Saturday, June 06, 2009

போரிஸ் எல்ஸ்டினும் கிறிஸ்தவமும்

இன்றைய ரஷ்யாவின் முதல் அதிபராக விளங்கியவர் போரிஸ் எல்ஸ்டின் (Boris Yeltsin-1 February 1931 – 23 April 2007). இவர் ஒரு ரஷ்ய ஆர்த்தடாக்சு சபைக்கு சென்றுகொண்டிருந்தார்.

இவர் ஒருமுறை இவ்வாறாக குறிப்பிட்டார்.

”நான் திருமுழுக்கு பெற்றவன். எனது பெயரும் பிறந்த நாளும் ஆலய திருமுழுக்குப் பதிவேட்டிலுள்ளது. எனது பெற்றோருடன், என் தாத்தா பாட்டியும் விசுவாசிகள் தான்.ஆனால் அது நாங்கள் நகரத்துக்கு வரும் வரை மட்டுமே.”

“பள்ளியிலும் கல்லூரியிலும் நான் மதத்தைப் பற்றியும் சபையைப் பற்றியும் மிகவும் இழிவாகத்தான் பேசி வந்தேன்.அப்படித்தான் கற்றோம். ஆனால் இத்தகைய கல்வி பயங்கரமான தவறும் அநீதியுமானது”

“4 மணிநேரம் நீடிக்கும் ஆராதனை எனக்கோ என் மனைவிக்கோ போரடிக்கவில்லை. ஆலயத்தை விட்டு வரும் போது ஏதோ புதிதாக, ஏதோ பிரகாசமான ஒன்று எனக்குள் வந்திருப்பது போல உணர்கிறேன்”

சங்கீதம் 27:4
நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment