Monday, February 21, 2011

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்


Naan nirpathuvum nirmulamagathathum theva kirubaye theva kirubaye Tamil Song written and Sung by Pastor Moses Rajasekar.

நான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும் கிருபையே
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே – 2

காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லில் இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

அக்கினி நடுவினிலே என்னை எரித்திட நேர்ந்தாலும்
தூதனாக நின்று என்னை காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவினிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆற்றித் தேற்றியே அரவணைத்திடும் – 2
மாபெரும் கிருபையே எங்கள் தேவ கிருபையே – 2
-பாஸ்டர்.மோசஸ் ராஜசேகர்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment