Saturday, April 30, 2011

பைபிளில் காணப்படும் இன்றைய தேசங்கள்


பைபிள் புத்தகத்தின் விசேசம் என்னவென்றால் அதில் காணப்படும் நிஜமனிதர்கள், நிஜசம்பவங்கள் மற்றும் நிஜஇடங்கள்.மற்ற காவியங்களில் காப்பியங்களில் காணப்படும் மனிதர்கள்,சம்பவங்கள்,இடங்கள் போலல்லாது வேதாகம புத்தகத்தில் வரும் பாத்திரங்களும் பெயர்களும் உண்மையானவை. நிஜத்தில் இருந்தவை மற்றும் இருப்பவை.அதற்கான ஆதாரங்களை நாம் கண்கூடாக பிற அநேக மூலங்கள் மூலம் காணலாம். வேதாகமத்தில் இன்றைக்கு நாம் உலகவரைபடத்தில் காணும் நாடுகளைக் கூட நாம் அதே பெயரில் காண முடிகிறது.வரலாறு மட்டுமல்லாமல் பூகோளமும் அரசியல் அமைப்பும் கூட வேதம் நிஜமே என நிரூபிக்கின்றது.வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன் (மத்தேயு 24:15).

Egypt Gen:12:10 எகிப்து ஆதியாகமம் 12:10 “ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்”

Greece Dan:8:21 கிரீஸ் தானியேல் 8:21 “21. ”ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா;”

Syria Gen:25:20 சிரியா ஆதியாகமம் 25:20 “பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும்”

India Est:1:1 இந்தியா எஸ்தர்:1:1 “இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கு முள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்”

Ethiopia Est:1:1 எத்தியோப்பியா எஸ்தர்:1:1 “இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும்”

Israel Math:2:20 இஸ்ரேல் மத்தேயு 2:20 "பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்குப் போ"

Jordan Psa:42:6 ஜோர்டான் சங்கீதம் 42:6 "ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும்"

Lebanon Isa:29:17 லெபனான் ஏசாயா 29:17 "லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்"

Lybia Acts:2:10 லிபியா அப்போஸ்தலர் 2:10 "சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லிபியாவின் திசைகளிலே”

Cyprus Acts 15:39 சைப்ரஸ் அப்போஸ்தலர் 15:39 “கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான்”

Asia 1Cor:16:19 ஆசியா Iகொரிந்தியர் 16:19 "ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள்"

Italy Heb:13:24 இத்தாலி எபிரெயர் 13:24 "இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்"

Rome Acts:28:14 ரோம் அப்போஸ்தலர் 28:14 ”பின்பு ரோமாபுரிக்குப் போனோம்”

Modern country names mentioned in the bible.

Friday, April 29, 2011

பைபிளில் வரும் செர்க்ஸஸ் மகாராஜா


பெர்சிய (பாரசீக பேரரசு)

டேரியசுக்கு பின் அவரது மகன் ஆகாசரஸ் (கிரேக்க மொழியில் செர்க்ஸஸ்) கிமு 486 முதல் 465 வரை இருபத்தியொரு ஆண்டுகள் பாரசீகத்தை அரசாண்டார். இவரை குறித்து பைபிளின் எஸ்தர் புத்தகம் முதலாம் அதிகாரம் முதல் வசனம் ”இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு” என்கிறது. இவர் காலத்தில் தான் புகழ்பெற்ற தெர்மோபைலி சண்டை நடைபெற்றது.இப்போரில் ஸெர்க்ஸஸ் சுமார் 50 லட்சம் வீரர்களுடன் ஏதென்ஸை கடல் மார்க்கமாக சுற்றி வளைத்தார். ஆனால் இப்போரில் கிரேக்கமே வெற்றிபெற்றது.இதற்கு பின் நடந்த சில யூதர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் எஸ்தர் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதினோராம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் செர்க்சஸ் பற்றிய குறிப்பு


இந்த செர்க்ஸஸ் (Xerxes - Ahasurerus) மகாராஜாவின் பெயருடன் கூடிய வசனங்கள் குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

எஸ்தர்:1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேரு (செர்க்ஸஸ்)

Esther:1:1 These events happened in the days of King Xerxes, who reigned over 127 provinces stretching from India to Ethiopia.

