட்டது.
நாம் அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பெற்றுள்ளோம் (1 பேது.1:18,19) வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய (இயேசு கிறிஸ்துவுடைய) சொந்த இரத்தத்தினாலும், ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து நித்திய மீட்பை உண்டுபண்ணினார் (எபி.9:12) என்று வாசிக்கிறோம்.
(குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாகியிருக்கிறது (கொலோ.1:14) தேவனுடைய இரத்தத்தாலே நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும் போது, அவருடைய ஜீவன் நமக்குள் உண்டாகி, நாம் நித்திய ஜீவனை உடையவர்களாக காணப்படுகிறோம். மனுக்குலத்திற்கு தேவன் அளிக்கும் உன்னத ஆசீர்வாதம் இதுவே. தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ.3:16)
உலகத்துக்கு நித்திய ஜீவனைக் குறித்து அக்கரையே இல்லை. இயேசு நித்திய ஜீவனை கொடுக்கும்படி உலகத்திற்கு வந்தார். ஜீவனை கொடுக்க வந்த தேவனுக்கு உலகம் மரணத்தைக் கொடுத்தது. அந்த மரணத்தினால் நித்திய ஜீவன் உண்டு என்பதை உலகம் அறியவில்லை என்றாலும், தேவனை விசுவாசித்து அவருடைய இரத்தத்தால் மீட்கப்பட்டவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. சரீரபிரகாரமான மரணம் உலகத்தில் உண்டானாலும், அழியாத நித்திய ஜீவன் பரலோகத்தில் உண்டு.
என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று இயேசு சொன்னபோது, யூதர்கள் தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணினார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி ‘நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும்இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தை புசித்து என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன், என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது. என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தை புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக் கிறான். நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக் கிறது போலவும் என்னை புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திரிருந்திறங்கின அப்பம் இதுவே, இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே, இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார் (யோ.6:53-58)
இயேசு கிறிஸ்துவின் மாமிசத்தை புசித்து, அவர் இரத்தத்தை பானம் பண்ணுகிறவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு. நாம் நினைவு கூரும்படியாக அப்பத்தையும், திராட்ச ரசத்தையும் பானம் பண்ணுகிறோம். இப்படி நாம் இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணங்களை நினைவுகூர்ந்து செயல்படும்போது, தேவனாகிய கர்த்தர் வரும்போது மரித்தவர்களாக காணப்பட்டால் கர்த்தர் எழுப்புவார். உயிரோடு காணப்பட்டால், அவரோடு எடுத்துக் கொள்ளப்பட்டு, நித்திய ஜீவனை பெற்று காணப்படுவோம்.
2.இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சமாதானத்தையும், ஒப்புரவாக்குதலையும் செய்யும் வல்லமையுள்ளது
அவர் சிலுவையிலே சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும், அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று கொலோ.1:20அக்காலத்தில் நாம் கிறிஸ்துவை சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர் களுமாயிருந்தீர்களென்று நினைத்துக் கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். தேவனுக்கு நாம் பகைஞர்களாய் இருந்தோம். இயேசு கல்வாரி சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே நமது பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டதால், நாம் தேவனுடன் ஒப்புரவாகி இருக்கிறோம்.
புறஜாதிகள் என்னப்பட்ட நாம் தேவனுடைய சபைக்கு புறம்பாக இருந்து வந்தோம். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே நாம் பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியம் பெற்றோம். இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் பரலோகத்துக்குரியவர்களாக மாற்றப்பட்டோம். ஆகையால் நாம் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும், தேவனுடைய வீட்டாருமாக்குவதும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே.
3.இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் பிதாவிடம் சேரும் தைரியம் உண்டாகிறது
ஆகையால் சகோதரரே நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின் வழியாய் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாக்குகிறது (எபி.10:19-20)இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை அவருடைய பிள்ளைகளாக மாற்றி இருப்பதால், பிதாவிடம் தைரியமாய் சேரும் சிலாக்கியம் பெற்று இருக்கிறோம். நாம் பாவம் செய்து தேவ மகிமையற்று காணப்பட்ட போது கல்வாரியில் இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தாலே மீட்கப்பட்டு இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து வாழும் பாக்கியத்தை பெற்று காணப்படுகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சத்தானை ஜெயிக்கவும் முடியும். பாவம் நிறைந்த உலகத்தில் இந்த இரத்தத்தினால் உயிர்பெற்றுவாழ முடியும். கள்ளனை தேவனுடைய பிள்ளையாக மாற்றியதும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. பாவிகளுக்காய் பரிந்து பெசுவதும் இந்த இரத்தமே. பரிசுத்தவான்களை, பரிசுத்தமாக்குவதும் இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. நூற்றுக்கு அதிபதி தேவனை மகிமைப்படுத்த வைத்தது இயேசு கிறிஸ்துவின் இரத்தமே. பாவிகளை மனந்திரும்ப செய்வதும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம். இந்த இரத்தத்தினால் தேவனிடம் பிரவேசிப்பதற்கு தைரியம் பெற்று காணப்படுகிறோம்.
