Monday, October 26, 2015

This is how our God works!! நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். II இராஜாக்கள் 3 17 You will see neither wind nor rain, says the LORD, but this valley will be filled with water. You will have plenty for yourselves and your cattle and other animals.2 Kings 3:17


1 comment:

  1. மோவாபிய ராஜா, இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாக எழுப்புகிறான் என்று இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் அறிந்துகொண்டு, மோவாபிய ராஜாவுக்கு விரோதமாக இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவும், ஏதோமின் ராஜாவுமாக யுத்தத்துக்காக ஏதோம் வனாந்திரவெளியில் போனார்கள். அவர்கள் ஏழு நாள் சுற்றித்திரிந்தபோது அந்த வனாந்திரத்திலே அவர்களும், அவர்கள் மிருக ஜீவன்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. அப்பொழுது அந்த மூன்று ராஜாக்களும் நம்மை கர்த்தர் இந்த மோவாப் ராஜாவிடம் ஒப்புக்கொடுக்க தான் இப்படி நாம் தண்ணீர் இல்லாமல் வருத்தப்படுகிறோமோ என்று சொல்லி அங்கே இருந்த எலிசா தீர்கதரிசியிடம் போய் தண்ணீர் இல்லாமல் வருத்தப்படுகிற செய்தியை சொன்னார்கள். கர்த்தர் எங்களை இந்த மோவாபிய ராஜாவிடம் ஒப்புக்கொடுக்க வரவழைத்திருக்கிறார் என்றார்கள். இதனை கேட்ட எலிசா தீர்கதரிசி தீர்க்கதரிசனமாக, நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார், இது கர்த்தருக்கு அற்பமான காரியம், மோவாபியரையும் கர்த்தர் உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பர் என்று சொன்னான்.

    அதேபோலவே கர்த்தர் சொன்னபடியே, மறுநாள் காலமே ஏதோமின் வழியாக தண்ணீர் வந்தபடியால் தேசம் தண்ணீரால் நிரப்பினது. மோவாபியர் இந்த மூன்று ராஜாக்களும் யுத்தத்திற்கு வருகிற செய்தியை கேட்டபோது தங்கள் எல்லைகளில் யுத்த வீரர்களை நிறுத்தியிருந்தார்கள். மோவாபியர் காலையில் எழும்பி பார்த்தபோது சூரிய வெளிச்சத்தினால் ஏதோமின் வழியாய் வந்த தண்ணீர் ரத்தம் போல் சிவப்பாய் காணப்பட்டது. அப்பொழுது அந்த வீரர்கள் , நமக்கு எதிராக யுத்தத்திற்கு வந்த ராஜாக்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் பண்ணி மாண்டு போனார்கள் என்று நினைத்து இஸ்ரவேலருடைய பாளையத்திர்கு வந்தார்கள். இஸ்ரவேலரோ எழும்பி மோவாபியரை முறியடித்து பெரிய ஜெயத்தை பெற்று கொண்டார்கள்.

    இந்த வனாந்திரத்தில் தண்ணீர் இல்லாமல், மோவாபியர் கையிலே மடியப்போகிறோம் என்று நினைத்த இஸ்ரவேலருக்கும், ராஜாக்களுக்கும் காற்றும் மழையும் உண்டாகாமல் தண்ணீரை வனாந்திரத்தில் வரச்செய்து ,எதிரிகளின் கண்ணுக்கு அந்த தண்ணீரையே ரத்தமாக காணும்படி செய்து, இஸ்ரவேலுக்கு எதிரிகள் மூலமாகவே ஜெயத்தை கொடுத்த தேவன் இன்று உன்னை பார்த்து, உன் வாழ்விலே காற்றும், மழையும் இல்லாமல் இருக்கலாம், ஆசீர்வாதத்திற்குரிய எந்த அறிகுறிகளும் கூட இல்லாமல் இருக்கலாம். அனாலும் உன் வாழ்வை என்னால் ஆசீர்வாதத்தால் நிர்ப்பமுடியும் என்று சொல்லுகிறார்.அதுமட்டும் அல்ல, இன்று நீ கர்த்தரை நம்பிக்கையோடு விசுவாசித்தால் எந்தக்காரியத்தில் தோல்வியை சந்தித்து இனி என் வாழ்வில் வெற்றியே கிடைக்காது என்று எண்ணினியோ, அதே காரியத்தில் உனக்கு ஜெயத்தை தந்து , அந்த காரியத்தின் மூலமாக உனக்கு எதிராக வந்தவர்கள் வெட்கப்பட்டு போகும்படியாக உன்னை உயர்த்துவதற்கு அவர் உண்மையுள்ளவராய் உன் அருகாமையில் நின்று கொண்டு இருகிறார்.நீ விசுவாசித்தால் நிச்சயமாகவே வெற்றி நிச்சயம்.

    நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்.

    ReplyDelete