Wednesday, January 25, 2012

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு

குறிப்பு:வரலாற்று உண்மைகளைச் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத சில நண்பர்கள், இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தது கூட இல்லையென இந்நாட்களில் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுதி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் (Historians) வாழ்ந்திருந்தார்களே, அவர்களில் யாராவது இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாதேனும் எழுதியதுண்டா?” என்பதே அவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்வி. இக்கேள்விக்குப் பதிலளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்)

ரோமப் பேரரசரான ஜூலியஸ் சீஸர், கால் (Gaul) நாட்டின் மீது படையெடுத்த வரலாற்றினை விளக்கும் மூலப்பிரதிகள் பத்திற்கும் குறைவானவை. அவற்றுள் மிகப் பழமையான பிரதி, சீஸர் இறந்து 900 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டது. ஆயினும் இவை வரலாற்றிற்கு அடிப்படையான ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன.

இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அடிப்படையான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் சில மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களது வரிசை ஆகியவற்றை நிர்ணயிப்பதிலும் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

அரும்பெரும் ஆதாரங்கள் :
இயேசு கிறிஸ்துவின் வரலாறு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதற்கு எழுந்த ஆதாரங்கள் எண்ணில் அடங்கா.

இயேசு கிறிஸ்துவின் அற்புத வாழ்க்கையைச் சுமந்து நிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் பக்கமே அவரது வம்ச வரலாற்றை வரிசை தவறாமல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இயேசு கிறிஸ்து தாமே உலக வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒருபோதும் அணையாத ஒளிவிளக்காய்த் திகழ்கின்றார்.

நாம் இன்று நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நாட்காட்டியும் (Calander) அவரது பிறப்பிற்கோர் ஆதாரமாகவே அமைந்துள்ளது.

அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டைச் சார்ந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுமான அவருடைய சீடர்களும், சுவிசேஷகர்களுமே எழுதி உலகிற்கு அளித்துள்ளனர். அவரைப் பற்றி விளக்கமாய்க் கூறும் புதிய ஏற்பாட்டிற்கு (New Testament) முக்கிய அடிப்படையாய் நமது கரங்களிலிருக்கும் மூலப்பிரதிகள் 5000-க்கும் அதிகமானவை. இவை மூல மொழியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. நமக்குக் கிடைக்கப்பட்ட இப்பிரதிகள் கி.பி.2-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து எழுதப்பட்டவை.

மேற்கூறிய மூலப்பிரதிகளைத் தவிர ஆயிரக்கணக்கான பழமை மிக்க பல மொழித் திருப்புதல் பிரதிகளும் (Ancient versions) கி.பி.1-ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சற்று பின்னரும் வாழ்ந்த இக்னாசியஸ், பபியாஸ், பர்னபாஸ், டாட்டியன், ஜஸ்டின் மார்ட்டியர், இரானியஸ், யூசிபியஸ், ஆரிஜன் போன்ற பல திருச்சபைப் பிதாக்கள் இயேசுவைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் எழுதிய ஆதாரக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு நாளிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பார்த்துப் பரவசமடையும் இயேசு நாதரின் திறக்கப்பட்ட கல்லறையும், அவரது சரித்திரம் உண்மையானதென்பதற்கொரு சாட்சியாய் இருக்கிறது.

மேலும் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புற மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும், கிறிஸ்து மார்க்கத்திற்கு எதிராக எழுந்த தேசத் தலைவர்களும் கூட இயேசு நாதரின் வாழ்க்கைச் சரித்திரம் மெய்யென்பதற்குரிய ஆதாரங்கள் பலவற்றைத் தந்துள்ளனர், அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1.பிளினி (Pliny):
இவர் பிதினியா நாட்டின் (சின்ன ஆசியா) அதிபர். இவர் கி.பி.110-ல் டிராஜன் (Trajan) மன்னனுக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார். (Colin Chapman எழுதிய Christianity on Trial, பக்கம் 422,423)

2.டாசிட்டஸ் (Tacitus):
இவர் ரோம வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.115-ஆம் ஆண்டில் தாம் எழுதிய வரலாற்று நூலில் (Annals), நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொன்று குவித்ததைக் குறித்து தெளிவாக எழுதியுள்ளார். மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்களென்றும், டைபீரியஸ் மன்னனின் ஆட்சியில், பொந்திப் பிலாத்து என்னும் ஆளுநரால் கிறிஸ்து கொலை செய்யப்பட்டார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். Christus, from whom their (Charistians`) name is derived was executed at the hands of the Procurator Pontius Pilate in the reign of Tiberius" (Christianity on Trial பக்கம் 423,424)