4.இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சாத்தானை ஜெயிக்கும்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள் வெளி.12:11இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் சாத்தானை ஜெயிக்கலாம். ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை விசுவாசத்தோடு அறிக்கை செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வல்லமை நிறைந்தது. அதினாலே சாத்தானை ஜெயிக்க முடியும் என்று விசுவாசிக்க வேண்டும். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும். இரட்சிப்பு உண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும் (ரோ.10:10) என்ற வசனத்தின்படி, நாம் நமது வாயிரிருந்து இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என்று சொல்ரி அறிக்கை செய்து சாத்தானை முறிக்க வேண்டும். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை மேற்கொள்ளலாம், ஜெயிக்கலாம். நாம் இயேசுவின் இரத்தத்தின் மேல் விசுவாசம் உள்ளவர்களாய் இயேசுவின் இரத்தத்தை அனுதினமும் நம் வாயினாலே அறிக்கை செய்து, நமது சகல எல்லைகளிலும், நம் சரீரங்களிலும் பூச வேண்டும். நாம் எண்ணெயை ஒரு போதகரிடம் கொண்டு ஜெபிக்க கொடுக்கும்போது அது ஒரு சாதாரண எண்ணெய்தான். ஆனால் அந்த போதகர் ஜெபித்தபோது அது இயேசு கிறிஸ்துவின் இரத்தமாக மாறிவிடும் என்பதை நாம் விசுவாசிக்கிறோம். அந்தஇயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சத்தானை ஜெயிக்கிறோம், சரீரத்தில் சுகம் பெறுகிறோம்.
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அற்புதமானது, என்பதை நாம் விசுவாசித்து கிரியை நடப்பிக்கும்போது, நாம் எடுக்கும் எல்லா காரியங்களிலும் சாத்தானை மடங்கடித்து வெற்றி பெற்றுக்கொள்ளுகிறோம்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே இயேசு கிறிஸ்து வின் இரத்தத்தை உங்கள் வாயிலே விசுவாசத்தோடு தைரியமாய் உச்சரித்து, உங்கள் வீடு, கணவன், மனைவி, பிள்ளைகள், வாகனங்கள் அனைத்தின் மேலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும். எல்லாவற்றையும் இயேசு கிறிஸ்துவின் இரத்த கோட்டைக்குள்ளாக ஒப்புக்கொடுத்து ஜெபிக்க வேண்டும். நீங்கள் பயப்படும்போது கூட விசுவாசத் தோடு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் என்று சொல்ரி ஜெபிக்கலாம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பூசப்பட்ட இடத்திற்கு சாத்தான் வரவே முடியாது. இரத்தக் கோட்டைக்குள்ளே நாம் இருப்போமானால், சாத்தானும் வர முடியாது. எந்த தீங்கும் நேரிடவும் செய்யாது.
5.இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசட்டை செய்தவர்கள்
குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான் (மத்.27:4)யூதாஸ் இயேசு கிறிஸ்துவின் சீடன். அவன் இயேசு கிறிஸ்துவால் ஜீவன்பெற்று உலகத்தில் வாழ்ந்தான். அவனுக்குள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைக்கவில்லை. முடிவு பரியந்தம் இயேசுவோடு நிலைத்து நிற்க முடியவில்லை. காரணம் அவனுக்குள் காணப்பட்ட பாவம். பாவம் அவனை ஆட்கொண்டதால்தான் அவனால் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள முடியாமல் போயிற்று. இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தை பிறப்பிக்கும். பாவம் மரணத்தை உண்டாக்கும் என்பதை அறிந்து காணப்பட்டாலும், அவனால் இச்சையை அடக்கி ஆளமுடியவில்லை. குற்றமில்லாத மாசற்ற தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவை துணிகரமாக, முப்பது வெள்ளிக்காக ஆசைப்பட்டு காட்டிக்கொடுத்துவிட்டான். அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியரிடத்திற்கும், மூப்பரிடத்திற்கும் திரும்ப கொண்டு வந்து, குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அவன் வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு புறப்பட்டு போய், நான்று கொண்டு செத்தான்.
யூதாஸ் இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்ததால் முப்பது வெள்ளிக்காசு கிடைக்கும் என்று நினைத்ததோடு, அவரை யூத முறைப்படி வாரினால் அடிப்பித்து விட்டுவிடுவார்கள் என நினைத்தும் இருக்கலாம். இப்படியாக அவருக்கு மரண தீர்ப்பு உண்டாகும் என நினைக்கவில்லை போலும். குற்றமில்லாத ரத்தத்தை அசட்டை செய்தவனின் முடிவு பாதாளம். அழிவுதான் அவனுக்கு உண்டானது. அவனுக்கு நித்திய ஜீவன் இல்லை.
