Tuesday, July 26, 2011

அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்

கடவுள் ஒரு நியமனம் வைத்திருக்க மனிதன் இன்னொரு சட்டம் நிறைவேற்றி இருக்கின்றான். நியூயார்க் மாகாணத்தில் இந்த மாதம் 24-ம் தியதி முதல் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ளலாம் என சட்டம் வந்திருக்கின்றது. போன ஞாயிற்றுக்கிழமை வந்ததும் வந்தது நூற்றுக்கணக்கான ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் டவுன் ஹால்களுக்கு வந்து காத்திருந்து திருமணம் செய்துகொண்டனர். திருமண சான்றிதழும் பெற்றுக்கொண்டனர்.இனி இவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தம்பதிகள்.இந்த முதல் இரு நாட்கள் மட்டும் மாகாணம் முழுவதும் 1200-க்கும் அதிகமாக ”தம்பதிகள்”திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்தில் ஒரு புனிதத்தன்மை இருப்பதால் அதை ”திரு”மணம் என்கின்றோம்.இனிமேலும் இக்கேடுகெட்ட செயல்களை திருமணம் எனலாமோ?.

இப்படி டவுண் ஹால்களுக்கு வரும் ஓரின தம்பதிகளுக்கு கலியாணம் செய்துவைக்க விரும்பாத ஒரு டவுன் கிளர்க் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அந்த வீரப் பெண்மணியின் பெயர் லாரா பட்ஸ்கி (Laura Fotusky).”கடவுளா வேலையா என வரும் போது நான் கடவுளையே தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றார்.”வேதாகமம் மிகத் தெளிவாக சொல்கிறது திருமண பந்தம் என்பது கடவுளால் ஒரு ஆணுக்கும் பெண்னுக்கும் இடையே உருவாக்கப்பட்டது. குடும்பங்களையும் கலாசாரத்தையும் நாம் பேணிகாப்பதற்காக கடவுள் நமக்கு தெய்வீக வரமாக இதைக் கொடுத்தார்.நான் கடவுளை நேசிக்கிறேன் அவரை பின்பற்றவிரும்புகிறேன்.அதனால் கடவுளுக்கு விரோதமான நடைபெறும் எந்த கலியாண சான்றிதழிலும் நான் கையொப்பமிட விரும்பவில்லை.அப்படி நான் செய்வேனாகில் அது என் மனசாட்சிக்கு விரோதமாயிருக்கும்” எனக் கூறி அந்த அரசு வேலையை விட்டு விட்டார்.இது போல ஆண்டவருக்காக அனைத்தையும் அற்பமாகவும் குப்பையாகவும் எண்ணி எழுந்து நிற்கும் பெண்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இன்னும் அநேகர் இப்படி எழும்ப வேண்டும். ஏனெனில் வரப்போவது ஒருவரும் கிரியை செய்யக்கூடாத ராக்காலம். கடைசிகாலத்தின் ஒரு முக்கியமான அறிகுறியே தேவ பிள்ளைகள் துன்புறுத்தப்படுதல் தான்.(Persecution)

நியூயார்க் கவர்னர் அண்ட்ரு கூமோ (Andrew Cuomo)என்ன சொன்னார் தெரியுமோ?. ”சட்டமென்றால் அது சட்டம் தான்.அதை நாம் அமுல்படுத்தும் போது இச்சட்டங்கள் எனக்கு பிடிக்கும் இதை நாம் அமுல்படுத்துவேன், அச்சட்டங்கள் எனக்கு பிடிக்காது, அதை நான் அமுல்படுத்த மாட்டேன் என யாரும் சொல்ல முடியாது” எனக் கூறினார். அந்திக்கிறிஸ்துவும் சில சட்டங்களைக் கொண்டு வருவான். அப்போதும் அவன் அடியாட்களும் இப்படித்தான் கூறுவார்கள் ”சட்டமென்றால் அது சட்டம் தான், அதையாரும் மீறக் கூடாது” என்று.

"The Bible clearly teaches that God created marriage between male and female as a divine gift that preserves families and cultures,""Since I love and follow Him, I cannot put my signature on something that is against God."