3.சூட்டோனியஸ் (Suetonius):
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர். கி.பி.120-ஆம் ஆண்டில் தாம் எழுதிய “கிளாடியஸ் மன்னனின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூலில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் கிளாடியஸ் மன்னரால் ஏன் ரோமாபுரியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என்பதற்குரிய விளக்கம் அளித்துள்ளார். (Christianity on Trial, பக்கம் 424)

4.ஜோசபஸ் (Josephus):
இவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.93 ஆம் ஆண்டில், “யூதரின் தொன்மை” (The Antiquities of the Jews) என்னும் நூலில், இயேசு நாதர் ஞானமிக்கவர் என்றும் அற்புதங்கள் பல புரிந்தார் என்றும், மக்களுக்குப் பல போதனைகள் அளித்தார் என்றும், பல புறமதத்தவரையும், யூதரையும் தம்பால் இழுத்துக்கொண்டார் என்றும், அவரைப் பிலாத்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் என்றும், அதன்பின் அவர் மூன்றாம் நாளில் தம்மிடம் அன்பு செலுத்தியவருக்கு உயிருடன் காட்சியளித்தார் என்றும் எழுதியுள்ளார். (Christianity on Trial,பக்கம் 424,425)
யாரிந்த லூவோலேஸ்? (Lew Wallace)
இவர் இங்கர்சால் என்னும் நாத்திகரின் உற்ற நண்பர். ஆளுநராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இயேசு கிறிஸ்துஎன்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்கு போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே
முடியவில்லை.ஏனெனில் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது,வாழ்ந்த்து அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட “பென்ஹர்” (Ben Hur) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

யாரிந்த கில்பர்ட்? (Gilbert)
இவர் மேல்நாட்டைச் சார்ந்த ஒரு வேதவிரோதி. லார்ட் லிட்டில் டன் (1709-1773) (Lord Little Ton) என்பவரோடு சேர்ந்து இவர் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தது ஒரு கட்டுக்கதை என்றார். தம்மால் அதை நிரூபித்துகாட்ட முடியும் என்று நீதி மன்றத்தில் சவால் விடுத்தார். எனவே நீதிமன்றம் அதற்கென நாளொன்றை தீர்மானித்தது. குறிப்பிட்ட அந்த நாள் வந்தபோது இவ்விருவரும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டனர். அங்கே அவர்கள், தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததின் விளைவாகத் தாங்கள் இயேசு கிறிஸ்து உயிரோடெழும்பியது உண்மை என்று கண்டுகொண்டதாக அறிக்கையிட்டனர்.

தீர்க்கதரிசிகள்:
இவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்க் முன்னரே, அவர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உற்பவித்துத் தோன்றுவார் என்று மொழிந்தனர்.மேலும் அவரது தூயவாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவற்றை வேதத்தில் காணலாம். அவையாவும் ஆண்டவரது அற்புத வாழ்க்கையில் அப்படியே நிறைவேறின.

எனக்கு மிகவும் பிரியமானவர்களே,
இந்த இயேசு கிறிஸ்துவைப் போல் வேறொருவரை நாம் இந்த உலகில் காணமுடியுமா? இவரே உயிர்த்தெழுந்த உண்மையான தெய்வம்.

Monday, January 23, 2012

காலங்களும் யுகங்களும் - பாஸ்டர்.Y.K.P.ஹென்றி வீடியோ செய்திகள்

வேதாகமத்திலுள்ள பன்னிரண்டு காலங்களும் யுகங்களும் பற்றி தேவ தரிசன ஊழியங்கள் வழங்கும் வரை படங்களுடன் கூடிய வேத விளக்கங்கள்
வழங்குபவர் பாஸ்டர்.Y.K.P.ஹென்றி

வேதாகமத்திலுள்ள பன்னிரண்டு காலங்களாவன:
1.அநாதி காலம்
2.தூதர்களின் காலம்
3.அறியப்படாத காலம்
4.சீர்திருத்த காலம்
5.குற்றமில்லாத காலம்
6.மனசாட்சியின் காலம்
7.நியாயப் பிரமாண காலம்
8.கிருபையின் காலம்
9.அந்திக்கிறிஸ்துவின் காலம்
10.ஆயிரம் வருட அரசாட்சி காலம்
11.சாத்தானின் விடுதலைக் காலம்
12.நித்திய நித்தியக் காலம்

