Wednesday, May 31, 2006

பரிபூரண சமாதானம் என்றால்...

அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழ்நிலையில் சலமற்றிருப்பது எளிது தான்.ஆனால் கொந்தளிக்கும் புயலின் நடுவேயும் அமைதியாக அமர்ந்திருப்பது தான் பரிபூரண சமாதானம்.

யோவான்:14:27.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

John:14:27
Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.

Sunday, May 28, 2006

Jesus Was Engaged, Not Married

இன்று, டான் பிரொவுனின் "டாவின்சி கோட்" கதை புத்தகமும்,சினிமாவும் யாவரும் அறிந்ததே.எதிர்பார்க்கப்பட்டபடி பணவசூலும் கொட்டிக் கொண்டிருக்கிறது.controversy = big bucks இதுதானே சமன்பாடு.ஏனோ சில கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் தேவையில்லாமல்.கிபி.1498-ல் லியோனர்டோ டாவின்சி என்ற மாபெரும் ஓவியர்,முதலாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை படமாக வரைந்திருக்கிறார்-"யேசுவின் கடைசி இரவு
உணவு" என.ஏறக்குறைய 1400 ஆண்டுகால இடைவெளியை கவனிக்கவும்.அந்த படத்தில் அநேக ரகசியங்கள் புதைந்து கிடப்பதாகவும் சிலர் அதை டீகோட் (decode) செய்து யேசுவுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இப்படியாக அந்த கதை இன்டரஸ்டிங்காக செல்கிறது.மீதமுள்ள லியோனர்டோ டாவின்சியின் மற்ற ஓவியங்களையும் டீகோட் செய்து இன்னும் இன்டரஸ்டிங்கான கதைகள் திரையில் வந்தால் இன்னும் பணம் கொட்டும்.
யேசுவுக்கு திருமணமாகிவிட்டது என்பதை விட திருமண நிச்சயமாகிவிட்டது என்றிருந்தால் அந்த கதை கட்டுக்கதை இல்லாமல் உண்மையென்றே இருந்திருக்கும்.

மணப்பெண்ணாகிய திருச்சபையை மணமகனாகிய யேசு "திருமண நிச்சயம்" செய்தது தான் அந்த "The last supper" நிகழ்வு.அங்கே ஒரு திருமண உடன்படிக்கை நடந்தது.இஸ்ரேலிய வழக்கப்படி திராட்சரசமானது எதிர்கால கணவன் மனைவியிடையே பங்கிடப்பட்டு “This cup is a covenant between you and me." என உறுதி அளிக்கப்பட்டது அங்கே.இன்னும் இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் தனது இரத்தத்தை மணப்பெண்ணுக்கு தட்சணையாக தந்திருக்கிறார்.இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் ஒரு வீட்டை தயார் செய்த பின் மணவாளன் வந்து மணவாட்டியை திருமணம் செய்து கூட்டி செல்வார்.அது தான் யேசுவின் இரண்டாம் வருகை.

ஆக ஒரு சின்ன மாற்றம். திருமணம் அல்ல.அது ஒரு திருமண நிச்சயம்.

அப்போ கல்யாணம் எப்போ?

வெளி 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய (யேசுவின்)கலியாணம் வந்தது, அவருடைய மனைவி(திருச்சபை) தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

மத்தேயு:26:26.
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
29. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

எபேசியர்:5::25.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

வெளி:21::2.
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

வெளி 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின்(யேசுவின்) கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்

யோவான்:14:3.
நான்(யேசு) போய் உங்களுக்காக(மணப்பெண்ணாகிய திருசபைக்காக) ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
-------------------------------------------------------------------------------------------------------

In Jesus time it was a custom for a groom to agree with his future father in law upon a dowry. He also often had to prepare a home for them to live in.Once these requirements had been met, the groom’s father would provide his son with a glass of wine. The son would then offer it to his bride and say, “This cup is a covenant between you and me.”
This cup symbolized his commitment to her. It was her choice to accept the cup that was offered, or to reject the cup. If she drank of the cup, she was publicly stating her trust and hope in her future husband. There are some interesting parallels between this custom and what we call communion. Jesus calls the church His bride (Ephesians 5:25); like a good groom, Jesus has paid the price for us to have a home (the home He offers is one that lasts forever); and in accepting this cup, we publicly state our trust and hope in Jesus. Some things to also note: unlike a groom of His day, Jesus offers forgiveness of sins through this cup; also different is that Jesus says that His body and blood are truly present in the bread and wine. We, the believers of Jesus are His bride.

So we must ask: When is the wedding?!?