Thursday, April 28, 2011

Bible Quiz For AllWednesday, April 27, 2011

பைபிளில் வரும் அரசன் டேரியஸ்

2500 ஆண்டுகளுக்கு முன் சைரஸ் என்ற மன்னர் பாரசிகத்தை ஆண்டு வந்தார். பாரசிகம் அன்று உலகின் தன்னிகரற்ற பேரரசு. அதனுடன் போட்டி போட எந்த அரசும் அன்று இருக்க வில்லை.கிழக்கே சிந்துநதியே அந்த பேரரசின் எல்லை.மேற்கே எகிப்தின் நைல் நதி அதன் எல்லை.வடக்கே கிழக்கு ஐரோப்பாவின் டான்யூப் நதி அதன் எல்லை. சைரஸ் மன்னர் ஆட்சிகாலத்தில் ஜெருசலம் அவர் வசம் இருந்தது.அது ஏசு பிறப்புக்கும், கிறிஸ்தவ மதத்துக்கும் முற்பட்ட காலம்.அன்று யூதர்கள் ஜெருசலத்தில் வசித்து வந்த சிறு கூட்டத்தினர். ஜெருசலத்துக்கு இன்றுள்ள முக்கியத்துவம் அன்று இல்லை. ஐரோப்பியர்கள் நாட்டார் தெய்வங்களை வணங்கி வந்தனர். கிரேக்கர்கள் ஜீயசையும், ஜூபிடரையும் பிற தெய்வங்களையும் வணங்கி வந்தனர்.பாரசிக மன்னர் நெருப்பை வணங்கும் சொராஷ்ட்ர மதத்தை சார்ந்தவர் (இன்றைய பார்சிகள் மதம்).

சைரசுக்கு பின் பாரசீகத்தை அவர் மகன் கேம்பிசெஸ் (பைபிளின் எஸ்றா கால ஆகாஸ்வேரு) கிமு 529 முதல் 522 வரை ஆண்டார். அவருக்கு பின் ஸ்மெர்திஸ் எனும் அரசன் பத்து மாதங்கள் பாரசீகத்தை ஆட்சி புரிந்தார்.இவருக்கு பின்னர் டேரியஸ் கிமு 521 முதல் 486 வரை ஆட்சிபுரிந்தார். ஸ்மெர்திஸ் ராஜாவாயிருந்த காலத்தில் எருசலேமையும் அதன் ஆலயத்தையும் கட்ட யூதர்களுக்கு தடைவிதித்திருந்தான்.இது பற்றிய குறிப்பு எஸ்றா :4:21-ல் “இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள்.”என வருகிறது.இந்த தடை அவனுக்கு பின் வந்த டேரியஸ் மன்னர் ஆட்சி காலத்தில் முற்றிலுமாக நீக்கப்பட்டது. எஸ்றா:4:24. "அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு(டேரியஸ்) ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது" ஜெருசலத்தை பிடித்த டேரியஸிடம் யூதர்கள் "எங்களுக்கு ஒரு கோயில் கட்ட அனுமதி கொடுங்கள்" என கேட்டார்கள்."சரி கட்டிக்க" என பெருந்தன்மையுடன் அனுமதி கொடுத்தார் டேரியஸ்.யூதர்களுக்கு மத சுதந்திரமும் கொடுத்தார். அன்றைய நாட்களில் மத சுதந்திரம் எல்லாம் ரொம்ப ரேர்.இதனால் அகமகிழ்ந்த யூதர்கள் டேரியசை கொண்டாடி பைபிளில் பழைய ஏற்பாடில் (புதிய ஏற்பாடு இன்னும் பிறக்க 800 வருடம் இருந்தது) எல்லாம் அவரை புகழ்ந்து வசனங்களை எழுதிவைத்தனர்)

பதினோராம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் சைரஸ் பற்றிய குறிப்பு


இந்த டேரியஸ் மகாராஜாவின் பெயருடன் கூடிய வசனங்கள் குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

எஸ்றா:6:15 ராஜாவாகிய தரியு (டேரியஸ்) அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.

Ezra: 6:15 And this house was finished on the third day of the month Adar, which was in the sixth year of the reign of Darius the king.

Tuesday, April 26, 2011

பைபிளில் வரும் சைரஸ் மகாராஜா

இப்போது வேண்டுமானால் ஈரானும் இஸ்ரேல் தேசமும் எதிரும் புதிரும், எலியும் பூனையுமாக இருக்கலாம். ஆனால் கிமு 558-ல் பெர்சியா எனப்பட்ட இன்றைய ஈரானை ஆண்ட பேரரசரான சைரஸ்(கி.மு.590-529) யூதர்களுடன் மிகவும் பட்சமாக இருந்தார்.மேதிய பெர்சிய ராஜியம் எனப்படும் பாரசீகப் பேரரசை நிறுவிய இவர் பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பவும், எருசலேமில் யூத தேவாலயத்தை மீண்டும் எடுத்து கட்டவும் இவர் கொடுத்த ஆதரவு யூத வரலாற்றில் மிக முக்கிய சம்பவங்களாக கருதப்படுகின்றன.

