Thursday, December 24, 2015


A savior is born. Come & See.


பயப்படாதிருங்கள்...இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா:2:10,11


Friday, December 11, 2015

அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே நீரே என் ஆறுதல் என் கோட்டை என் துருகம் - நான் நம்பினவர் என் அடைக்கலம் கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள் நினவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் என் ராஜா என் ரோஜா என் தெய்வம் என் இயேசு நேற்று இன்றும் என்றும் மாறா தேவன் போற்றிப் பாடும் சர்வ வல்ல ராஜன் என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் இயேசு ஒருவாராகப் பெரிய காரியங்கள் செய்பவர் இருளிலிருந்து புதையலை கொண்டு வருபவர் நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரார் எனக்குரியவர் என் இயேசு


Thursday, December 10, 2015


Wednesday, December 02, 2015


Wednesday, November 18, 2015


Friday, November 13, 2015

Saturday, November 07, 2015

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.நீதிமொழிகள் 28:25 Those who trust in the LORD will prosper. Proverbs 28:25


Thursday, November 05, 2015

எருசலேம் மாநகர வீதிகளில் கிடக்கும் இரண்டு சாட்சிகளின் உடல்களை உலக ஜனங்கள் எல்லோரும் பார்ப்பார்கள் என வேதாகமம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிற்று. இப்போது எருசலேமில் லைவ் கேமராவும் வைக்கப்படுகின்றது உலகெங்கும் ஜனங்கள் லைவ்வாக‌ பார்க்க டிவி இன்டர்நெட் செல்போன்களும் ரெடி.


உன் தோளினின்று.. சுமையும், உன் கழுத்தினின்று.. நுகமும் நீக்கப்படும். ஏசாயா 10 27


Thursday, October 29, 2015

"இன்று உன் தோல்விகளை தேவனிடம் சொல் . நாளை உன் வெற்றிகளை பிறரிடம் சொல்வாய்".


Monday, October 26, 2015

முற்றிலுமாக வழக்கொழிந்து மீண்டும் புழக்கத்துக்கு வந்த உலகின் ஒரே மொழி எபிரேய மொழி. அப்படியாக வேதாகமத்தின் ஒரு தீர்க்கதரிசனமும் நிறைவேறிற்று. வேதம் சொல்லுகிறது "அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்" செப்பனியா 3:9


This is how our God works!! நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். II இராஜாக்கள் 3 17 You will see neither wind nor rain, says the LORD, but this valley will be filled with water. You will have plenty for yourselves and your cattle and other animals.2 Kings 3:17


Friday, October 23, 2015

இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். சகரியா 9:12


Thursday, October 15, 2015

**ரஷ்யாவும் ரெடி** ***பெர்சியாவும் ரெடி*** ****வாயில்(ஆயில் எனும்) துறடுகளும் ரெடி**** மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், ... திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்;..அவர்களோடேகூட பெர்சியரும் (ஈரான்), எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம்பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள்.கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள்.எசேக்கியேல் 38:3-6


Friday, October 09, 2015

Tuesday, September 29, 2015

ஜிகாத் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிஜ்ரத் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாடு விட்டு நாடு சென்று உலகமுழுவதும் அவர்கள் மயமாக்கல் தான் ஹிஜ்ரத். குரான் சொல்லுகிறது... "எவர் அல்லாஹ்வின் பாதையில் நாடு கடந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் ஏராளமான புகலிடங்களையும், விசாலமான வசதிகளையும் காண்பார்; இன்னும், தம் வீட்டைவிட்டு வெளிப்பட்டு அல்லாஹ்வின் பக்கமும் அவன் தூதர் பக்கமும் ஹிஜ்ரத் செல்லும் நிலையில் எவருக்கும் மரணம் ஏற்பட்டு விடுமானால் அவருக்குரிய நற்கூலி வழங்குவது நிச்சயமாக அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது" குரான் 4.100


தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். நன்றி தகப்பனே!! (சங்கீதம் 23:4)


Monday, September 21, 2015

முன்பெல்லாம் புத்தகங்களில் எங்கேயோ ஓரிடத்தில் கிறிஸ்துவுக்காக இரத்தசாட்சிகளாக மரித்தோரின் சரிதங்களை படித்து கண்ணீர் வடித்திருக்கிறோம். ஆனால் இன்றோ தினமும் நம் கண் முன்பாகவே கணக்கற்றோர் இரத்த சாட்சிகளாக மடிந்துகொண்டிருக்கிறார்கள் கிறிஸ்துவுக்காக‌. கண்ணீர் விட தான் கண்கள் இல்லை. நாம் அவ்ளோ பிசி.