We find out in Revelation 21:1-4:

Then I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth had passed away, and there was no longer any sea. I saw the Holy City, the
new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride beautifully dressed for her husband. And I heard a loud voice from the throne saying,
"Now the dwelling of God is with men, and he will live with them. They will be his people, and God himself will be with them and be their God. He will wipe
every tear from their eyes. There will be no more death or mourning or crying or pain, for the old order of things has passed away."

This is one wedding we do not want to miss.

Saturday, May 27, 2006

ஜெருசலம் எனும் நகரம்

ஜெருசலம் கிறிஸ்தவர்களின்,யூதர்களின் புனித நகரம்.முகமதியரும் இதை புனித நகரமாக கருதுகிறார்கள்.யூதர்களின் பைபிளில் இப்பெயர் 669 முறையும் கிறிஸ்தவர்களின் பைபிளில் இப்பெயர் 154 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.முகமதியரின் புனித குரானில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவில்லை.பரிசுத்த நகரமாகிய இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இயேசு இதை மகாராஜாவின் நகரம் என்று கூறினார்.எருசலேமில் தான் உலக புகழ் பெற்ற எபிரேய பல்கலைக்கழகம் உள்ளது.இயேசு உலக இரட்சிப்புக்காக மரித்து உயிர்த்தது இந்நகரில் தான்.எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் நகரம் (Heritage of Peace) என்று பொருள்.ஆனால் கடந்த 3000 ஆண்டுகளில் 20 முறை முற்றுகை யிடப்பட்டும்,இடிக்கப்பட்டும்,திரும்பவும் கட்டப்பட்டும் இருக்கிறது.எனினும் கர்த்தர் இதனை தலைநகராக கொண்டுதான் உலகை ஆளுவார் என வேதம் கூறுகிறது.தலைநகரமாகிய எருசலேம் தான் இஸ்ரேலிலுள்ள மகாபெரிய நகரமாகும்.தற்போதைய மக்கள்தொகை 704,900 ஆகும்.72 சதவீதம் யூதர்கள் இங்குண்டு.

மத்தேயு:5:35.
பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.

ஏசாயா:66:20.
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல,..., சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளி:20:9.
அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

லூக்கா:21:24.
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

Thursday, May 25, 2006

காற்றுக்கு கனம் உண்டா?

காற்றுக்கு கனம் உண்டு என்று கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டறிந்தார்.ஆனால் பைபிளில் கிமு 1500-லேயே யோபு:28:25-ல் இந்த உண்மை மிக அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது.

யோபு 28 :25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
Job:28:25
To establish a weight for the wind,And apportion the waters by measure.

Saturday, May 20, 2006

எப்படியாகிலும் வாழுங்கள்

மனம் தளரும் போது- பாடுங்கள்
சோகம் வரும் போது- சிரியுங்கள்
தாழ்வு எண்ணம் வந்தால்- பழைய வெற்றிகளை நினையுங்கள்
சோர்வாக இருக்கும் போது- இரட்டிப்பாக உழையுங்கள்
அச்சம் வரும்போது- முன்னே பாயுங்கள்
தலைக்கணம் ஏற்ப்படும் போது- பழைய தோல்விகளை நினையுங்கள்
விருந்து உண்ணும் போது- பட்டினியை நினையுங்கள்
சோம்பல் வரும்போது- போட்டிக்காரர்களை நினையுங்கள்
ப்ளீஸ் எப்படியாகிலும் வாழுங்கள்

பிரசங்கி:11:9.
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

Ecclesiastes 11:9
Be happy, young man, while you are young, and let your heart give you joy in the days of your youth. Follow the ways of your heart and whatever your eyes see, but know that for all these things God will bring you to judgment.

மேலும் சில விளக்கங்கள்

அப்படி நான் என்ன தவறாய் எழுதிவிட்டேனோ தெரியவில்லை.எனக்கு தெரிந்தபடி,அறிந்தபடி"உலகில் பிறந்தோர் எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான்
போனார்கள்.யேசுவை தவிர" இதுதான் அந்த பதிவின் சாரம்சம்.இதில் நான் யாரை மோசமாய் பேசினேன்.யாரை தவறாய் சொன்னேன்.எனக்கு தெரிந்த உண்மையை
சொன்னேன்.வேறு யாராவது மரணத்துக்கு தப்பியிருந்தால் நீங்கள் சொல்லலாமே.
உலக வரலாறும், இன்று திறந்த நிலையிலிருக்கும் யேசுவின் கல்லறையும் யேசு உயிர்த்தார் என உலகிற்கு சொல்கிறது.நானும் நம்புகிறேன்.என் நம்பிக்கையை எழுத்தாய் எழுதுவதில் என்ன தவறு."உலகில் பிறந்தோர் எல்லாரும் ஒரு நாள் செத்துப் போனார்கள்.யேசுவை தவிர" இதை தானே எழுதினேன்.இதில் எந்த மதத்தை குறை சொன்னேன்.

