Tuesday, September 19, 2006

லெனினும் கடவுளும்

ரஷ்யாவின் புரட்சி, ஜெனரல் கோர்னிலோவ் (Kornilov)அவர்களின் படைகளால் எதிர்க்கப்பட்டு ஆபத்தான நிலையை அடைந்தது.அப்பொழுது லெனின் தான் ஆற்றிய உரையில் அடிக்கடி "கடவுள் நம்மை தப்புவிப்பாராக" என்று குறிப்பிட்டார்.இது துன்ப நேரத்தைத் தவிர வேறு எப்போதும் லெனின் (Vladimir Ilyich Ulyanov; April 22,1870 – January 24, 1924)பயன்படுத்தாத வார்த்தையாகும்.
-ரிச்சர்ட் உம்பிராண்ட் (Richard Wurmbrand-The Answer to Moscow's Bible.)

சங்கீதம் 14:1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மை செய்கிறவன் ஒருவனும் இல்லை.

Psalm 14:1 The fool hath said in his heart, There is no God. They are corrupt, they have done abominable works, there is none that doeth good.

Tuesday, September 05, 2006

சார்லஸ் டார்வினும் கிறிஸ்துவும்

"கிறிஸ்துவின் உபதேசங்களாலும் அவர் ஏற்படுத்திய மார்க்கத்தினாலும் (நியூசிலாந்து) நரபலி ஒழிந்தது.சிலை வணக்கப் பூசாரிகளின் ஆற்றல் ஒடுங்கிற்று.ஒழுக்கக் கேடுகள் ஒழிந்தன.சிசுக் கொலை நின்றது.பொய்யும் குடிவெறியும் ஒழுக்கக் குறைவும் பெரிதும் குறைந்து விட்டன.கடல் கடந்து வரும் என்னைப் போன்ற ஒருவன் இவைகளையெல்லாம் மறைப்பது அல்லது மறுப்பது நன்றி கெட்டத்தனமாகும்.ஒருவன் ஏறி வந்த கப்பல் உடைந்து அவன் தான் அறியாத ஒரு கடற்கரையில் கரை சேர நேருமானால் அந்த கடற்ரைக்கும் கிறிஸ்தவ போதனை எட்ட வேண்டும் என்று பக்தியுடன் வேண்டிக் கொள்வான்." - சார்லஸ் டார்வின்

Charles Robert Darwin (12 February 1809 – 19 April 1882) in his book "Journal of researches"

மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

Matthew:5:44
But I tell you: Love your enemies and pray for those who persecute you.