சைரசின் ஆட்சிக்காலத்தில் அவர் பல வெற்றிவாகைகளை சூடிக்கொண்டிருந்தபோது கி.மு. 539 ஆம் ஆண்டில் பாபிலோன் அரசு அவர் போரிடாமலேயே சைரஸ் பேரரசரிடம் சரணடைந்தது. பாபிலோனியப் பேரரசில் சிரியாவும், பாலஸ்தீனமும் இணைந்திருந்ததால், அந்த மண்டலங்களும் சைரசின் ஆளுகையின் கீழ் வந்தன.கி.மு. 540 ஆம் ஆண்டில் சைரசின் பாரசீகப் பேரரசு, இந்தியாவில் சிந்து ஆறு முதல் மேற்கே மத்தியத் தரைக்கடல் வரையிலும் பரவியிருந்தது.உலகின் மிகப் பெரிய பேரரசின் பேரரசராக விளங்கிய சைரஸ் வேறு பல வெற்றியாளர்கள் கையாண்ட அட்டூழியங்களையும், கொடூரங்களையும் அவர் சிறிதும் கையாளவில்லை. எடுத்துக்காட்டாக, பாபிலோனியர்களும், அவர்களை விட மோசமாக அசீரியர்களும், பல்லாயிரக்கணக்கில் மக்களைப் படுகொலை செய்தார்கள். மக்கள் தங்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வார்கள் என அஞ்சி, மக்கள் அனைவரையுமே நாடு கடத்தியதும் உண்டு. உதாரணமாக, பாபிலோனியர்கள் 586 ஆம் ஆண்டில் யூதேயாவை வென்றபோது, அந்நாட்டு மக்களில் பெரும்பான்மையோரைப் பாபிலோனுககு நாடு கடத்தினார்கள். அதற்கு 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனை சைரஸ் வெற்றி கண்ட போது யூதர்கள் தங்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதித்தார். சைரஸ் மட்டும் இல்லாது போயிருப்பின், கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் யூதர்கள் ஒரு தனிக் குழுவாக மாண்டு போயிருப்பார்கள். அவர்களின் உயிரைக் காப்பாற்ற சைரஸ் எடுத்த முடிவில் அரசியல் நோக்கங்கள் இருந்திருக்கலாம். எனினும், அவர் காலத்திலிருந்த அரசர்கள் அனைவரிலும் மிகவும் மனிதாபிமானம் வாய்ந்தவராக விளங்கியவர் சைரஸ் என்பதை மறுப்பதற்கில்லை. இன்றுங்கூட, ஈரானில் சைரஸ் பாரசீக அரசை நிறுவிய ஒரு மகாராஜாவாக போற்றப்படுகிறார்.மகா சைரசின் ஆட்சிக் காலம் உலக வரலாற்றில் ஒரு பெருந் திருப்புமுனை எனக் கருதப்படுகிறது.

பதினோராம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் சைரஸ் பற்றிய குறிப்பு (Cyrus II of Persia commonly known as Cyrus the Great)


இந்த சைரஸ் மகாராஜாவின் பெயருடன் கூடிய வசனங்கள் குறிப்புகள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

ஏசாயா:45:1,13 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசு (சைரஸ்)..நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

Isaiah:45:13 I will raise up Cyrus in my righteousness: I will make all his ways straight. He will rebuild my city and set my exiles free, but not for a price or reward, says the LORD Almighty.”

தானியேல்:10:1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ((சைரஸ்) அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது;

Daniel 10:1 In the third year of Cyrus king of Persia, a revelation was given to Daniel (who was called Belteshazzar).

எஸ்றா:1:1,2 கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (சைரஸ்) ஆவியை ஏவினதினாலே அவன்:பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

Ezra 1:2 “This is what Cyrus king of Persia says: “‘The LORD, the God of heaven, has given me all the kingdoms of the earth and he has appointed me to build a temple for him at Jerusalem in Judah.