மனிதனின் வாழ்க்கையும் ஒரு மிருகம் போலவே மரணத்தோடு முடிந்துவிடுகிறது என்றும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை என்றும் நீங்கள் நினைப்பவரானால் என் நம்பிக்கை உங்களுக்கு வீணே.உலகியல் செழிப்புக்கு கடவுள் எதற்கு சொல்லுங்கள்.வாலிபத்தில் கடவுள் நம்பிக்கையின்றிகூட கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் தன் இறுதி காலத்தில் கோயிலையும் கடவுளையும் தேடுவதேன்?.அடுத்து என்ன என்ற நிச்சயமின்மை தானே?

//It is me, Nandhan, who asked the third question. Unfortunately I dont see your 'answer' has any real answer to that question.so let me repeat
1.Did you see that? What makes you accept it to be true?//
உலக வரலாறும், இன்று திறந்த நிலையிலிருக்கும் யேசுவின் கல்லறையும் யேசு உயிர்த்தார் என உலகிற்கு சொல்கிறது.நானும் நம்புகிறேன்.

//2.how did that improve lives of millions of people in the world?
3.Leave all of them how did it improve your living standard?//
மனிதனின் வாழ்க்கையும் ஒரு மிருகம் போலவே மரணத்தோடு முடிந்துவிடுகிறது என்றும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை என்றும் நீங்கள் நினைப்பவரானால் என் நம்பிக்கை உங்களுக்கு வீணே.உலகியல் செழிப்புக்கு (I mean living standard) கடவுள் எதற்கு சொல்லுங்கள்.வாலிபத்தில் கடவுள் நம்பிக்கையின்றிகூட கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் தன் இறுதி காலத்தில் கோயிலையும் கடவுளையும் தேடுவதேன்?.அடுத்து என்ன என்ற நிச்சயமின்மை தானே?

//Please dont quote bible, give me YOUR answers.
At the same time I feel bad about the kind of language that I see in some of the question. Friends, we can be bit more courteous and mannered.//
நந்தன்,நிதானமான உங்கள் அணுகுமுறை மகிழ்சியை தருகிறது.சிறப்புகள் மேலும் மேலும் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள்.Thanks for your comment.

//Since you are telling that this came from Dinamalar. Please provide the Screen Shot of that...//
I am really Sorry. I dont have the screen shot.But I am not sure,is it avail as a novel on store?.

//And Why are you publishing that without mentioning on the blog...//
I did.I mentioned as "- ஜ்வாலா மாலினியின் மனஸ்"

//It means that you want blame nayanmars and say jesus are best. Could you please explain me the reason of publishing this comparision of other religious to Christianity...//
Again I am saying those are not my lines.

//Can you publish Dravidar Kazhakam Questions/anwers against Jesus too..
I like to see your answer...//
என் கருத்தை என் நம்பிக்கையை தானே நான் கூற முடியும்.

//If you are a true christian never blame other Religion or Jesus never supported anywhere who blame/compares.If you donot have any hesitation please remove this and say good about Jesus (do not blame/say christianity is better than other religion). Everyone knows how many researchers spoiled by Christian missionary (Example Kalileo) //

I`ll do.Thanks for your comment.

Friday, May 19, 2006

மரணத்தை வென்றார் உண்டோ?-சில விளக்கங்கள்.

"மரணத்தை வென்றார் உண்டோ?" என்ற என் முந்தைய பதிவில் வந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் முன்பாக நண்பர்களுக்கு முக்கியமான ஒரு விடயம் ஒன்றை தெரிவிக்க வேண்டும்."மரணத்தை வென்றார் உண்டோ?"என்ற பதிவின் முழு அடக்கமும் (except bible verses) என் எழுத்து அல்ல.ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தின் புகழ் பெற்ற தினமலர் நாளிதழின் வார இணைப்பான வாரமலரில் ஜ்வாலா மாலினி என்ற எழுத்தாளர் மனஸ் என்ற தொடர்கதை எழதும் போது அதில் வந்த ஒரு பகுதி தான் நான் பதிப்பித்தது.அதாவது கணவனை இழந்த பெண்ணொருவள் அவ்வாறாக "மரணத்தை வென்றார் உண்டோ?" என
மனதிற்குள் நினைத்து தன்னை தானே தேற்றிக்கொள்வதாக வரும்.பைபிள் வசனம் மட்டும் நான் கூட்டி இருந்தேன்.அவ்வாறு அந்த எழுத்தாளர் (அவர் கிறிஸ்தவரா,இந்துவா முகமதியரா என..நான் அறியேன்)அன்று எழுதியதற்காக எத்தனை பேர் அவரிடம் கேள்வி கேட்டார்கள்,திட்டினார்கள் நான் அறியேன்.இப்போது எனக்கு வந்த கேள்விகளும் அதன்
பதில்களும்.(Thats a another tamil writers opinion.I just added bible verses.Thats all.Thanks for all who commented)
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:I cannot see Jesus, what is physical address. Jesus born 1 BC. When he died and when he came back to home ...How many years he is alive. Then why is so many groups in Christian. If Jesus talks about Peace and forgiveness then Why Christians are intollerable with other religion.
I know you cannot answer this so you won't publish my comments. Please use your brain to thing what you are writing. Since you have all the rights, donot blame other religion. Jesus never forgive and he thinks you are the fool

பதில்:நண்பரே நான் ஏற்கனவே சொன்னபடி அந்த பதிவு முழுவது என் கருத்து அல்ல.ஆனால் அதன் content முழு உண்மை அல்லவா?.அந்த content-ல் எதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள்.I respect other religions.I did not blame any religions.Did I?.That writer`s those lines are the facts.எனக்கு உங்கள் கமென்றை வெளியிடுவதில் என்ன தயக்கம் சொல்லுங்கள்.?
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:Where is jesus...Show me...
I cannot show Nayanmars but you cannot show Jesus too...Then why are you writing you mother fucker...

பதில்:ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டீர்கள் போலிருக்கிறது. :) உங்களை hurt பண்ணுவது என் நோக்கமில்லை நண்பரே.அப்படி பண்ணியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:Did you see that? What makes you accept it to be true?
Please dont reply saying 'It is my beleif' - The moment you posted this for public reading, you stand vulnerable to public opinion There are stories like this in all religions.Say for argument sake, we accept he came back to life...how did that improve lives of millions of people in the world? Leave all of them how did it improve your living standard?

பதில்:உங்கள் கருத்து மிகவும் சரியே.மரணமே அனைத்தின் முடிவு என நினைப்பவர்களுக்கு இவ்விவாதம் தேவைப்படாதிருக்கலாம்.
யோவான்:14:2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி:he will come before the judgement day,it is in the holy quran.so dont think he has escaped from death, he will come by the wish of allah and he will die after completing his alloted responsibilty which was given by one and only allah
regards,
allah

பதில்:நீங்கள் சொல்லியிருக்கிற செய்தி எனக்கு புதிது. நன்றி அய்யா.
-------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி://அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.
இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.//தவறாக எண்ண வேண்டாம், ஆமா பைபில் என்ன என்சைகிலோபீடியா அஃப் எவெரிதிங்-ஆ. அது என்னங்க தொட்டத்திற்கெல்லாம் அதுல போயி தேடினா விடை எப்படிங்க கிடைக்கும், அதனை கம்போஸ் பண்ணினவரும் ஒரு மனிதர் தானே.அந்த காலக் கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், சாந்தியங்களையும் அவருக்கு எட்டின வரைக்கும் மனத்தில் கொண்டு எழுதப் பட்டதுதானே. அதுல போயி அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு விடை தேடுறது எப்படிங்க சாத்தியமாகும் (வேண கருக்கலைப்பு சரிய தவறான்னு ஒரு நபர் அதில தேடி விடை காண முடியும்...அவ்ளொவே), இன்னொரு உலகப் போருக்கு வேண வழிவகுக்கலாம். இது தாங்க பிரச்சினை ஒரு புக்க கையில வச்சுகிட்டு அதுப்படிதான் நடக்கணும் அப்படின்னு தொங்கின ஒசமா மாதிரி எங்கப் பார்தாலுக் ஒசமா தான், தோன்றுவாங்க.கடவுள் எங்கே இருக்கிறார், உள்ள இடத்தை விட்டுவிட்டு நாம் எங்கெல்லாமோ அடித்து பிடித்து அவரை பிடித்து கீழே நான் ஏறி, அவர் என்னை பிடித்து கீழே தள்ளி அவர் ஏரி... என்னமோ நாம் எல்லாம் பண்றோம், உண்மையை விட்டுப் புட்டு எதுக்கோ திரியறமாதிரி எனக்குத் தோணுது.-TheKa.
பதில்:பைபிள் ஒரு என்சைளோபீடியா இல்லை என்பது உண்மை.காண்பவையெல்லாம் அதில் அட்டவணைபடுத்தப்படவில்லை என்பதும் உண்மை தான்.ஆனால் அதில் கண்ட சில நல்ல விசயங்களை எடுத்துரைத்து மகிழ்வது தவறில்லை என நினைக்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------

