Saturday, February 23, 2013

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.

உங்க‌ளுக்குத் தெரியுமா?
தேவ‌ன் அன்பாக‌வே இருக்கிறார்.
ஆனால் சில‌ காரிய‌ங்க‌ள் அவ‌ருக்கு அருவருப்பானவைகள்.
1.மேட்டிமையான கண்.
2.பொய்நாவு.
3.குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை.
4.துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்.
5.தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்.
6.அபத்தம் பேசும் பொய்ச்சாட்சி.
7.சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல்.
நீதிமொழிக‌ள்:6:16-19


Friday, February 22, 2013

விண்ணில் தோன்றிய‌ மின்ன‌ல்


போப் பென‌டிக்ட் அவ‌ர்க‌ள் த‌ன‌து ராஜினாமாவை அறிவித்த‌ சில‌ ம‌ணிநேர‌ங்க‌ளிலேயே ரோமாபுரி வானில் தோன்றிய‌ ஒரு அற்புத‌மான‌ மின்ன‌ல் இ‌து. அதை அப்ப‌டியே த‌‌ன‌து கேம‌ராவில் சிறைபிடித்துள்ளார் ஒரு இத்தாலிய‌ போட்டோகிராப‌ர். மின்ன‌ல் சொல்ல‌ வ‌ருவ‌து என்ன‌மோ?

சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். லூக்கா 10:18

மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய (இயேசு கிறிஸ்துவினுடைய‌) வருகையும் இருக்கும். மத்தேயு 24:27
இதோ, சீக்கிரமாய் வருகிறேன் - இயேசு கிறிஸ்து

Friday, February 15, 2013

நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில், யூரல் மலை அமைந்த, செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில், காலை, விண்ணில் இருந்து பறந்து வந்த, விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது. இதனால், மக்கள் பீதியடைந்தனர்." இந்த சம்பவங்களில், 84 சிறுவர்கள் உள்பட, 900 பேர் காயமடைந்தனர்' என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று, "2012 டிஏ 14' என்ற, பெயர் கொண்ட ஆஸ்ட்ராய்டு(சிறுகோள்) ஒன்று, வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரஷ்யாவில், விழுந்த விண்கற்களுக்கும், இன்று பூமிக்கு அருகே வரும், 2012 டிஏ 14 க்கும் தொடர்பில்லை' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

வேதாக‌ம‌ம் சொல்லுகிற‌து. அந்நாட்களில் சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, இயேசு கிறிஸ்து வ‌ருகிறார்.மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அப்படியே ஆகும் ஆமென்.(மத்:24:29 மத்:24:6 வெளி1:7)
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=40617

Tuesday, February 12, 2013

அடுத்த‌ போப்,உல‌கின் இறுதி போப்?


12-ம் நூற்றாண்டை சேர்ந்த‌ செயின்ட் மாலாக்கி (Saint Malachy) எனும் ஐரிஷ் பிஷ‌ப், வ‌ர‌ப்போகும் 112 போப்க‌ளை குறித்து தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் (Prophecy of the Popes) சொல்லியிருக்கிறார். இப்போது ப‌த‌வி வில‌க‌ல் தெரிவித்துள்ள‌ போப் பென‌டிக்ட் (Benedict XVI) 111-வ‌து போப் ஆவார். அதாவ‌து அடுத்து வ‌ர‌ப்போகும் 112-வ‌து புதிய‌‌ போப் உல‌கின் க‌டைசி போப் என்றும் அவ‌ரை Peter the Roman என‌வும் அவ‌ர் குறிப்பி‌டுகிறார். பின்பு ரோம் ந‌க‌ர‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு போகும் என்று முன்னுரைத்துள்ளார். வேதாக‌மும் ஏழு ம‌லை ந‌க‌ர‌மாம் ரோமாபுரி ந‌க‌ர‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு போகும் என்றே முன்னுரைக்கிற‌து. அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம். அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். வெளி:17:9,18,16