ஒவ்வொரு செப்டம்பர் 21 ஆம் தினமும் உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒலிவ (Olive) இலையானது அமைதி மற்றும் சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார். இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது. "அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக் கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான் (ஆதி:8:11). ஒரு பெரிய பிரளயத்தின் பின்பு பூமியில் அமைதி திரும்பியதை ஆலிவ் இலையுடன் கூடிய புறா சுட்டி காட்டியதால் இன்றும் அது உலக அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.


Wednesday, September 16, 2015

CERN ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிலையம். உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி எனப்படும் Collider இங்கு தான் உள்ளது. இது நிலத்திற்கு அடியில், தரைக்கு கீழே, 50 முதல், 175 மீட்டர் ஆழத்தில், 17 மைல் நீளத்தில் (27 கிலோ மீட்டர்) மிகப்பெரிய வட்ட சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லைகளின் கீழே உள்ளது. 100 நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனர் எனினும் ஐரோப்பிய மூளையே இந்த திட்டத்தின் முக்கிய மூல காரணம் ஆகும். இதை கட்டியெழுப்ப 64 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாயிற்றாம். இது இப்போது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சோதனை ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த மையம் தான் கடவுள் துகளை கண்டு பிடித்ததாக 2012-ல் அறிவித்தது. அணுத்துகள்களை மோதவிட்டு செய்யப்படும் இந்த ஆய்வு மிக ஆபத்தானது எனினும் பேரண்டம் உருவாகியது குறித்ததான‌ மற்றும் அடிப்படை துகளின் பண்புகள் ஒழுக்கம் முதலியனதான தகவல்களை அறிய விஞ்ஞானிகள் துடிக்கி‍ன்றார்கள்.‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரபல பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். எனினும் கடவுள் துகள் (God particle), இருள் பொருள் (Dark matter),Ghost particle என பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அநேக surprise findings கிடைக்கின்றனவாம். வெளிப்படுத்துதல் 9 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல பாதாளக்குழியை இவர்கள் திறந்து விடப் போகின்றார்களா? வேதம் சொல்லுகிறது "அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது" என. அதை தொடர்ந்து அந்த புகையினால் வந்த வாதைகளையும் படிக்கிறோம். இந்த கொலைடர் இருக்கும் இடம் செயின்ட் ஜெனிஸ் போலி (Saint-Genis-Pouilly) எனும் இடமாகும். படத்திலுள்ள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். அதாவது போலி (அப்போலியோன்) எனும் கடவுளுக்கு கோயில் இருந்த இடம். வேதமும் 11ம் வசனத்தில் சொல்லுகிறது "அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்" என்று. அதுமட்டுமல்லாமல் இந்துத்துவத்தில் அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவனுக்கும் இங்கே சிலைவைத்துள்ளார்கள். CERN-னின் நீல நிற லோகோவை கூர்ந்து கவனியுங்கள் 666 தெரியும். You think these all coincidence?


Monday, September 14, 2015

****மனந்திரும்பாமற்போனால்**** அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் - இயேசு லூக்கா 13:2-5


Friday, September 11, 2015

உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். ஆதியாகமம் 32:9,10


இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய். உபாகமம் 33:29


Thursday, September 10, 2015

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம். யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். ஏசாயா 54:17, 41:14


இஸ்ரேல் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். சீயோனே... சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்..உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சங் 83:4, சக 2:8)


உடற்பயிற்சி செய்வதற்கு அனேக வழிகள் இருக்கும்போது, சந்தேகத்திற்கு இடமானவைகளை நாம் ஏன் செய்ய வேண்டும்? ஆகையால், யோகா பயிற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது!


Wednesday, August 26, 2015

மனிதர்களுக்கு இலக்கம் கொடுத்தார்கள் ஆதார் அட்டை என‌. இப்போது வீடுகளுக்கும் இலக்கமாம்.. செயற்கைக்கோள் கதவிலக்கம்... ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை குடும்பங்கள், ஆண் - பெண், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, வீடுகள், அவற்றிலுள்ள அறைகள், கழிப்பறை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றனவாம். என்னமோ எல்லாமே நல்லதுக்குதான் செய்துகொண்டிருக்கிறார்கள் என நாம் நினைத்துக்கொண்டிருக்க எல்லா தகவலுமே விரல் நுனியில் ஒருவன் அதிகாரத்தின் கீழ் போகவிருக்கிறது. அதற்கு தான் இத்தனை ஆயத்தங்களும். உங்களுக்கு புரிந்திருக்குமே.