குறிப்பு:வரலாற்று உண்மைகளைச் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத சில நண்பர்கள், இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தது கூட இல்லையென இந்நாட்களில் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுதி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் (Historians) வாழ்ந்திருந்தார்களே, அவர்களில் யாராவது இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாதேனும் எழுதியதுண்டா?” என்பதே அவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்வி. இக்கேள்விக்குப் பதிலளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்)
ரோமப் பேரரசரான ஜூலியஸ் சீஸர், கால் (Gaul) நாட்டின் மீது படையெடுத்த வரலாற்றினை விளக்கும் மூலப்பிரதிகள் பத்திற்கும் குறைவானவை. அவற்றுள் மிகப் பழமையான பிரதி, சீஸர் இறந்து 900 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டது. ஆயினும் இவை வரலாற்றிற்கு அடிப்படையான ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன.
இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அடிப்படையான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் சில மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களது வரிசை ஆகியவற்றை நிர்ணயிப்பதிலும் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.
அரும்பெரும் ஆதாரங்கள் :
இயேசு கிறிஸ்துவின் வரலாறு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதற்கு எழுந்த ஆதாரங்கள் எண்ணில் அடங்கா.
இயேசு கிறிஸ்துவின் அற்புத வாழ்க்கையைச் சுமந்து நிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் பக்கமே அவரது வம்ச வரலாற்றை வரிசை தவறாமல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
இயேசு கிறிஸ்து தாமே உலக வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒருபோதும் அணையாத ஒளிவிளக்காய்த் திகழ்கின்றார்.
நாம் இன்று நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நாட்காட்டியும் (Calander) அவரது பிறப்பிற்கோர் ஆதாரமாகவே அமைந்துள்ளது.
அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டைச் சார்ந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுமான அவருடைய சீடர்களும், சுவிசேஷகர்களுமே எழுதி உலகிற்கு அளித்துள்ளனர். அவரைப் பற்றி விளக்கமாய்க் கூறும் புதிய ஏற்பாட்டிற்கு (New Testament) முக்கிய அடிப்படையாய் நமது கரங்களிலிருக்கும் மூலப்பிரதிகள் 5000-க்கும் அதிகமானவை. இவை மூல மொழியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. நமக்குக் கிடைக்கப்பட்ட இப்பிரதிகள் கி.பி.2-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து எழுதப்பட்டவை.
மேற்கூறிய மூலப்பிரதிகளைத் தவிர ஆயிரக்கணக்கான பழமை மிக்க பல மொழித் திருப்புதல் பிரதிகளும் (Ancient versions) கி.பி.1-ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சற்று பின்னரும் வாழ்ந்த இக்னாசியஸ், பபியாஸ், பர்னபாஸ், டாட்டியன், ஜஸ்டின் மார்ட்டியர், இரானியஸ், யூசிபியஸ், ஆரிஜன் போன்ற பல திருச்சபைப் பிதாக்கள் இயேசுவைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் எழுதிய ஆதாரக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு நாளிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பார்த்துப் பரவசமடையும் இயேசு நாதரின் திறக்கப்பட்ட கல்லறையும், அவரது சரித்திரம் உண்மையானதென்பதற்கொரு சாட்சியாய் இருக்கிறது.
மேலும் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புற மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும், கிறிஸ்து மார்க்கத்திற்கு எதிராக எழுந்த தேசத் தலைவர்களும் கூட இயேசு நாதரின் வாழ்க்கைச் சரித்திரம் மெய்யென்பதற்குரிய ஆதாரங்கள் பலவற்றைத் தந்துள்ளனர், அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.