யூத ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசட்டை பண்ணினார்கள். இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய வேண்டும் என்று ஜனங்கள் அதிகமாய் கூக்குரரிட்டபடியினால், கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்றான். அதற்கு ஜனங்களெல்லாரும் இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள் (மத்.27:24,25)
இயேசு கிறிஸ்து பவனியாக செல்லும்போது, எருசலேமுக்கு இயேசு சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால்நலமாயிருக்கும். இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்கும் காலத்தை நீ அறியாமற் போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்து கொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்ரின்மேல் ஒரு கல்ரிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார் (லூக்.19:41-44)
இயேசு கிறிஸ்து மேற்கூறியவைகளை யூத ஜனங்களைப்பற்றி தீர்க்கதரிசனமாக சொன்னார். இவ்வளவு சம்பவங்களையும் இயேசு கிறிஸ்து, கண்ணீரோடும், வேதனையோடும் சொன்னபோதும், யூத ஜனங்கள் நிர்விசாரமாய் காணப்பட்டார்கள். யூத ஜனங்களின் இருதயம் கடினப்பட்டதே தவிர நல்மனம் உண்டாகவில்லை. கடின இருதயம் இல்லாவிட்டால் இயேசு கிறிஸ்து கூறிய தீர்க்கதரிசனத்தை நம்பி இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்திருக்கமாட்டார்களே. கொஞ்சம் கூட தேவனுக்கு பயப்படும் பயம் இல்லாமல், இயேசு கிறிஸ்துவின் இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று கூறினார்கள். இவர்கள் இயேசுகிறிஸ்து இல்லாவிட்டால் நாம் நிம்மதியாக, தன் மனம் போல வாழலாம் என நினைத்தார்கள். இயேசுவின் வார்த்தை (எபி.4:12)-ன்படி இருந்தது. எனவேதான், இரத்தப்பழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்ன வார்த்தையின்படி, தீத்துராயன் நாட்களில் அநேகருடைய இரத்தம் சிந்தப்பட்டது. தீத்துராயன் எருசலேமை முற்றுகைப் போட்டான். எனவே யூதர் எருசலேம் கோட்டை வாசல்களை அடைத்துக்கொண்டு அநேக மாதங்களாக உள்ளே இருந்தார்கள். பஞ்சமும், கொள்ளை நோயும் உண்டானது. மரித்தவர்களை எடுத்து அடக்கம் செய்வாரில்லாமல், தெருவிலே எறிந்தார்கள்.
சுமார் ஆறு மாதத்திற்குபின், எருசலேம் பிடிபட்டதும் அநேகரைச் சிலுவையிலறைந்தார்கள். வெட்டினார்கள், இவர்களது இரத்தம் தெரு வீதிகளில் தண்ணீர்போல ஓடினது. எருசலேம் ஆலயமும், கட்டடங்களும் தீவைக்கப்பட்டன. மலைகளின் மேல் கட்டப்பட்ட பட்டணம் நின்று எரிந்தது. யூதர்கள் பலர் சிதறடிக்கப்பட்டனர். இப்படியாக இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை சிந்தும்படிசெய்து, நியாந்தீர்க்கப்பட்டார்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை அசட்டை பண்ணினபடியால் அழிவு இவர்களை விடவில்லை. இயேசு கிறிஸ்துவின் இரத்த கோட்டைக்குள் பாதுகாவலாக இருக்க வேண்டிய யூதஜனங்கள் பல வழிகளிலும் அழிக்கப்பட்டார்கள், சிதறடிக்கப்பட்டார்கள்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே, அன்றியும் எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவர்த்தி செய்யக்கூடாத ஒரேவித பரிகளை அநேகந்தரம் செலுத்துகிறவனாயும் நிற்பான் (எபி.10:11) இயேசு கிறிஸ்துவோ பாவங்களுக்காக ஒரே பரியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து, இனி தம்முடைய சத்துருக்களை தமது பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்.
பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இயேசு கிறிஸ்து என்றென்றைக்கும் பூரணபடுத்தியிருக்கிறார். இயேசு கிறிஸ்து நமக்காக அவரையே ஒப்புக்கொடுத்து இரத்தத்தை சிந்தினபடியால், இனி நமக்கு இரத்தம் சிந்தக்கூடிய எந்த அவசியம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நம்முடைய பரியாக சிலுவையில் தொங்கி இரத்தத்தை சிந்தினார். நமக்கு முடிவில்லாத வாழ்வை கொடுக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், விசுவாசியுங்கள், அதினால் உண்டாகும் நன்மைகளை பெற்று வாழுங்கள்.
0 comments:
Post a Comment