II நாளாகமம்:36:22 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (சைரஸ்)முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் (சைரஸ்) ஆவியை ஏவினதினாலே, அவன்:பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

2 Chronicles 36:22 In the first year of Cyrus king of Persia, in order to fulfill the word of the LORD spoken by Jeremiah, the LORD moved the heart of Cyrus king of Persia to make
a proclamation throughout his realm and also to put it in writing:

Monday, April 25, 2011

பைபிளில் வரும் அகஸ்டஸ் சீசர்

ஓர் ஆண்டிற்கு உரிய மாதங்கள் பன்னிரண்டு. அவற்றில் ஆகஸ்ட் எனப்படும் எட்டாவது மாதம் அகஸ்டஸ் சீசர் எனப்படும் மாபெரும் ரோம பேரரசரின் பெயரில் அமைந்ததாகும்.பண்டைய ரோம பேரரசை நிறுவியதில் இந்த அகஸ்டஸ் சீசருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

கி.மு.63 இல் பிறந்து, கி.பி.14 இல் மறைந்த அகஸ்டஸ், 77 ஆண்டுகள் வாழ்ந்தார். வாழ்நாளில், கி.மு.29 முதல் கி.பி.14 வரை, 43 ஆண்டுகள் ரோம் பேரரசைத் திறம்பட ஆட்சி செய்து புகழ் பெற்றார்.இவரது பேரரசின் எல்லை ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, கவாஷியா ஆகிய நாடுகளையும் பால்க்கன் நாடுகளில் பெரும்பகுதிகள், கால் (இன்றைய பிரான்ஸ்), பன்னோனியா, தால்மேசியா (இன்றைய ஹங்கேரி), யூக்கோஸ்லேவியாவின் பகுதிகள், எகிப்து வரை விரிந்திருந்தது. வட எல்லை ரைன்-டான்யூப் கோடு வரை நீடித்திருந்தது.


இவரது ஆட்சிக்காலம் ரோமானிய இலக்கியத்திற்கும், கட்டடக்கலைக்கும் பொற்காலம் ஆகும். ரோமாபுரியைச் செங்கற்களால் பார்த்தேன், அங்கு பளிங்குக் கற்களை விட்டுச் சென்றேன் என்று பெருமிதத்துடன் இவர் கூறிக்கொண்டார். இவருக்கு பின்னர், காலிகுலா, நீரோ போன்ற அரசர்கள் ரோமை ஆண்டனர்.

பல்வேறு உள்நாட்டுப் போர்கள் முடிவுக்கு வந்து, அகஸ்டஸ் ஆட்சியுடன் தொடங்கிய உள்நாட்டு அமைதி இருநூறு ஆண்டுகள் நீடித்தது. அமைதியும், வளச்செழிப்பும் மிகுந்த இந்த 200 ஆண்டுக் காலத்தில், அகஸ்டஸ்,மற்றும் மற்ற ரோமானியத் தலைவர்கள் வெற்றி கொண்ட நாடுகளில் ரோமானியப் பண்பாடு ஆழவேரூன்றி ஆல்போல் பரந்து விரிந்தது. பண்டைக் காலப் பேரரசுகள் அனைத்திலும் மிகவும் புகழ் வாய்ந்தது ரோமானியப் பேரரசேயாகும். பண்டைய நாகரிகத்தின் உச்ச நிலையாக ரோமானியப் பேரரசு விளங்கியது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள். கிரேக்கர்கள் போன்ற பண்டைய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்ற வடிகாலாகவும் ரோமானியப் பேரரசு திகழ்ந்தது.

ரோம் பேரரசின் கிழக்கு எல்லையில் இருந்த அதன் மாநிலம் பாலஸ்தீனம். அகஸ்டஸ் ஆண்ட காலத்தில், அங்கு பெத்லகாம் என்ற இடத்தில் உலகம் மறவாத ஒரு பெருமகன் பிறந்தார்; அவர் தாம் யேசு கிறிஸ்து!

அகஸ்டர் சீசரின் பெயருடன் கூடிய ஒரு வசனம் குறிப்பு பைபிளின் புதிய ஏற்பாட்டில் வருகிறது. இது வேதாகமம் ஒரு சரித்திரபுத்தகம் என மீண்டும் நிரூபிக்கிறது.

லூக்கா:2:1. அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் (அகஸ்டஸ் சீசரால்) கட்டளை பிறந்தது.

Luke:2:1. And it came to pass in those days that a decree went out from Caesar Augustus that all the world should be registered.

Friday, April 22, 2011

கலாத்தியர் 6:14 வால்பேப்பர்


Download this tamil christian wallpaper
கலாத்தியர் 6:14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.