Tuesday, May 16, 2006

நதி...மேகம்...மழை

நதி நீர் ஆவியாகி நீராவியாக மேலே சென்று மேகமாகி அது மீண்டும் குளிர்ந்து மழையாக பெய்வதனை கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டுபிடித்தார்.
ஆனால் பைபிளில் பிரசங்கி:1:6,7-ல் கிமு 9-ம் நூற்றாண்டுக்கு முன்பே இது பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பிரசங்கி:1:6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Ecclesiastes 1: 6 The wind goes toward the south, And turns around to the north;
The wind whirls about continually, And comes again on its circuit.
7 All the rivers run into the sea, Yet the sea is not full;
To the place from which the rivers come, There they return again.

மரணத்தை வென்றார் உண்டோ?

எமனிடமிருந்து மீண்டவர்கள் உண்டா? 100 வயது. அதிகம் போனால் சில ரஷ்ய கிழங்கள்,ஜப்பானிய முதுமைகளும் கின்னஸில் இடம் பெற 120 வருடம் வாழலாம்.தசர சக்கரவர்த்தி 10000 ஆண்டுகள் பரிபாலனம் செய்திருக்கலாம்.பத்தாயிரத்தொன்றில் அவரும் செத்துத்தான் போனார்.பிறந்தவன் செத்தே தீரவேண்டும்.

காலா வாடா, உன்னைக் காலால் உதைக்கிறேன் என்று பாடிய கவிச்சிங்கத்தை 39 வயதில் காலன் தன் காலின் கீழ் கொன்று விட்டான்.

பன்னிரண்டு ஆழ்வார்கள் எங்கே? 63 நாயன்மார்கள் எங்கே? 12 சீர்திருத்தவாதிகளின் முகவரிகள் எங்கே? போஸ்களும்,ஒளவையார்களும்,சங்கரர்களும்,ராம கிருஷ்ணர்களும்,விவேகானந்தர்களும்,பட்டிணத்தார்களும்,எங்கே? காந்திகளும் நேருகளும் எங்கே? எங்கே?
- ஜ்வாலா மாலினியின் மனஸ்

ஆனால் இங்கே ஒரு அற்புதம்.யேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார்.

மாற்கு 16:6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.

Mark:16:6 But he said to them, “Do not be alarmed. You seek Jesus of Nazareth, who was crucified. He is risen! He is not here. See the place where they laid Him.

பூமியின் வடிவம் உருண்டையா? - இயற்கை நேசிக்கு என் பதில்

கேள்வி://ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.//

அதெப்படி நன்கு பேசத் தெரிந்து தர்கத்திவிட்டால் இருக்கும் fact இல்லையென்று ஆகிவிட முடியுமா?

அது போல தெரிந்த pre-determined hypostheses-களுடன் எதற்கு ஒரு ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். எப்படி ஆராய்ச்சின் இருதியில் நடந்ததிற்காண அல்லது நிகழாமல் போனதிற்காண சான்றுகளை ஊர்ஜிதப் படுத்தாமல் டாக்டரேட் வாங்கிவிட முடியும்?

Again a thing to remember, religion is to shape a man and tie a society on the track from following animalistic instinct. The spirituality does not have(or know) any boundaries. When we are ready to evolve onto the next phase only all these regid fundamentalistic perceptual shift will shed off.

Until then there will be a BELIEF of someone will come from the sky to save us all.

பதில்: இயற்கை நேசி அவர்களே! உங்கள் பெயர் மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.உங்கள் பதிவுகள் தமிழ் வலையுலக அபூர்வங்களில் ஒன்று.உங்கள் பின்னூட்டம் மற்றும் கேள்விகளுக்கு மிகவும் நன்றி.

pre-determined hypostheses என்று ஒன்றில்லை என்கிறேன்.நாம் பார்ப்பதெல்லாம் determine-பண்ணியிருப்பதெல்லாம் எப்படி மெய்யாகவே இருக்க முடியும்.நம் கண் பெரும்பாலும் பொய் தானே சொல்கிறது.(For example colors).

அதற்காக பூமி தட்டையென நான் சொல்லவரவில்லை.எதற்கும் please see this link.http://www.alaska.net/~clund/e_djublonskopf/Flatearthsociety.htm

"The important thing is not to stop questioning." என்றார் Albert Einstein.May be it should be like this "The important thing is not to stop questioning, even if its a well known fact".

உங்களின் அறிவியல் ஆராய்ச்சி பெருமைக்குரியது.ஆனால்
வரலாறென்று வரும் போது கருத்து திணிப்புகள்,உத்தேச கணக்குகள்,சொந்த அபிப்ராயங்கள் பேசப்படுகின்றன.ஏனெனில் நீங்கள் கூறும் சான்றுகள் வரலாற்று ஆராய்ச்சிகளில் மிகவும் குறைவு.இல்லை மறைக்க அல்லது அழிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் ஆட்சியில் ஒரு வரலாறும் பிஜேபி ஆட்சியில் ஒரு வரலாறும் பாடபுத்தகங்களில் வருவதை நாம் கேள்விப் பட்டதில்லையா?

மற்றபடி religion பற்றிய உங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன்.நன்றி.
-----------------------------------------------------------------------------------
பூமியின் வடிவம் உருண்டை என விஞ்ஞானிகள் கிபி 1475-ல் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கிமு 700-லேயே பைபிள் ஏசாயா:40:22-ல் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறியுள்ளது.

ஏசாயா:40 :22. அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்;
Isaiah 40: 22 It is He who sits above the circle of the earth
------------------------------------------------------------------------------------

Muse-ன் கேள்வி:அப்புறம் எதற்குத் தலைவரே கலிலியோ போன்றவர்களைக் கொன்றார்கள்?

பதில்:Muse-க்கு வாழ்த்துக்கள்.உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி.நல்ல கூர்மையான கேள்வி.ஒரு விடயம் நினைவிருக்கட்டும்.கலிலியோ கொல்லப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was killed for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)

கிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகம்

BIBLE என்பதின் விரிவாக்கம் Behold I Bring Life Eternal எனலாம்.

கிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகமாகிய The Holy Bible-பரிசுத்த வேதாகமம்-விவிலியம்-புனித வேதம்-ன் Old testament-பழைய ஏற்பாடு எனும் பகுதி யூதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் யூத மதத்தையும் பற்றி கூறுகிறது.இதிலுள்ள New testament-புதிய ஏற்பாடு எனும் பகுதி யேசுவின் வாழ்க்கையையும் அவரது சீடர்களை பற்றியும் கூறுகிறது.

பைபிளின் Old testment யூதர்களின் புனிதநூலாகும்."டால்மட்"எனும் நூலும் யூதர்களின் புனித நூல்.

முதன்முதலில் 1785-ல் ஸீகன்பர்க் என்பவர் தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.

தற்போதைய ரோமன் கத்தோலிக்க தமிழ் பைபிள் 1857-ல் மொழிபெயர்க்கப்பட்டது.

நாம் இப்போது பயன்படுத்தும் தமிழ் பரிசுத்த வேதாகமம் 1871-ல் போவர் என்பவர் மொழிபெயர்த்தது.

முதன் முதலில் உலோக எழுத்துக்கள் (Metal types) மூலம் அச்சிடப்பட்ட நூல் பரிசுத்த வேதாகமமாகும்.அப்பொழுது காகிதத்திலல்ல,ஆட்டுத்தோலிலேயே அச்சிட்டனர்.ஜெர்மனியில் 1456-ல் பிரசுரமான இவ்வேதாகமம் பக்கத்துக்கு 42 வரிகள் வீதம் 1282 பக்கங்களைக் கொண்டிருந்தது.அச்சிடப்பட்ட மொத்த பிரதிகள் 300.பிரதியொன்றுக்கு சுமார் 300 ஆடுகளின் தோல் தேவையாயிருந்தது.

தமிழ்மொழிக்கு முதன்முதலில் அச்சு எழுத்துக்கள் 1577-ல் ஹென்ரிக் பாதிரியாரால் உருவாக்கப்பட்டது.

தருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.

கேள்வி: "...மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; "//
மெஸையா (messiah) என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உச்சரிப்பை மாற்றினால் நம்க்கு வசதி என்று மாற்றக்கூடாதல்லவா?

பதில்: தருமி அவர்களே! பெயர் திரிபு என்பது ஒரு பொதுவான நிகழ்வு என நினைக்கிறேன்.உதாரணமாக ஆங்கிலத்தில் David எனப்படுபவர்,தமிழில் டேவிட் அல்லது டாவிட் அல்லது தாவீது அல்லது தாவூத் எனப்படலாம்.இது பெயர் திரிபுதானே. எல்லாமே ஒன்றைத்தானே குறிக்கிறது.இல்லையா?.
இதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டு கூறலாம் என நினைக்கிறேன்..

கேள்வி:"...next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt."//
the same thing is being said by muslims replacing jesus with mohamed. do you accept the statement of muslims?

பதில்:ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை.I respect their belief.இன்னும் சான்றுகளோடு கூறினால் ஒருவேளை பிறரும் நம்புவார்கள் அல்லவா?.

கேள்வி:actually i visited your blog to clarify one point. in a post for one of my possitive comments on Mr.Teresa and st. thomas there were some adverse statements. i want to bring it to your notice for CLARIFICATION on the following:"இல்லை 2000 ஆண்டு பழமையானது. ஏனெனில் ஏசுவின் ஒரு சீடர் தோமையார்/thomas அப்போதே இந்தியாவிற்கு வந்துள்ளார்.புதைக்கப்பட்ட இடமே St.Thoma's Mount"

இது இன்னொரு மெகா மகா பொய்.
நீங்கள் நம்புவது உங்கள் உரிமை.
ஆனால் இதையும் படியுங்கள்.

The Myth of Saint Thomas and the Mylapore Shiva Temple

http://hamsa.org/

will be happy if you oblige.

பதில்:வாதங்கள் எதிர் வாதங்கள் உலகில் சகஜமே.இன்றும் உலகம் உருண்டையில்லை தட்டையானது என கூறுபவர் இல்லையா?.அவர்கள் வாதிட்டு சொல்வதை ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.எந்த டாபிக்கை கொடுத்தாலும் இன்று நம்மால் பக்கம் பக்கமாய் பேச முடியும்.அதுவும் வரலாறென்றால் அவரவர் யூகங்களே.டாக்டரேட் பண்ண ஒரு ஸ்டிரேஞ் டாபிக் கிடைத்தால் சும்மா பண்ணலாம் ஆர்வமாக.
ஆரியர் வந்தார்கள் எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.ஆரியர் வரவேயில்லை எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.அதுவும் ஒரே நபர்.அவரவர் நம்பிக்கையே இறுதி முடிவு.
In this matter I respect your belief too.

தருமி அவர்களே உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி

பைபிளை அழிக்க நினைத்தவர் கதை

1788-ல் வியன்னா தலைவர் வால்டேர் பரிசுத்த வேதாகமத்தை அழிக்க உறுதிபூண்டார்."100 ஆண்டுகளுக்குள் வேதாகமத்தின் ஒரு தாள் கூட பூமியில் இல்லாமல் அழித்துப் போடுவேன்.அப்போஸ்தலர் கரங்களினால் எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க என் கரங்களே போதும்"என்றார்.அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது.இப்போது அவர் இருந்த வீட்டில் வேதாகம சங்க கிளை ஒன்று உள்ளது.

1984-ல் 1110 மொழிகளில் முழு பரிசுத்த வேதாகமமும் 132 மொழிகளில் திருக்குறளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பரிசுத்த வேதாகமம் 162 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிக மக்கள் பின்பற்றுவது கிறிஸ்தவ சமயமாகும்.இன்றைய நிலையில் பைபிள் 1400 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

லூக்கா 21:33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ (பைபிள்) ஒழிந்து போவதில்லை.

Luke:21:33 Heaven and earth will pass away, but My words (Bible) will by no means pass away.

Saturday, May 13, 2006

கொளதம புத்தரும் கிறிஸ்துவும்

இன்று புத்தரின் 2550-வது பிறந்தநாள்.நேபாளத்தின் லும்பினி நகரில் பிறந்த இவர் பீகார் மாநிலத்தின் கயா நகரில் முக்தி அடைந்தார்.

கொளதம புத்தர் (கிமு563-483) தமது திக்க நிக்யா (The Dhigha Nikya) என்னும் நூலில் தமக்குப் பின் உலகில் மேற்றியா (Metteyya) என்பவர் தோன்றி ஜனங்களுக்கு வழிகாட்டுவார் என்று எழுதியிருக்கிறார்.-Mrs.Rhys David.,Buddhism Page 180,243

யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

In Buddhism Maitreya Buddha is the future Buddha.Maitreya is a bodhisattva who Buddhists believe will eventually appear on earth, achieve complete enlightenment, and teach the pure dharma.Maitreya , a bodhisattva, prophesied by Gautama Buddha to be the next Buddha who will return to restore Buddhism when it becomes lost or corrupt.

John:141 He first found his own brother Simon, and said to him, “We have found the Messiah” (which is translated, the Christ).

Friday, May 12, 2006

மிகப்பெரிய கண்டுபிடிப்பு

குளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்

"என்னுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன் என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்"

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

James Young Simpson (1811-1870), who championed anesthesia`s use in Britain was a professing Christian, an ardent New Presbyterian.

Asked by a reporter what was his greatest discovery, he replied, "When I learned Jesus Christ had died for my sins."