அநாதி காலம்


தூதர்களின் காலம் - பாகம் 1

தூதர்களின் காலம் - பாகம் 2

அறியப்படாத காலம்,சீர்திருத்த காலம் மற்றும் குற்றமில்லாத காலம் - பாகம் 1

அறியப்படாத காலம்,சீர்திருத்த காலம் மற்றும் குற்றமில்லாத காலம் - பாகம் 2

மனசாட்சியின் காலம் மற்றும் நியாயப் பிரமாண காலம் - பாகம் 1

மனசாட்சியின் காலம் மற்றும் நியாயப் பிரமாண காலம் - பாகம் 2

கிருபையின் காலம் - பாகம் 1

கிருபையின் காலம் - பாகம் 2

அந்திக்கிறிஸ்துவின் காலம் - பாகம் 1

அந்திக்கிறிஸ்துவின் காலம் - பாகம் 1

ஆயிரம் வருட அரசாட்சி காலம், சாத்தானின் விடுதலைக் காலம் மற்றும் நித்திய நித்தியக் காலம் - பாகம் 1

ஆயிரம் வருட அரசாட்சி காலம், சாத்தானின் விடுதலைக் காலம் மற்றும் நித்திய நித்தியக் காலம் - பாகம் 2

ஆயிரம் வருட அரசாட்சி காலம், சாத்தானின் விடுதலைக் காலம் மற்றும் நித்திய நித்தியக் காலம் - பாகம் 3

Download MP3s here
[mp3] Anaathi Kaalam.mp3[mp3] Antichrist Kaalam1.mp3[mp3] Antichrist Kaalam2.mp3[mp3] Kirubaiyin Kaalam.mp3[mp3] Thootharkalin Kaalam1.mp3[mp3] Thootharkalin Kaalam2.mp3

"Kaalangalum Yugangalum" Credit goes to GOD`s VISION MINISTRIES
Pastor.YKP.Hentry Contact Address
God`s Vision Message
Pastor.Y.K.P.Henry
14,Agasthiar Street,
Palayamkottai,
Thirunelveli District
Tamilnadu India
Ph:0462-2560124
Cell:94434-46460

Thursday, January 19, 2012

நமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி


Gospel to world வழங்கும் “நமது நம்பிக்கை”
தேவ செய்தி வழங்குபவர் சகோ.மோகன்.சி.லாசரஸ்
சிங்கப்பூர் விடுதலை பெருவிழா 2005
Our Faith - Tamil Bible Message by Bro. Mohan C Lazarus
Deliverance Festival 2005
Peace Community Ghapel
No:1 Sophia Road,
#06-10 Peace Centre,
Singapore-228149
Phone - 65552639

Wednesday, January 18, 2012

கால்பந்தாட்டக் களத்திலும் முழங்கால்

அமெரிக்க கால்பந்தாட்ட களத்தில் டிம் டிபோவின் (Tim Tebow) பெயர் மிக சர்ச்சைக்குரியது. இவரை பெரிதாக நேசிப்பவர்களும் இருக்கிறார்கள், கடுமையாக தூசிப்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் டிபோ வெளிப்படையாக தனது கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை தெரிவிப்பதுதான். பொதுவாக கிறிஸ்தவர்கள் தங்களை எப்போதுமே வெளியில் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். அதிலும் விஐபியாக இருப்பவர்கள் கப்சிப்பென ஒரு இரககசிய கிறிஸ்தவரை போலவே நடந்துகொள்வார்கள். ஆனால் டிம் டீபோவோ வித்தியாசமானவர். அமெரிக்கர்கள் வெறித்தனமாக ரசிக்கும் கால்பந்தாட்டக் களத்தில் கூட தலை குனிந்து தேவனை நோக்கி விண்ணப்பம் ஏறெடுக்க தயங்காதவர்.(படம்:Tim Tebow in his trademarked prayer pose.) தைரியமாக தனக்கு கிறிஸ்துவின் மீது உள்ள நம்பிக்கையை உலகுக்கு எடுத்துக்கூற துணிந்தவர். இந்த நவநாகரீக உலகில் கிறிஸ்துவுக்கான இதுபோன்ற சாட்சியங்கள் மிகவும் அபூர்வமானவை.