Thursday, April 21, 2011

ஜாமக்காரன் ஏப்ரல் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15


முன்னுரை

“ஒவ்வொரு முக்கியமான கட்டங்களில் அந்தந்த சபை விவரங்களை என் வாசகர்கள் அறியவேண்டி விளக்குகிறேன்.”

“எனக்கு CSI மட்டுமல்லாமல், எல்லா சபைகளிலும் ஆயிரக்கணக்கில் வாசகர்கள் உண்டு. அவ்வப்போது ஒவ்வொரு சபைகளின் பிரச்சனைகளைக் குறித்தும் எழுதுகிறேன், விவரங்களை அறிவிக்கிறேன்.”

”ஆகவேதான் பவுல் கூறுகிறதைபோல் எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்கிறது. 2கொரி 11:28 என்கிறார். அன்றாட சுமையாய்யிருக்கிறது. 2கொரி 11:28 (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) ஆகையால் அருமையானவர்களே! ஆண்டவரின் வருகையும், நம் வயதும் ஏற ஏற மரணமும் நம்மை நோக்கி நெருங்கிவந்துக்கொண்டிருக்கிறது. ஆகவே நாம் எல்லாவற்றையும் சந்திக்க தைரியமுடையவர்களாய் நம்மை எல்லா நிமிடமும் ஆயத்தப்படுத்திக்கொள்வோம் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

20,00,00,000 கோடிகள் இந்திய ஆட்சியில் ஊழல்
”பிரதமர் நல்லவர்தான், ஆனால் நடவடிக்கை எடுக்கும் தைரியமில்லாதவராக, ஆளுமைதிறமை இழந்தவராகிப்போனார். நடவடிக்கை எடுக்கமுடியாதவராக, கைகள் கட்டப்பட்டவராக ஆகிப்போனபின் இவருக்கு பதவி எதற்கு? உள்ள நல்ல பெயரையும் காப்பாற்றிக்கொள்ள தன் பதவியை ராஜினாமா செய்துவிடுவதுதான் நாட்டுப்பற்று உள்ளவருக்கு நல்ல அடையாளம் ஆகும்”

கிறிஸ்தவ CSI சபைகளில் மெகாஊழல் கோடிக்கணக்கில்...
(CSI சபை அல்லாதவர்கள் இந்த கட்டுரையை வாசிக்கவேண்டாம்)

யார் அந்த அந்திக்கிறிஸ்து?
"இயேசு தாம் பிறப்பதற்கு யூத குலத்தைத் தேர்ந்தெடுத்ததைப்போல, அந்திக்கிறிஸ்துவும் யூத குலத்தில்தான் பிறப்பானா?"

“யூதர்களுக்கு தாங்கள் மாத்திரமே கடவுளின் நேரடி வாரிசுகள் என்ற எண்ணமும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. இயேசுவின் மூலம் நாங்களும் கடவுளின் பிள்ளைகள்தான் என்று விவாதிப்பீர்களேயானால் வேறு வேலையைப் பார்க்க போய்விடுவார்கள். அதை எவ்வளவு விளக்கினாலும் நம்பமாட்டார்கள்.”

“யூதர்களுக்கு அதிபதியாக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிபதியாக இருக்கவேண்டுமானால் அது ஒரு யூதனாகத்தான் இருக்கவேண்டும். இயேசுவை இன்றளவும் யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததற்கு காரணம். இயேசு முழுமையான யூதரல்ல என்று அவர்கள் நினைத்ததேயாகும்.”

“வெளிப்படப்போகும் அந்திக்கிறிஸ்து கிறிஸ்துவின் போலியான மாதிரி என்பதால் அவன் கிறிஸ்துவைப்போலவே தன்னையும் யூதகுலத்திலிருந்தே வெளிப்படப்பண்ணவேண்டும். வேறொரு குலத்தில் பிறந்த ஒருவரையும் யூதர்கள் கிறிஸ்து என்றோ, தங்கள் மேசியா என்றோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ”

கேள்வி - பதில்
“பூமியதிர்ச்சி உண்டாகும் பூமியின் (பெல்டில்) அமைப்பில் ஜப்பான் அமைந்தால் எப்போதும் அந்த நாட்டில் பூமியதிர்ச்சியும், எரிமலை வெடிப்பதும், சுனாமி அலை வருவதும் அவர்களுக்கு சர்வ சாதாரணம். இதற்கு ஒரு தீர்க்கதரிசனம் தேவையில்லையே. செய்திதாள்களை பார்த்தாலே போதும்.”

