Saturday, July 20, 2013

வேதாகம வார்த்தைகளின் படி எகிப்திய நைல் நதி வற்றுமா?2700 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தான் இறுதி காலங்களில் எகிப்தின் நைல் நதி வற்றிப்போகும் என்றும் அதனால் நடக்கப்போகும் பின் விளைவுகளை பற்றியும் விவரித்துக் கூறியிருக்கிறான். இதை ஏசாயா 19‍ ம் அதிகாரத்தில் படிக்கிறோம். அது எப்படி நிஜமாகப் போகிறதுவென இன்றைய செய்திதாள்களை படித்து நாம் தெரிந்து கொள்ளலாம். நம் வேதாகமம் இன்றைய நாட்டு நடப்புகளை அன்றே முன்னுரைத்திருக்கின்றது.
அதுவே நம் வேதாகமத்தை மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபடுத்தியும் காண்பிக்கின்றது.

எகிப்தின் பாரம்... நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்.. அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம் ....ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும். நதியோரத்திலும் நதிமுகத்திலுமிருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம். மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள்.(ஏசாயா:19:58)
Ethiopia Diverts Nile River for Giant Dam, Raising Fears in Egypt, Sudan - As Bible stated Nile in Egypt dring up? Isaiah:19:5-8

நிச்சயமாக பதில் உண்டு


அன்னாள் அழுதாள் - சாமுவேல் பிறந்தான்.

ஆகார் அழுதாள் - தண்ணீர் துரவைக் கண்டாள்.

எசேக்கியா அழுதான் - ஆயுளில் 15 ஆண்டுகள் கூட கிடைத்தது.

நெகேமியா அழுதான் - எருசலேமின் அலங்கம் கட்டப்பட்டது.

எஸ்தர் அழுதாள் - யூதருக்கு அழிவிலிருந்து விடுதலை கிடைத்தது.

பாபிலோனிலிருந்த யூதர்கள் அழுதார்கள் - விடுதலை பெற்று ஒரு ஜாதியாய் நிலைநாட்டப் பட்டார்கள்.

மகதலேனா மரியாள் அழுதாள் - உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவதாக‌ தரிசித்தாள்.

நீ ஏதற்காக‌ அழுகிறாய் ??
நிச்சயமாக பதில் உண்டு


உன் நம்பிக்கை வீண்போகாது!

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18


தேவன் தெரிந்துகொண்ட...

யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான்
பேதுருவுக்கு சட்டென‌ கோபம்வ‌ரும்
தாவீது பிறன் மனை நோக்கினான்
நோவா குடித்து வெறித்திருந்தான்
யோனா தேவ‌னை விட்டு விலகி ஓடினான்
ப‌வுல் கொலை செய்கிறவனாயிருந்தான்
மிரியாம் முறுமுறுத்தாள்
தோமா ஒரு ச‌ந்தேகப்பேர்வ‌ழி
சாராளுக்கு பொறுமை கிடையாது
மோசே திக்குவாயன்
ச‌கேயுவோ குள்ள‌ம்
ஆபிர‌காம் வ‌ய‌தான‌வனாயிருந்தான்

ஆனாலும் தேவ வார்த்தை சொல்வது என்ன தெரியுமா?

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."
II கொரி:12:9

தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில்  பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 5:2