Friday, February 15, 2013

நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, 1,400 கி.மீ., தொலைவில், கஜகஸ்தான் எல்லைக்கு அருகில், யூரல் மலை அமைந்த, செல்யாபின்ஸ்க் என்ற பகுதியில், காலை, விண்ணில் இருந்து பறந்து வந்த, விண்கற்கள் விழுந்தன. இந்த கற்கள் விழுந்த சத்தம், வெடி சத்தத்தை போன்று கேட்டது. இதனால், மக்கள் பீதியடைந்தனர்." இந்த சம்பவங்களில், 84 சிறுவர்கள் உள்பட, 900 பேர் காயமடைந்தனர்' என, ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இன்று, "2012 டிஏ 14' என்ற, பெயர் கொண்ட ஆஸ்ட்ராய்டு(சிறுகோள்) ஒன்று, வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரஷ்யாவில், விழுந்த விண்கற்களுக்கும், இன்று பூமிக்கு அருகே வரும், 2012 டிஏ 14 க்கும் தொடர்பில்லை' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

வேதாக‌ம‌ம் சொல்லுகிற‌து. அந்நாட்களில் சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்.இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, இயேசு கிறிஸ்து வ‌ருகிறார்.மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அப்படியே ஆகும் ஆமென்.(மத்:24:29 மத்:24:6 வெளி1:7)
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=40617

2 comments:

  1. இயேசு கிறிஸ்து வ‌ருகிறார்.மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அப்படியே ஆகும் ஆமென்.(மத்:24:29 மத்:24:6 வெளி1:7)//

    amen amen....

    ReplyDelete