1.பிளினி (Pliny):
இவர் பிதினியா நாட்டின் (சின்ன ஆசியா) அதிபர். இவர் கி.பி.110-ல் டிராஜன் (Trajan) மன்னனுக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார். (Colin Chapman எழுதிய Christianity on Trial, பக்கம் 422,423)
2.டாசிட்டஸ் (Tacitus):
இவர் ரோம வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.115-ஆம் ஆண்டில் தாம் எழுதிய வரலாற்று நூலில் (Annals), நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொன்று குவித்ததைக் குறித்து தெளிவாக எழுதியுள்ளார். மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்களென்றும், டைபீரியஸ் மன்னனின் ஆட்சியில், பொந்திப் பிலாத்து என்னும் ஆளுநரால் கிறிஸ்து கொலை செய்யப்பட்டார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். Christus, from whom their (Charistians`) name is derived was executed at the hands of the Procurator Pontius Pilate in the reign of Tiberius" (Christianity on Trial பக்கம் 423,424)
3.சூட்டோனியஸ் (Suetonius):
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர். கி.பி.120-ஆம் ஆண்டில் தாம் எழுதிய “கிளாடியஸ் மன்னனின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூலில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் கிளாடியஸ் மன்னரால் ஏன் ரோமாபுரியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என்பதற்குரிய விளக்கம் அளித்துள்ளார். (Christianity on Trial, பக்கம் 424)
4.ஜோசபஸ் (Josephus):
இவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.93 ஆம் ஆண்டில், “யூதரின் தொன்மை” (The Antiquities of the Jews) என்னும் நூலில், இயேசு நாதர் ஞானமிக்கவர் என்றும் அற்புதங்கள் பல புரிந்தார் என்றும், மக்களுக்குப் பல போதனைகள் அளித்தார் என்றும், பல புறமதத்தவரையும், யூதரையும் தம்பால் இழுத்துக்கொண்டார் என்றும், அவரைப் பிலாத்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் என்றும், அதன்பின் அவர் மூன்றாம் நாளில் தம்மிடம் அன்பு செலுத்தியவருக்கு உயிருடன் காட்சியளித்தார் என்றும் எழுதியுள்ளார். (Christianity on Trial,பக்கம் 424,425)
யாரிந்த லூவோலேஸ்? (Lew Wallace)
இவர் இங்கர்சால் என்னும் நாத்திகரின் உற்ற நண்பர். ஆளுநராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இயேசு கிறிஸ்துஎன்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்கு போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே
முடியவில்லை.ஏனெனில் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது,வாழ்ந்த்து அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட “பென்ஹர்” (Ben Hur) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.
யாரிந்த கில்பர்ட்? (Gilbert)
இவர் மேல்நாட்டைச் சார்ந்த ஒரு வேதவிரோதி. லார்ட் லிட்டில் டன் (1709-1773) (Lord Little Ton) என்பவரோடு சேர்ந்து இவர் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தது ஒரு கட்டுக்கதை என்றார். தம்மால் அதை நிரூபித்துகாட்ட முடியும் என்று நீதி மன்றத்தில் சவால் விடுத்தார். எனவே நீதிமன்றம் அதற்கென நாளொன்றை தீர்மானித்தது. குறிப்பிட்ட அந்த நாள் வந்தபோது இவ்விருவரும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டனர். அங்கே அவர்கள், தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததின் விளைவாகத் தாங்கள் இயேசு கிறிஸ்து உயிரோடெழும்பியது உண்மை என்று கண்டுகொண்டதாக அறிக்கையிட்டனர்.
தீர்க்கதரிசிகள்:
இவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்க் முன்னரே, அவர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உற்பவித்துத் தோன்றுவார் என்று மொழிந்தனர்.மேலும் அவரது தூயவாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவற்றை வேதத்தில் காணலாம். அவையாவும் ஆண்டவரது அற்புத வாழ்க்கையில் அப்படியே நிறைவேறின.
எனக்கு மிகவும் பிரியமானவர்களே,
இந்த இயேசு கிறிஸ்துவைப் போல் வேறொருவரை நாம் இந்த உலகில் காணமுடியுமா? இவரே உயிர்த்தெழுந்த உண்மையான தெய்வம்.
Wednesday, January 25, 2012
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு
Labels:
Easter,
Good Friday,
History,
Jesus,
Tracts
Subscribe to:
Post Comments (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்
மிகவும் உன்மை
ReplyDeleteஇறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்தியாய்-தனித்தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.