-Laura Fotusky,New York town clerk
"The law is the law," "When you enforce the laws of the state, you don't get to pick and choose which laws. You don't get to say 'I like this law, I'll enforce this law'; 'I don't like this law, I won't enforce this law.'"
-New York Gov. Andrew Cuomo
http://articles.cnn.com/2011-07-13/us/new.york.same.sex.resignation_1_marriage-law-marriage-licenses-town-clerk?_s=PM:US

நியூயார்க் ஓரின தம்பதிகளின் கலியாண ஆல்பம் - இவர்களை உங்கள் ஜெபத்தில் நீங்கள் நினைவுகூறுவதற்காக


9 comments:

 1. அப்பெண்மணிக்கு எனது பாராட்டுக்கள் கர்த்தரின கரம் எப்போதும் அச்சகோதரியை வழிநடத்தும். அமெரிக்கா இதுபோன்ற கேவலம் கெட்ட செயலில் ஈடுபட்டிருப்பது தேவகோபத்தை தானே வழிந்து வரவழைத்திருக்கும் செயல். இத்தகைய சாத்தானின் செயல்கள் ஒழிக்கப்பட ஜெபிப்பதும், துணிச்சலாக எதிரப்பதும் ஒன்றே சரியான வழி என்பது எனது கருத்து

  ReplyDelete
 2. சில விஷயங்கள சரியா தவறா என்று தெரிந்து கொள்வதற்கு கடவுளும், வேத புத்தகமும் தேவையில்லை என்று தான் சொல்வேன். ஒரு மனிதனா, மனிதத் தன்மையோடு இருந்தாலே சில விஷயங்கள் தவறு என்று தெரியும். உதாரணம் - யாரையும் துன்பப்படுத்தக் கூடாது, கொலை செய்யக் கூடாது என்று கடவுள் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அது போல் தான் வசதிக்காக அபார்ஷன் செய்து கொள்வதும்.பிறந்தபின் உயிரையும் கொடுத்து பார்த்துக் கொள்ளும் பெற்றோர், பிறக்கும்முன் எப்படி கொலை செய்யத் துணிகிறார்கள் என்று புரிவதில்லை.இதுக்கெல்லாம் வசனம் தேவையில்லை.அதுபோல தான் இப்படிப்பட்ட அவலட்சணமான திருமணங்களும். நான் கடவுளை நம்பாத நாத்திகனாய் இருந்தாலும் இது அருவருப்பாகத் தான் எனக்குத் தெரியும்.

  ReplyDelete
 3. திருமணத்தில் ஒரு புனிதத்தன்மை இருப்பதால் அதை ”திரு”மணம் என்கின்றோம்.இனிமேலும் இக்கேடுகெட்ட செயல்களை திருமணம் எனலாமோ?
  "அவ"மணம்

  ReplyDelete
 4. விலங்குகள் கூட நியதிபடி ஆண் பெண்ணுடன் இணைகிறது ஆனால் ஒரு படி மேலே உள்ள மனிதன் அவைகளைவிட கீழே வந்திருக்கிறான் இவனை என்ன என்று சொல்வது ?

  ReplyDelete
 5. கர்த்தாவே இதன் முடிவு என்னமாயிருக்குமோ

  ReplyDelete
 6. bible verse is fulfilling. people are losing their conscious that they are human being and they have to stay within the particular role what jesus said to do as a man/woman. Still Jesus blood is available for these people to clean their sin. Let jesus save all of us.

  ReplyDelete
 7. ETHAIYELLAM PARKUM POTHU ENAKU PAYAMATHAN ERUKU , ANNDAVAR EVVALAVU QUICK AH VARUVARUNU NADAKINDRA SAMPAVANKAL ELLAM ENAKU KATTUKINRANA . NAN AVARUDAIYA VARUKAIYA EPPADI EHIR NOKKA POREN THERIYALA PLZ PRAYER FOR ME.

  ReplyDelete
 8. i seluit that lady madam jesus with you

  ReplyDelete