Friday, July 31, 2015

2015 செப்டம்பரில் என்ன நடக்கும்? 2015 செப்டம்பர் மாதத்தை குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் சூடாக‌ பரவி வருகின்றன.யூதர்கள் காலண்டரில் ஷெமீட்டா எனப்படும் 7 வருட சுழற்சி செப்டம்பரில் முடிவடைவதாலும் அடுத்த 7 வருட சுழற்சி தொடங்குவதாலும் கடந்த கால வரலாற்று பதிவுகளின் படி இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பங்குசந்தை வீழ்ச்சி இருக்கலாம் என ஒரு சாரார் ( Jonathan Cahn) கணிக்கிறார்கள். அது போல இந்த செப்டம்பரில் யூதர்களின் ஜீபிலி ஆண்டு வருவதால் அதாவது ஏழு ஏழாண்டுகள் (49) முடிவுருவதால் இஸ்ரேல் தேசப்பகுதியில் மாபெரும் புவியியல் மாற்றங்கள் வரலாம் என கணிக்கிறார்கள். இதுவும் கடந்த காலங்களில் அப்படியே நடைபெற்றுள்ளதாம். இது போக செப்டம்பரில் பிளட் மூன் எனப்படும் நிலவு சிவப்பாகும் நிகழ்வும் வரவிருக்கிறது. பொதுவாகவே பிளட் மூன் தோன்றும் கால‌ங்களில் மிகப்பெரிய சம்பவங்கள் பூமியில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. செப்டம்பரில் மாபெரும் விண்கல் ஒன்று அட்லாண்டிக்கடலில் வீழ்வதால் உண்டாகும் சுனாமியால் அமெரிக்காவின் நியூயார்க் உட்பட கிழக்கு கடலோர பகுதிகள் நீரில் மூழ்கிப்போகும் என்பது இன்னொரு கணிப்பு.இதுகுறித்து அநேகர் தரிசனங்கள் சொப்பனங்கள் கண்டதாக இணையத்தில் தகவல்கள் நிரம்பியுள்ளன. சமீபத்தில் வாசிங்டன் வந்த சகோ மோகன் சி லாசரஸ் அவர்களும் கூட இது போன்ற அழிவுவொன்றும் அதை தொடந்து எழுப்புதலும் அமெரிக்காவில் வருவதாக அறிவித்தார். இந்த ஈஸ்ட் கோஸ்ட் சுனாமி அழிவிற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மாபெரும் ஜேட் கெல்ம் எனப்படும் இராணுவ பயிற்ச்சியை துணைக்கு அழைக்கிறார்கள். பெடரல் ரிசர்வும் வருங்கால இயற்கை பேர‌ழிவுகளுக்கு பயந்து தனது தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து சிக்காகோவுக்கு மாற்றியிருக்கிறார்களாம். ஸ்பானிஷ் போதகர் (Efrain Rodriguez) ஒருவரின் தீர்க்கதரிசனங்கள் இங்கு பேசப்படுகின்றன. அவரது கூற்றுப்படி போர்ட்டோரிக்கோவில் விழம் விண் கல்லினால் அமெரிக்கா அதோகதியாகிவிடும் என எச்சரிக்கிறார். ஆனால் அவர் காலம் நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. கட்டாயம் இது நடக்கும் என்கிறார். ஒரு அமெரிக்க பெண் ஊழியர் (Patricia Green) கூட‌ இதே சம்பவத்தை கண்டதாகவும் அதுவும் தற்போதைய அமெரிக்க அதிபரின் காலத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறார். கலிபோரினியா முதல் வடக்கே வாசிங்டன் வரையிலான மேற்கு கடலோர பகுதி மக்கள் மாபெரும் நிலநடுக்கம் மற்றும் அதை சார்ந்த சுனாமிக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் உண்மை. இது தவிர விஞ்ஞானியும் வேதாகம பிரியருமான சர் ஐசக் நியூட்டன், அவரது கணக்கீடு ஒன்று செப்டம்பர் 2015க்கு வந்து நிற்கிறதாம். பிரபலமான யூத ரபி (Chaim Kanievsky) ஒருவர் கூட‌ சீக்கிரமாக மெசையா (அதாவது கிறிஸ்தவர்கள் சொல்லும் அந்திகிறிஸ்து) வருகிறார் சீக்கிரமாக எல்லா யூதர்களும் இஸ்ரேலுக்கு வாருங்கள் என கூறியிருக்கிறார். இப்படி கோர்வையாக சொல்லப்படும் காரியங்கள் மிக அநேகம். உலக சூழல்களும் கூட‌ கிறிஸ்துவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எதிராக வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.வணங்கா கழுத்துள்ள ஜனங்களாகவும் கிறிஸ்துவுக்கு எதிராக துணிகரமுள்ளவர்களாகவும் ஜனங்கள் மாறியிருக்கிறார்கள். என்ன நடக்க போகுது எப்படி நடக்க போகுது தேவன் ஒருவரே அறிவார். எது எப்படியோ. கிறிஸ்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன். ஏனென்றால் அவன் இங்கே கண் மூடும்போது கண் விழிப்பது அங்கே அல்லவா.