“இவர்கள் யாவரும் பத்திரிக்கை செய்தி வாசிப்பவர்கள் என்பதையும், இவர்கள் தீர்க்கதரிசிகள் அல்ல என்பதையும் இனியாவது உணருங்கள்.”

”உலகத்தின் முடிவும் கிறிஸ்துவின் வரவும் மிகவும் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நூற்றுக்குநூறு உண்மைதான். ஆனால் மாதத்தையோ, வருடங்களையோ யாருமே குறிப்பிடமுடியாது. குறிப்பிடக்கூடாது.”

எனக்கு சம்பந்தமில்லை
”ஜாமக்காரனிலிருந்து யார், எதை போட்டோகாப்பி எடுத்து எத்தனை பேர்களுக்கு அனுப்பினாலும் எனக்கு பிரச்சனையில்லை. மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது ஆண்டவருக்கும் மகிமை.”

விசேஷ ஜெபம் தேவை
”3 நாட்கள் சாப்பாடு இல்லை, பால் இல்லை, குடிநீர் இல்லை, ஆனால் ஜப்பானில் ஒரு இடத்திலும் கடைகள் சூறையாடப்பட்டதாகவோ, கடைகள் உடைக்கப்பட்டு பொருட்களை கொள்ளையடித்ததாகவோ ஒரு நிகழ்ச்சியும் நாம் கேள்விப்படவில்லை.”

”உண்மையான தெய்வத்தை அறியாத அந்த மக்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு மிகவும் பாராட்டதக்கது ஆகும்.”

“அமெரிக்கா குண்டுவீச்சினால் உண்டான பாதிப்பிலிருந்து உடனே எழுந்து உலகத்தின் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்த அந்த நாடு இம்முறை ஏற்பட்ட பேரிழப்பில் மக்கள் சோர்ந்துவிடாதபடி இருக்க நம் ஜெபம் அவர்களுக்கு தேவை. ஜப்பான் மக்களுக்காக ஜெபிப்போம்.”

மேலும் படிக்க http://jamakaran.com

Wednesday, April 20, 2011

வேதத்தை உறுதிப்படுத்தும் நெடுஞ்சாலைக்குறியீடுகள்

கடந்த சிலவருடங்களில் மட்டும் மெட்ராஸ் சென்னையாகிவிட்டது, பம்பாய் மும்பையாகிவிட்டது, கல்கத்தா கொல்கொத்தாவாகிவிட்டது. இப்படி நம் நாட்டு பல பட்டிணங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் இஷ்டத்துக்கும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்க, பரிசுத்த வேதாகமம் உண்மை அதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களெல்லாம் உண்மை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் சான்றாக புனித வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஊர்களும் பட்டணங்களும் எல்லாம் இன்றைக்கும் பெயர்மாறாமல் அப்படியே இஸ்ரவேல் தேசத்தில் இருக்கின்றன.பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும் எருசலேம்,நாசரேத்,பெத்லகேம்,கப்பர்நகூம்,எரிகோ இப்படி பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஊர்களெல்லாம் அப்படியே இஸ்ரேல் தேசத்தில் இன்றைக்கும் இருப்பது நமக்கு எடுத்துரைப்பது என்ன? விவிலிய புத்தகம் ஒரு இதிகாசமோ, காப்பியமோ அல்லது ஒரு கட்டுக்கதையோ அல்ல. அது ஒரு வரலாற்றுப் புத்தகம். அதில் குறிப்பிடப்பட்டனவையெல்லாம் வரலாற்று நிஜங்கள் என்கின்றன. அதற்கு சான்றாகத் தான் இந்த ஊர்களும் அதன் பெயர்களும் இன்றைக்கும் அதே நிலையில் நிலைத்து நிற்கின்றன.மூடனோ அதை உணரான்.(சங்கீதம்:92:6)

மத்தேயு 21:10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

மத்தேயு 21:11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

யோவான் 7:42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.

லூக்கா 4:31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

மத்தேயு 20:29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.


Tuesday, April 19, 2011

இதுவல்லவா உன் வாழ்க்கை!

Title

Page 2

Page 3

Page 4

Page 5

Page 6

Page 7

Page 8

Page 9

Page 10

Page 11

Page 12

Page 13

Page 14

Page 15

Page 16

Page 17

Page 18

Page 19

Page 20

Page 21

Page 22

Page 23
"இதுவல்லவா உன் வாழ்க்கை!" "This Was Your Life" tract in tamil by Chick