Friday, August 07, 2009

எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?


எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
அவரவர் தொழுகைகளுக்கென வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களும், சனிக்கிழமை யூதர்களும், ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களும் என கூடும் படுபிசியான நகரம் ஜெருசலேம். வார இறுதிகளில் ஜனக்கூட்டம் நிரம்பிவழியும். மூன்று மதத்தவரும் இந்நகரத்தை சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஆனால் தேவனாகிய கர்த்தரோ ”என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமை... தெரிந்துகொண்டேன் (II நாளா:6:6) என கர்த்தர் அக்காலத்திலேயே அந்நகரத்தை சொந்தம் கொண்டாடிவிட்டார். யாரும் அவரிடமிருந்து அதை பிடுங்கமுடியாது. அது அவருக்கு பிடித்தமானதொரு piece of real estate on planet earth.வேதத்தில் மட்டும் 811 முறை இந்த எருசலேம் குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு இடங்களில் இது சாலேம் எனவும் (சங்:76:2) 152 இடங்களில் இது சீயோன் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. பரிசுத்த நகரம், தேவனுடைய நகரம், மகாராஜாவின் நகரம் என இன்னும் பிற பெயர்களிலும் இது பல இடங்களில் அறியப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு ராஜாவாயிருந்த சாலோமான் எருசலேமிலே தேவாலயம் கட்டி முடித்த உடன் கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி “என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் அதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.” என்றார். (II நாளா:7:16) இப்படியாக இருக்கும் தேவனுடைய பரிசுத்த நகரத்தை துண்டாடும் முயற்சியில் மனிதர்கள் இன்றைக்கு ஈடுபட்டுள்ளார்கள். தனது தலைநகராக இஸ்ரேல் வைத்திருக்கும் அதேவேளையில் பாலஸ்தீனர்களும் two-state solution-ல் தங்கள் தலைநகராக அதை கேட்கிறார்கள். உலகின் பெரும்தலைகள் எருசலேமை இரண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் அல்லது அதுதான் தான் சரியான தீர்வாக கருதுகின்றனர்.

இன்றைக்கு ஜெருசலேமில் இருக்கும் இஸ்லாமியரின் தங்கமசூதி (Dome of the Rock) தொடப்படாமல் பக்கத்திலேயே யூதர்களில் தேவாலயம் கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தங்க மசூதியின் வடமேற்கே 330 அடி தள்ளியே பழைய தேவாலயம் இருந்ததாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது புதிதாக கட்டப்படவிருக்கும் தேவாலயத்தின் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும். பாருங்கள் வெளி:11:1,2 சொல்வதை கவனியுங்கள். "பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒருஅளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி:நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும் அதில் தொழுது கொள்ளுகிறவர்களையும் அளந்துபார். ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிறபிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்."

இந்த வசனத்தின் படி எருசலேம் நகரம் இரண்டாக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. குறைந்தது மூன்றரை ஆண்டுகள் இந்நகரம் துண்டாடப்பட்டிருக்கும். அதற்கு வரப்போகும் கள்ளத்தீக்கதரிசி கள்ளதீர்க்கதரிசனங்களை சொல்லி யூதர்களை மனம் மாற்றுவான். அந்திகிறிஸ்து அச்செயலுக்கு தலைவனாய் இருந்து சமாதான பிரபு போல தோன்றுவான். எருசலேமிலே யூதர்களும் புறஜாதியாரும் சேர்ந்து ஒன்றாக இருப்பார்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டாயிருக்கும்.

அப்புறம் என்னவாகும்? I தெசலோ 5:3 சொல்லுகிறது. சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

ஜெருசலேமை இரண்டாக்க முயல்பவர்களின் கதி என்னவாகும்? கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 12 9. அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

கட்டப்படும் பலிபீடம்

வெளி:11:1-ல் சொல்லப்பட்டுள்ள பலிபீடத்தைக் கட்டும் பணி கடந்த ஜூலை 9-ம் தியதி தொடக்கப்பட்டுள்ளது. தானியேல் 11:31-ல் சொல்லப்பட்டுள்ள அன்றாட பலியும் இங்கே தான் நடைபெறும். இதை Temple Institute எனும் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதே நாள்தான் (Tisha B’av) சரியாக 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்த தேவாலயம் இடிக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த பலிபீடம் 3 அடி நீளமும் 3 அடி உயரமும் 2 அடி அகலமுமாயிருக்கும். இதற்கான கற்கள் மனிதரால் தொடப்படாதவையாய் இருக்க வேண்டு மென்பதற்காக சவக்கடலின் ஆழத்திலிருந்து எடுக்கப்பட்டதாம். மேலும் தேவாலயத்துக்கு தேவையான பாத்திரங்கள், பேழை ,குத்துவிளக்குகள் எல்லாம் ஏற்கனவே இவர்கள் தயார் செய்து ரெடியாக வைத்துள்ளார்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment