Sunday, February 27, 2011

கிரீடத்துக்கு உரிமைக்காரனானவர்

மன்னராட்சி எனும் அரசியலமைப்பு இன்றைக்கு ஒட்டு மொத்தமாக முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது. கேள்வியே கேட்பாரில்லாமல் அல்லது கேள்வியே கேட்க முடியாமல் சர்வாதிகாரமாக அரியணையை பிடித்து கொண்டிருந்தவர்களெல்லாம் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈராக்கின் சதாம் ஆகட்டும் அல்லது டுனீசியாவின் பென் அலி ஆகட்டும் அல்லது எகிப்தின் முபாரக் ஆகட்டும் அல்லது லிபியாவின் கடாபி ஆகட்டும் இவர்களெல்லாருமே முடி
சூடாத மன்னர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். அதாவது கிரீடம் தான் இல்லையே தவிர இவர்கள் அவர்கள் நாட்டு மன்னர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த மன்னர்கள் எல்லாருமே மாறும் உலகச் சூழலில் தங்கள் தங்கள் சிம்மாசனங்களிலிருந்து தள்ளப்பட்டு வருகிறார்கள். இது இன்றைய புது டிரண்ட் அல்ல. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த போது இங்கிருந்த எல்லா குறுநில மன்னர்களும் தங்கள் கீரீடத்தை இழந்தார்கள். இது போலவே சமீபகாலமாக பல நாடுகளிலும் மன்னர்கள் கிரீடங்களை இழக்கும் நிலமை. இந்நிலமை நீடிக்கவே போகின்றது.

பல்கேரிய மன்னர் இரண்டாம் சைமன் “ஒரு நாள் நான் அரியணையில் அமரதான் போகிறேன்” என்று 18 வயதில் முழங்கினார். இன்று சாதுவாகி மாட்ரிட் நகரில் வக்கீல் தொழில் நடத்துகிறார்.

அங்கேரி மன்னர் ஆர்ச்ச் டியூக் ஓட்டோ ”இன்று அரியணையில் அமர்வதெல்லாம் நடக்காத காரியம்” என்று கூறுகிறார்.

பிரஷ்யா மன்னர் (ஜெர்மன்) லூயி வர்டினாண்ட். இவர் அங்கிருந்து தப்பி அமெரிக்காவில் வாசம் செய்தார்.”ஜெர்மனி இணைந்தால் சிறந்த அரசனாக தலைமை ஏற்க நான் தயார்!” என கூறி வந்தார். - தினமலர் வாரமலர் ஏப்ரல்:26 1992

நேபாள மன்னர் 1991-ஆம் ஆண்டு ஏப்ரலில் தன் முடியை இழந்தார்.

சீனா மன்னர் மற்றும் இளவரசன் இன்று ஒரு ஹோட்டலில் சர்வராக இருந்து வருகின்றனர்.

மன்னர்களின் இந்த கதிகளுக்கு எல்லாம் என்னக் காரணம்? தலையைப் போட்டு உடைக்க வேண்டாம். உங்களுக்கான பதில் எசேக்கியேல் 21:26,27-ல் உள்ளது. எசேக்கியேல் 21-ம் அதிகாரம் இப்படியாக சொல்லுகிறது.
பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்போலிராது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன்.
அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்


ஆம் இவ்வுலகில் யாருக்கும் முடி சூடி ஆள தகுதி கிடையாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது கர்த்தர். அதனால் தான் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன் அதற்கான தகுதியுடைய ஒரே ராஜா- ராஜாதிராஜா விரைவில் வருகிறார் என்கிறார். கிமு 606-ல் பாபிலோனுக்கு சிறைபட்டு போன பிறகு இஸ்ரேலில் ராஜாக்கள் ஆளவில்லை. இனி அதை கிரீடம் சூடி ஆளப் போகிற ஒரே ராஜா இயேசு கிறிஸ்துவே. அவரே அந்த கிரீடத்துக்கு உரிமைக்காரனானவர்.

மன்னராட்சி எனும் அரசியலமைப்புக்கு பதிலாக, பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். (லூக்கா 1:52) என்ற வசனத்தின் படியாக குடியாட்சி எனப்படும் ஜனநாயக ஆட்சிமுறை அமலுக்கு வந்தது. பள்ளிக்கூடம் ஏறாதவர்கள் எல்லாம் முதல்வரானார்கள்.
மிகச்சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்து பிரதமர்களாகவும் நாட்டு அதிபர்களாகவும் ஆனார்கள். ஆண்டவர் இந்த குடியாட்சியை தான் அன்றே ”தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன்.” என்று கூறினார் போலிருக்கின்றது. இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த ”பாகைகள்” பதவியில் உள்ளது. அதனையும் ஆண்டவர் சீக்கிரம் கவிழ்பார். அதே கணம் ஆண்டவரின் இந்த தீர்க்க தரிசனம் முற்றிலும் நிறைவடைய அப்போது இயேசு ராஜா ஆயிரம் வருடம் பூமியை அரசாள அரசனாக கிரீடம் அணிந்தவராய் வெள்ளைக்குதிரையில் அவனி வருவார். ஆமேன் கர்த்தாவே வாரும்.
-------------------------------------------------------------------------------------------------
Related Stories

அரசியலில் இருந்து தலாய்லாமா விலகல்

First Published : 10 Mar 2011 04:06:08 PM IST

தர்மசாலா, மார்ச்.10: திபெத்தியர்களின் விடுதலைக்காக 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிய தலாய்லாமா விரைவில் திபெத்திய அரசியல் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். திபெத்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை அளிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திபெத்தின் 52-வது எழுச்சி நாளில் உரையாற்றிய தலாய்லாமா இந்த அறிவிப்பை வெளியிட்டார். திபெத் நாடாளுமன்றத்துக்கு இதுகுறித்து திங்கட்கிழமை முறைப்படி தெரிவித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் ஒருவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தெரிவிக்க இருப்பதாக தலாய்லாமா குறிப்பிட்டார்.

புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க உலகம் முழுவதும் உள்ள திபெத்தியர்கள் மார்ச் 20-ம் தேதி வாக்களிக்க உள்ளனர்.

திபெத்துக்கு ஒரு தலைவர் தேவை. அவர் திபெத்திய மக்களால் சுதந்திரமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் அந்தத் தலைவரிடம் நான் அதிகாரத்தை ஒப்படைப்பேன். இப்போது அதற்கான காலத்தை அடைந்துவிட்டோம் என தலாய்லாமா தெரிவித்தார்.

எனினும் மதத் தலைவராக தான் தொடர்ந்து நீடிப்பேன் என்றார் அவர்.

அரசியல் தலைமைப் பதவியில் இருந்து விலக இருப்பதாக தலாய்லாமா இதற்கு முன்பும் பலமுறை கூறியுள்ளார். ஆனால் தற்போது முதன்முறையாக வெளிப்படையாக தனது முடிவை அவர் அறிவித்துள்ளார். தனது முடிவை ஏற்றுக்கொள்ளுமாறு திபெத்திய மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

http://www.dinamani.com/edition/story.aspx?&artid=388599&SectionID=164&MainSectionID=164

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment