Friday, March 17, 2006

மாதா வழிபாடு

கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் யேசுவின் தாயாகிய மரியாளை வழிபடுகிறவர்களாக உள்ளனர் (மேரி மாதா) .தங்கள் பிரார்த்தனைகளில் மரியாளை வாழ்த்துவதுடன் வணங்கவும் செய்கின்றனர்.இது தவறல்லவா என கேள்வி எழுப்பினால் நமக்கு கிடைக்கும் விடை "யேசுவை நேரடியாக வேண்டிக்கொள்வதற்கு பதிலாக அன்னை மேரி வழியாக யேசுவை வேண்டிக்கொள்கிறோம்.பொதுவாக எந்த தாய் பேச்சையாவது கேட்காத மகன் உண்டோ எனவே உடனே எங்கள் பிரார்த்தனை கேட்க்கப்படும்"என்கிற ரீதியில் பதில் கிடைக்கும்.

இதை சரியாக புரிந்து கொள்ள யேசு செய்த முதலாம் அற்புதமாகிய கானாவூர் கல்யாண வீட்டு சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அங்கே யேசுவும்,மேரியும் இருந்தார்கள்.

ரசம் குறைந்து போனபோது கல்யாண வீட்டுக் காரர்கள் மேற்க்கண்ட பிரிவினர் செய்யும் தவறு போன்றே யேசுவை வேண்டிக்கொள்ளாமல்,மேரியை வேண்டிக்கொண்டனர்.அதற்கு அந்த அம்மா அளித்த பதில் "அவர் (யேசு) உங்களுக்குஎன்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள்"என்பது தான்.

உண்மையில் மரியாள் இந்த பிரிவினர் நம்புவது போலவே யேசுவை கல்யாண வீட்டுக்காரர்களுக்காக வேண்டிக்கொண்டாள்.அதற்கு யேசுவின் பதில் " ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை" என்பதாக இருந்தது.

ஆக இந்த சம்பவம் சொல்வது போல மரியாள் யேசுவிடம் பிறருக்காக வேண்டிக்கொள்ள முடியாது என்பதுடன் மரியாள் சொல்லும் புத்திமதி "யேசுவின் வார்த்தை படி செய்யுங்கள்" என்பதே.அதை விட்டு விட்டு அந்த அம்மாவையே வாழ்த்துவது வழிபடுவது விக்கிரக வழிபாட்டுக்கு சமம்.

மேலும் ஒரு பைபிள் சம்பவம்.

(லூக்கா:11:27-28) யேசுவை பார்த்து ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு பெண் "உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகள்"என்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு யேசுவின் பதில்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார்.

அதாவது சாதாரண மனிதனும் மேரியைவிட பாக்கியவான்கள் ஆகலாம் எப்படி என்றால் இறைவன் வார்த்தைபடி நடப்பதன் மூலம் என்பதே அவர் கருத்து.

யோவான் 14:13. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

அதனால் யேசுவின் வழியாய் பிதாவை வேண்டிக்கொள்ளுங்கள்.அதுவே சரியான கிறிஸ்தவ வழிபாடு.இடையே எவரும் தேவையில்லை.

14 comments:

  1. உங்கள் தீவிர வாதம் சரியானதாகத் தெரியவில்லை. மேரி பற்றி பைபிளில் சொல்லியிருப்பதெல்லாவற்றையும் சொல்லவில்லையே?

    ஏசு கானா கல்யாணத்தில் உதவி செய்கிறாரே.

    திருவெளிபாட்டில் பல குறிப்புக்கள் மேரி பற்றியிருக்கிறது.

    பைபிளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம், அதை நாம்தான் எழுதின மாதிரி சொல்வது நல்லா படல. பைபிள் தமிழில் எழுதப் படல ஆங்கிலத்திலுமல்ல மொழிபெயர்ப்பில் தொலைந்துபோன உண்மைகள் பல.

    அடுத்தவர் நம்பிக்கையை குறத்துத் தான் உங்கள் நம்பிக்கையை வளர்க்க வேண்டுமா?

    மரியாளை ஏன் போற்றவேண்டும் (வழிபட வேண்டுமென்று கத்தோலிக்கம் கூறுவதில்லை) என்பதற்கி பைபிளை விட பெரிய நூல்களெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன, அவையும் பைபிளிலிருந்துதான் தொகுக்கப்பட்டுள்ளன.

    அருள் நிறந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே.. பெண்களில் பேறு பெற்றவள் நீ என கடவுளின் தூதன் சொல்லுவது பைபிளில் படித்ததில்லையா?

    வீணான இந்த மாதிரி விவாதங்களை தவிருங்கள்.

    ReplyDelete
  2. நீங்க Protestant என்று நினைக்கிறேன் :).

    >>>>யேசுவின் வழியாய் பிதாவை

    யேசு நமக்காக தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுத்தருகிறார். அப்ப எதற்காக யேசுவை வேண்டி வணங்க வேண்டும், அவர் (நம்) தந்தையையே கேட்கலாமே? அது இன்னும் லாஜிக்கலாக இருக்குமே. இல்ல அந்த பிதாவுக்கு நாம் கேட்பது காதில் விலாதா?


    Bottomline - ஆன்மீகம்ன்னு வந்துட்டா ஆராயக்கூடாது!

    .:டைனோ:.

    ReplyDelete
  3. Cyril அலெக்ஸ் மற்றும் டைனோ-
    உங்கள் comment-களுக்கு மிக்க நன்றி.
    உங்கள் மேலான கருத்துக்களை மதிக்கிறேன்.பாராட்டுகிறேன்.
    யாரையும் புண்படுத்துவது என் நோக்கமாய் இருக்கவில்லை.
    புண்படுத்தியிருந்தால் மிகவும் வருதுகிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. யேசு நமக்காக தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுத்தருகிறார். அப்ப எதற்காக யேசுவை வேண்டி வணங்க வேண்டும், அவர் (நம்) தந்தையையே கேட்கலாமே? அது இன்னும் லாஜிக்கலாக இருக்குமே. இல்ல அந்த பிதாவுக்கு நாம் கேட்பது காதில் விலாதா

    நீங்க RC என்று நினைக்கிறேன்?

    >>>>நீங்கள் முக்கடவுள் கொள்கையை எதிற்ப்பவற்கள் எண்று நினைக்கிறேன்???

    உங்களுக்கு பிதா,குமாரன்,பறிசுத்தஅவியைவிட மெரி உயந்தவறாகதொண்றுகிறதொ.

    ReplyDelete
  5. Hedwige Suresh FrancisJanuary 30, 2011 8:16 AM

    பைபிளின் வசனங்களை மேற்கோள் காட்டி சில பிரிவினர் கிறிஸ்தவ மத த்தினுள் பிரிவினையையும் வேண்டாத விவாதங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருப்பது மிகவும் வருந்துதற்குரியது. வீண்விவாதங்களை அன்றைய கால பரிசேயர்களும், இயேசுவை சோதித்த சாத்தானும் திரு வசனங்களை மேற்கோள் காட்டி விவாதித்த விதம் இன்றைய சில குழுக்களிடமும் காண முடிகிறது. இயேசு போதித்த அன்பு, உண்மை, இறைபக்தி போன்ற இன்றியமையாத காரியங்கள் புறந்தள்ளப்பட்டு அவரின் குடும்ப பின்னணி என்ன அவரின் சொந்த பந்தங்கள் யாரெல்லாம் என்ற விவாதங்கள் எதற்க்கு? இவையெல்லாம் மத த்தின் பெயரால் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிப்பவற்களுக்கும் வீணான குழப்பவாதிகளுக்கும் உரிய அணுகு முறையாகும். இன்னும் சொல்லப்போனால் தனிப்பட்ட முறையில் ஆதாயம் தேடுபவர்கள் தங்கள் சுய நலத்திற்காக மக்களை குறிப்பாக கிறிஸ்தவ விசுவாசிகளை தங்களின் வலையில் வீழ்த்த நடத்தும் மிக கேவலமான போராட்டம் மட்டுமே இது. உண்மையான் கிறிஸ்தவ விசுவாசிகள் இதை நன்கு அறிவர். அனைத்தையும் உருவாக்கி காத்து வழி நடத்தும் எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன் தூய ஆவியானவரின் பெயரால் அனைத்து மக்களுக்கும் சாந்தியும் சமாதானமும் ஆகுக. ஆமென்.

    ReplyDelete
  6. /////நீங்க Protestant என்று நினைக்கிறேன் :).

    >>>>யேசுவின் வழியாய் பிதாவை

    யேசு நமக்காக தன் தந்தையிடம் கேட்டுப் பெற்றுத்தருகிறார். அப்ப எதற்காக யேசுவை வேண்டி வணங்க வேண்டும், அவர் (நம்) தந்தையையே கேட்கலாமே? அது இன்னும் லாஜிக்கலாக இருக்குமே. இல்ல அந்த பிதாவுக்கு நாம் கேட்பது காதில் விலாதா?