Thursday, July 30, 2015

The Greatest Man in history is Jesus.


Tuesday, July 28, 2015

தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர்..; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை. II சாமுவேல் 7:22


We remember Dr.Abdul Kalam. Dear Friends, when I am talking to you, I am reminded of the Biblical story of the "Lost sheep", as said by The Jesus Christ. "If anyone of you has a hundred sheep and one of them gets lost, what will you do? Won?t you leave the ninety nine in the field and go and look for the lost sheep until you find it, and when you find it, you will be so glad that you will put it on your shoulder and carry it home. Then you will call in your friends and neighbors and say, let us have a feast, I have found my lost sheep." As the Lost Sheep is most important for the Shepherd, the message for every citizen of our country from this story is that you may find around you a house which is not lit. Please help to light that house. - Dr APJ Abdul Kalam அருமை நண்பர்களே, உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஏசு கிறிஸ்து சொன்ன தொலைந்த ஆடு என்ற பைபிள் கதை என் நினைவுக்கு வருகிறது. உங்களிடம் உள்ள 100 ஆடுகளில் ஒன்று தொலைந்து போனால் என்ன செய்வீர்கள்? மீதமுள்ள 99 ஆடுகளையும் வயலிலேயே விட்டு விட்டு, தொலைந்த அந்த ஒன்றை தேடிச் செல்வீர்கள்தானே. அந்த ஆடு கிடைக்கும் வரை தேடிக்கொண்டே இருப்பீர்கள். அந்த ஆடு கிடைத்து விட்டால் அளவற்ற மகிழ்ச்சியுடன் அதை வாரி அணைத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டு வீடு திரும்புவீர்கள். பிறகு உங்களது நண்பர்களையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் அழைத்து என் ஆடு கிடைத்து விட்டது, இதை கொண்டாட எல்லோரும் என் வீட்டுக்கு விருந்து உண்ண வாருங்கள் என்று அழைப்பீர்கள். ஆடு மேய்ப்பவனுக்கு தொலைந்து போன ஆடு மிக முக்கியம். இந்த கதை நமது நாட்டில் உள்ள குடிமகனுக்கும் ஒரு செய்தியை சொல்கிறது. உங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஒரு வீடு விளக்கில்லாமல் இருண்டிருக்கலாம். தயது செய்து அந்த வீட்டை ஒளியேற்ற உதவுங்கள். - டாக்டர் அப்துல் கலாம்


Saturday, July 25, 2015

சிலரின் புத்திசாலித்தனமான கேள்வி: ஏவாளை வஞ்சித்த‌தினால் தான் பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன என்றால் ஏவாளை வஞ்சிப்பதற்கு முன்னால் கால்களால் அவை நடந்து சென்றனவா? இக்கேள்விக்கு விஞ்ஞானம் இப்போது பதில் சொல்லுகிறது. May be என்று. ஆதியாகமம் 3:14,15 "கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்..என்றார்" அது அப்படியே ஆயிற்று. வேதம் சத்தியம். அதை நம்பியோர் ஒருபோதும் வெட்கப்பட்டு போனதில்லை


Thursday, July 23, 2015

கடுகினும் சிறிது கொடுக்கும் நம்பிக்கையோ கடலினும் பெரிது.