ReplyDeleteமத்தேயு சுவி பட்டியல் மற்றும் குழப்பங்கள்:மத்தேயு1.17 ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறைகள் பதினான்கு. தாவீது முதல் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்கு. பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவ்கள் முதல் கிறிஸ்துவரை தலைமுறைகள் பதினான்கு.அதாவது 14 + 14 +14 = 42, ஏசுவிற்குமுன் 42 தலைமுறைகள், ஆனால் மத்தேயு1:1-16 பட்டியல் நாம் கொடுத்தபடி ஏசுவே 41வது தலைமுறை தான்.
@@@@மத்தேயு1.8 ஆசாவின் மகன் யோசபாத்து.யோசபாத்தின் மகன் யோராம்.யோராமின் மகன் உசியா.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோராமின் மகன் அகசியா (2நாளாக22:14:27)அகசியாவின் மகன் யோவாசு(2நாளாக22:114:27)யோவாசின் மகன் அமட்சியா(2நாளாக24:27)அமட்சியாவின் மகன் உசியா. (2நாளாக26:1)மத்தேயு1.8 யாராமின் மகன் உசியா என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள 3 தலைமுறைகள அகசியா, யோவாசு, அமட்சியா என்பவர்களை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.
******1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் யோசியாவின் மகனான யோவகாசின் சகோதரன் எலியாக்கிமிற்கு, யோயாக்கிம்(2நாளாக36:4)யோயாக்கிம் மகன் எக்கோனியா. (1நாளாக3:16)மத்தேயு1.11 யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியா.என்று புனைந்த பொழுது பழைய ஏற்பாட்டில் உள்ள எலியாக்கிம் என்ற தலைமுறையை தன்னிச்சையாய் மறைத்துள்ளார்.
1.12 பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன்செயல்தியேல்.செயல்தியேலின் மகன் செருபாபேல்.நாம் பழைய ஏற்பாடு நூல்களில் பார்க்கையில் -(1நாளாக3:19ன் படியாக பெதாயாவின் மகன் செருபாபேல்.தேவனுடைய வார்த்தை என்பதாக சொல்லப்படும் பைபிளினுள் ஒரு கதாசிரியரே பழைய ஏற்பாடு நூல்களில் உள்ளதை தன்னிச்சையாய் மாற்றி திரித்துத் தருகிறார் மத்தேயூ.
லூக்காவின் பட்டியல்:தாவீது ராஜா தன் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் வாரிசு வரிசை என மத்தேயு புனைய லூக்காவோ தாவீது ராஜா வேறோரு வைப்பாட்டி பத்சுவாள் மூலமான நாத்தன் வரிசை 1நாளாக3:5-7. எனவே பட்டியல் முழுதும் மாறியது சரியே. ஆனால் பாபிலோன் சிறைக்குப்பின் சாலமோன் வரிசை செயல்தியேல், செருபாபேல் ஆகிய இரண்டும் திணிக்கப் பட்டுள்ளது
வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:
ReplyDeleteIntroduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-
The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.
Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.
சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
இவையே நடுநிலை வரலாற்று ரீதியாக பைபிளியல் அறிஞர்கள் ஏற்கும் உண்மைகள்.
/மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.//
ReplyDeleteThat is his paternal generation.
//லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.//
This is his maternal generation. People who doesn’t have son, track their generation thru their son-in-law.
//யோவானசுவியின்படி ஏசு கடைசி 8 மாதங்கள் குடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு பண்டிகை மற்றும் வெள்ளாடு கொலை செய்யும் பஸ்கா பண்டிகை என முழுமையாக ஜெருசலேமிலேயே இருந்தார், மாற்கு சுவியோ முழுமையாக கலிலியாவிலேயே, கடைசி வாரம் செவ்வாய் வந்து வெள்ளி அன்று கொல்லப் பட்டு துக்கு மரத்தில் தொங்கவிடப்பட்டு இறந்தார்.//
Please dont think that people will beleive all your lies. In John’s Gospel, did Jesus spent his entire life in Jerusalem?
//எது உண்மை எது பொய்.//
Bible is truth.