டிம் டிபோ ”டென்வர் பிராங்காஸ்” (Denver Broncos) அணிக்காக விளையாடி வருகிறார். ஒரு முறை புளோரிடா யூனிவர்சிட்டி போட்டியின் போது இவர் தனது முகத்தில் யோவான் 3:16 என வர்ணம் தீட்டிக்கொண்டு விளையாட அன்றையதினம் மட்டும் கூகிள் தேடு தளத்தில் 92 மில்லியன் தடவை “John 3:16" என்றால் என்ன என மக்கள் தேடியிருக்கிறார்கள். அந்த வசனம் இப்படியாக பிரபல்யம் அடைந்தது. தனது டிவிட்டரில் அடுக்கடுக்காக வேத வசங்களை வெளியிடுபவர் இவர்.800,000 பேர் இவரின் டிவிட்டர் ஃபாலோவர்கள். இவரின் பேஸ்புக் அக்கவுண்டில் 1.3 மில்லியன் பேர் ரசிகர்கள்.
இளவயதிலேயே கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட டிம் டிபோ கால்பந்து களத்திலிருந்து கொண்டே இப்படி பல விதங்களிலும் சுவிசேசத்தை அறிவிக்க முயன்று கொண்டு வருகிறார். இதனால் இவரை எதிர்ப்பவர்களும் பெருகியிருக்கிறார்கள்.”I hate Tim Tebow" என பேஸ்புக் பக்கங்களும் “TebowHaters.com" போன்ற தளங்களும் ஆன்லைனில் பெருகி உள்ளன.

ஜனவரி 16-ல் அமெரிக்காவில் வெளியான டைம் பத்திரிகை எழுதும் போது பொது இடத்தில் தொழகை அல்லது ஜெபம் அல்லது பிரார்த்தனை செய்வதை "Tebowing" எனலாம் என்கின்ற அளவுக்கு டிம் டிபோவின் ஆன்மீக வாழ்க்கை அமைந்துள்ளதாக கூறியுள்ளது.

Tuesday, January 17, 2012

இந்தியா கிறிஸ்துவுக்கு சொந்தமாகுமா?


Credit goes to ஜீவஊற்று-சகோ.D.விமலன்.

Monday, January 16, 2012

Wednesday, January 11, 2012

இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? Pdf புத்தகம் டவுன்லோட்

Title :இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? - முனைவர் தெ.தேவகலா
Inthiya Thoma Vazhi Thiravida Kiristhava Nadey- Evvaru?(Tamil) (India is a St. Thomas Dravidian Christian Nation- How?)
Author : By Dr. D.Devakala-2004

This book provides the summary of two Ph.D. dissertations of Dr.M.Deivanayagam and Dr. D.Devakala and serves as a handbook to teach students as how to claim that India is a Christian Nation.This book also provides details about the field activities of these two scholars undertaken for the emancipation of Dravidian Indians.

Meipporul Publishers,
278- konnur High Road,
Ayanpuram,
Chennai - 600023

இந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு? Inthiya Thoma Vazhi Thiravida Kiristhava Nadey- Evvaru? in Tamil pdf book download link

Friday, January 06, 2012

கன்றுகள் கற்க! - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி

நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு
The Friends Missionary Prayer Band presents...
மாநில முகாம் 2005 The 39th Annual State level camp
26-29 May Danishpet,Tamilnadu,India
Theme: Transformation of Mind
"மனம் மறுரூபம்”
Topic:
"Ten T`s for Teens"
கன்றுகள் கற்க!
Speaker:R.Stanley
Tamil Translator:
E.L.Ephraim
Watch it online
Download as flv video
Download as MP3 Podcast
Credit goes to Stanley On Bible.com

இயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி

”இயேசுவின் நாமம் தரும் அற்புத பலன்” என்கிற தலைப்பில் கோவை பிரார்த்தனைத் திருவிழாவில் 07/02/2004 டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் அவர்கள் வழங்கிய தேவ செய்தி.
”Jesus Name Gives Miracle” Tamil Christian Message by Bro.D.G.S Dinakaran at Coimbatore.

Thursday, January 05, 2012

போதகர் பவுல் அம்பியோடு ஒரு நேர்முக பேட்டி

ஜெர்மன் பூரண சுவிசேச மாரநாத சபை போதகர் பவுல் அம்பியோடு ஒரு நேர்முக பேட்டி
Interview with Pastor.Paul Ambi Sinnathurai

Watch it on iPhone or Ipad or iPod Touch
Credit goes to Tamil Christian Media and http://www.maranathagemeinde.com