சிக்கனை சாப்பிடலாம் என‌ சொல்லிக்கொடுத்தது இஸ்ரேல். அதில் குண்டுவைக்கலாம் என‌ சொல்லிக்கொடுத்தது இஸ்லாம். வேதாகம் சொல்லுகிறது "நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்" லூக்கா 6:45


Wednesday, July 22, 2015

Thursday, July 16, 2015

பெரிய ஒப்பந்தம் எல்லாம் போடுறீங்களே. மூன்று அமெரிக்க பிரஜைகளை ஈரான் அநியாயமாக சிறையில் மாதக்கணக்காக அடைத்துவைத்திருக்கிறதே அதற்கு எதாவது பண்ணியிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு இவரிடம் இருந்து வந்த பதில் "நான்சென்ஸ்". அந்த மூவரில் Saeed Abedini என்பவர் ஒரு பாஸ்டர். ஈரானில் தான் பிறந்த ஊரைக் காணப் போன அவரை மீண்டும் அமெரிக்கா திரும்பவிடாமல் சிறையில் அடைத்துவிட்டனர் ஈரானிலுள்ள மதவாதிகள். மனைவியும் குழந்தைகளும் இன்னும் காத்திருக்கின்றனர் நம்பிக்கையோடு. சங்கீதம் 118:9 பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.


Friday, July 10, 2015

நாம் நன்றாக‌ கூர்ந்து கவனித்தால் உலகத்தில் இன்றைக்கும் நாம் பின்பற்றக்கூடிய பல காரியங்கள் பைபிளில் இருந்து வந்ததை நாம் அறியலாம். நீங்கள் படத்தில் காணும் கம்பம் ஒன்றில் ஏற்றப்பட்டிருக்கும் பாம்பு சித்திரம் உலகமெங்கும் மருத்துவ உலகில் பிரபலம். பெரும்பாலும் மருத்துவத்துறையினர் இதனையே லோகோவாக பயன்படுத்துவார்கள். இச்சித்திரம் கூட ஒரு வேதாகம சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பழக்கத்தில் வந்ததே. இஸ்ரேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பிரயாணம் பண்ணும் போது மோசேயிடம் இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை எங்களை எகிப்து தேசத்திலிருந்து எங்களை வரப்பண்ணினதென்ன? என முறு முறுக்க தொடங்கினார்கள். இதனால் கர்த்தர் கொள்ளிவாய்ச்சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைத்தான். அன்றைக்கு சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல இயேசு கிறிஸ்துவும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரை நோக்கி பார்த்தவர் யாவரும் பிழைப்பார்கள். எண்:21:5-9, யோவா:3:14,15


Thursday, July 09, 2015

நியூயார்க் சென்ட்ரல் பார்க் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் இந்த மாபெரும் சுவிசேஷ பெருவிழாவை கர்த்தர் அபரிதமாக ஆசீர்வதிக்க ஒரு நிமிடம் ஜெபிப்பீர்களா? தேவ மனிதர் லுயிஸ்பலாவை கர்த்தர் வல்லமையாக எடுத்து உபயோகிக்கவும் அநேக ஆத்துமாக்கள் இந்த விழாவின் மூலம் ஆதாயம் பண்ணப்படவும் இந்நகரமும் இத்தேசமும் கர்த்தருக்குள் பரிசுத்தப்படவும் ஜெபிப்பீர்களா? இத்தேசம் செல்லும் வழியே உலகம் செல்லும் வழியும் கூட. இத்தேசம் தேவபயத்திலும் நன்னெறிகளிலும் நடத்தப்பட‌ தயவுகூர்ந்து ஜெபியுங்கள். யாருக்குத்தெரியும் இவ்விழாவே இந்நகருக்கு கர்த்தர் கொடுக்கும் கடைசிவாய்ப்பாகவும் இருக்கலாம். "ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம்" லூக்கா 13:8,9


புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இந்தியா உருவாகும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். So far அப்படி என்னவெல்லாம் கண்டுபிடித்திருக்கிறார்கள் தெரியுமா? அது ஒரு endless list. சமீபத்திய கண்டுபிடிப்பு தேசிய கீதத்தில் உள்ள‌ தவறு. ஆடத்தெரியாதவனுக்கு கூடம் கோணல். மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்.அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு.மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும். நீதிமொழிகள் 18


பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் யாத்திராகமம் 14:13,14


Tuesday, July 07, 2015

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். சங்கீதம் 115:4-9


உன்னைக் காக்கிறவர் உறங்கார். இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம் 121:3,4