//மத்தேயு சுவிப்படு ஏசுவிற்கு மரண தண்டனைக்கு முன்பே சீடர் யூதாஸ் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து இறக்க, அவருக்கு தந்ததான லஞ்சப் பணத்தை யூதப் பாதிரிகள் எடுத் நிலம் வான்கினர்.
லுக்கா சுவிப்படி, ஏசு இரWதபின் அந்த லஞ்சப் பணம் கொண்டு யூதாசே நிலம் வாங்கி நந்த நிலத்தில் நின்றிருந்த போது உடல் உப்பி வெடித்து இறந்தார்.
ஒருவர் ஒரு முறை மட்டுமே இறக்க முடியும்.//
Pls refer http://www.israelect.com/reference/WillieMartin/Judas.htm
With Love,
Ashok
////லுக்கா சுவி புனையல்படி கலிலேயாவில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப் மகன், ஏரோது மரணத்திற்குப்பின், மகன் ஏரோது ஆர்ச்சிலேயு 10 ஆண்டு ஆட்சிக்குப்பின் நீக்கப்பட்டு பின் சிரியா கவர்னர் கிரேனியு கீழ் சென்ஸஸ் எடுத்தபோது பிறந்தவர்.//
ReplyDeletePlease refer http://www.biblehistory.net/newsletter/quirinius.htm
//மத்தேயுவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 41 வது தலைமுறை.//
That is his paternal generation.
//லுக்காவின் ஏசு ஆபிரகாமிலுருந்து 57 வது தலைமுறை.//
This is his maternal generation. People who doesn’t have son, track their generation thru their son-in-law.//
முதலில் ஏன் இந்தக் கதைகள் நுழைந்தது. ஏதோ ஒரு பழைய ஏற்பாடு வாசகம் எடுத்துக் கொண்டு- இது தீர்க்கம்; இது நிறைவேர வேண்டும் என, பெத்லகேமில் பிறப்பு எனக் காட்டல் வேண்டும், பின் ஏசு நசரேயன் என தூக்குமரத்தில் நிருபிக்கப் பட்ட குற்றத்தை தன் கையால் ரோமன் கவர்னர் பிலாத்து எழுதியது இருக்க இரண்டு சுவி கதாசிரியர்களும் குழம்பி தன்னிச்சையாகப் புனைந்தனர். மத்தேயு யாக்கோபு மகன் ஜோசப் பெத்லகேமிலே வாழ்ந்தவர், அவருக்கு இயேசு குடும்பத்தை பெத்லகேமிற்கு அனுப்ப நட்சத்திரக் கதைகள், ஏரேது ஏசுவிற்காக பலப்பல அப்பாவி குழந்தைகாக கொன்றாராம்.
லுக்கா ஏலி மகன் ஜோசப்பை நசரேத் வாழ்பவராகப் புனைய அவருக்கு பிறப்பிற்கு ஏலி மகன் ஜோசப்பை பெத்லகீம் கொண்டு வர சென்சஸ் கதை தேவைப்பட்டது.
வரலாற்றில் ஒரே ஒரு சென்சஸ் தான், அதன் போது கலிலேயர் யூதாஸ் பெரும் மரியல் செய்தார், என்பதையும் லுக்கா சுவி புனைந்தவரின் இரண்டாவது நூலான அப்போஸ்தலர் நடபடிகளில் காணலாம்.
சுவிசேஷஙளைக் கொண்டு எவ்வளவு தூரம் உண்மையான வரலாற்று இயேசுவைத் தேட முடியாது, எங்களுக்கு வரலாற்று இயேசு அல்ல பரப்பப்பட்ட கதை நாயகர் இயேசு தான் வேண்டும் Bultman என்றனர். இதை சுட்டிக் காட்டி பேராசிரியர் F.F.புரூஸ், தன் “The Real jesus ” என்னும் நூலில் இதை மீறி ஜெ.சி.கெடவுக்ஸ் (J.C.Cadoux- Profesor OF New Testament, at Yorkshire United Independent Collecge, Bradford & Mackennal Professor of Church History at Manfield College, Oxford)என்பவரின் நூலை சுட்டிக் காட்டுகிறார்.
See what this Learned Scholar says :
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.
As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
“There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.
Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.