    Bottomline - ஆன்மீகம்ன்னு வந்துட்டா ஆராயக்கூடாது!/////

    sariana pathil.......

    ReplyDelete
  7. If we want to talk directly to lord, we will die (Eg.savul lost his eyes when lord directly talked to him)... so thats the reason we get our needs completed by praying to jesus

    ReplyDelete
  8. அன்பு சகோதரர்களே மரியாள் வழிபாட்டிற்கு சாதகமாக உங்களால் ஒரு வசனத்தையும் கூறமுடியாது. ஏனென்றால் அவர் ஒரு சாதாரண பெண். மரித்தவர்களில் இனி ஒரு பயனும் இல்லை. பிரசங்கி 9:5 இல் சொல்லப்பட்டிருக்கிறது மரித்தவர்களால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் பேர் முதலாய் மறுக்கப்பட்டிருக்கிறது. மரியாளாக இருக்கட்டும் அன்தோனியாராக இருக்கட்டும். எல்லோரும் மரித்தவர்கள் தானே. பிதாவும் இயேசு கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் வேறு வேறில்லை. பிதாவாகிய தேவன் ஒரே நேரத்தில் இயேசு கிறிஸ்துவாகவும் பரிசுத்த ஆவியானவராகவும் இருக்க கூடியவர். அவர் இருக்கிறவராகவே இருக்கிறார். சிலர் கூறுவார்கள் மரியாள் இல்லையென்றால் இயேசு கிறிஸ்து பிறந்திருக்க மாட்டாராம். யோவான் 1 -. 1 .2 . 3 ஆதியிலே அந்த வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாக்கவில்லை. அதாவது அவர் ஆதியும் அந்தமுமாயிருகிறார். அவரை ஒருவராலேயும் உருவாக்க முடியாது. அவரேயல்லாமல் வேறொருவராலும் நாம் பிதாவினிடத்தில் செல்ல முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தராக இருக்கிறார். அவர் என்றென்றும் அரசாளுகிறார்.

    ReplyDelete
  9. what you is exactly correct Bro. Meshak

    ReplyDelete
  10. மரியா சாதாரண பெண் என்று கூறும் என் அன்பு நண்பர்களிடம் ஒன்றே ஓன்று கேட்கிறேன். இந்த உலகில் பிறந்த பரிபூரண மனிதர் ஒருவர் உண்டு. அவரே நம் ஆண்டவராகிய இயேசு. இதை எல்லாக் கிறிஸ்தவர்களும் விசுவாசிகிறார்கள். உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே தாயின் உணர்வுகளை புரிந்து கொள்கிறான். தாயின் குணங்களே குழந்தைகளிலும் பிரதிபலிக்கிறது. இதற்கு மருத்துவ உலகம் சான்று பகர்கிறது. அப்படியானால் பரிபூரண ஆளுமை உடைய ஒருவரை பெற்ற அன்னையும் பரிபூரணம் பெற்றவள் அல்லவா?

    இதை வாசிக்கும் என் அன்பு ஆன்மீக நண்பர்களே, நம் அன்னையை அழுக்கான வார்த்தைகளால் போது நம் மனம் வேதனை அடைகிறது. கவலை வேண்டாம். நம் அன்னையிடம் ஜெபியுங்கள். ஜெப மாலை கையில் எடுங்கள். இவர்கள் இப்படி தவறான கருத்துகளை பரப்பும் போது தான் சில ஆன்மீக உண்மைகளை அன்னையை நேசிக்கும் மக்களுக்கும் உலகுக்கும் எடுத்து கூற முடியும். நம்பினால் நம்புங்கள்....

    ReplyDelete
  11. Dear friends,
    who are all encouraging mary worship or mary prayer first you should know the 10 commandments which was directly given by our father in the heaven. You can see this in bible EXODUS 20(chapter 20). May god open your eyes.

    ReplyDelete
  12. There may be lot of books in the world but there is only one holy book which was given to us by the holy spirit and it is the HOLY BIBLE. It is fullfiiling what the mankind need. Our real need is heaven. It is showing the WAY to heaven. And the way is jesus(only Jesus).so who all are need to go heaven, its your wish to choose.except jesus all the other stuffs let you to the hell. Because jesus itself told "I am the WAY , the truth, the life." not mary or other angels told like this.

    ReplyDelete
  13. இங்கே சிலர் இந்த பதிவினால் வருத்தப்பட்டிருப்பது தெளிவாக புரிகிறது. இதில் வேதாகமத்திலுள்ள விஷயம்தான் பகிரப்பட்டதேயன்றி சொந்த கருத்தை சொல்லவில்லை.

    ReplyDelete