Act:4:12 Nor is there salvation in any other, for there is no other name under heaven given among men by which we must be saved.”

Wednesday, May 10, 2006

தாயுமானவரும் கிறிஸ்துவும்

"தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்கு
என்னைத் தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே"
-தாயுமானவர் (கிபி 1706 - 1744)

உலகத்துக்காக தன்னைத்தந்தவர் யாரோ?.

யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (யேசுவை)விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (யேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

Thou gave Thyself to me
And prevented me from going astray.
If for that act of mercy
What profiteth Thee that
Thou take me entire in return,
My Mother dear?
Oh Para Param!
-Hymns of Thayumanavar (AD 1706 - 1744)

Who gave thyself to us?

John:3:16
For God so loved the world that He gave His only begotten Son (Jesus), that whoever believes in Him (Jesus) should not perish but have everlasting life.

Tuesday, May 09, 2006

திரு.வி.க-வும் கிறிஸ்துவும்

"மாசு மிகுந்த மனித இருள் போக்க வந்த
இயேசு உனை மறவேன் இன்று"

" உன் குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா"

"சிலுவையில் சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும்"

"கிறிஸ்துவின் இரத்தம் பெரு மருந்து.கேடில் இன்பம் தரு விருந்து"

"தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்கும் செங்கரனே"

-திரு.வி.கல்யாண சுந்தரனார்.(1883-1953)

"கிறிஸ்துவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு.ஆனால் மதம் மாற என் மனம் ஒருப்படவில்லை" என்றார்.இவர் உலகிலுள்ள சமயங்களின் சாரமெல்லாம் கிறிஸ்து பெருமானின் மலைப்பொழிவில் திகழ்வதாக நம்பினார்.அதனால் தான் தன் மணவிழாவின் போது கிறிஸ்தவ ஜெபத்திற்கும் இடம் கொடுத்தார்."கிறிஸ்துவின் அருள் வேட்டல்" எனும் நூலை எழுதினார்.

I யோவான் 1:7 அவர் (யேசு) ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்

1 John 1:7 But if we walk in the light as He (Jesus) is in the light, we have fellowship with one another, and the blood of Jesus Christ His Son cleanses us from all sin.

Monday, May 08, 2006

வாழ்வின் சிறப்பு

நேற்றைய தினத்தின் நினைவு
மகிழ்ச்சி தர வேண்டும்
இன்றைய தினத்தின் வாய்ப்புகள்
உற்சாகம் தர வேண்டும்

பணம்,பதவி சிறப்பல்ல
புகழ்,அழகு சிறப்பல்ல
மனதின் நிம்மதியே
வாழ்வின் சிறப்பு

-சிந்தனைக்கு.விஷ்வவாணி சமர்ப்பண்

உண்மையிலும் உண்மையன்றோ?

யோவான் 14:27
(இயேசு சொல்கிறார்)
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

John:14:27
(Jesus says)
Peace I leave with you, My peace I give to you; not as the world gives do I give to you. Let not your heart be troubled, neither let it be afraid.

Sunday, May 07, 2006

சிரித்தால் வாழலாம்

இன்று உலக சிரிப்பு தினமாம்.மனிதன் மகிழும் போது சிரிக்கின்றான்.Laughter is the best
medicine என்பார்கள்.அது போல மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் என்கிறது வேதம்.
சிரிக்கையில் நுரையீரலிலிருந்து அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வாயு வெளியேறுவதால் கண்களுக்கு கூர்மையும் பிரகாசமும் கிடைக்கிறதாம்.

நீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்
Proverbs 17:22 A merry heart does good, like medicine

Saturday, May 06, 2006

கழுகுக் கண்

மனிதர்களை விட பறவைகளுக்கு பார்க்கும் சக்தி 10 மடங்கு அதிகம்.2 மைல்களுக்கு அப்பால் திரியும் 46 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு முயலை ஒரு கழுகு எளிதில் பார்த்துவிடும்.பைபிள் பறவைகளின் பார்க்கும் சக்தி பற்றி இவ்வாறு கூறுகிறது.

ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.யோபு:28:7. அதாவது பட்சிகளின்,வல்லூறின் கண்கள் அத்தனை சக்தி வாய்ந்ததாம்.

Job:28:7 There is a path which no fowl knoweth, and which the vulture's eye hath not seen:

Friday, May 05, 2006

"கிறிஸ்துவோடிருப்பது எவ்வளவோ மேல்.........."

நான் எந்தப் பாதை வழி சென்றாலும் என் நேசர் எனக்கு முன்னதாக அப்பாதையில் சென்றிருக்கிறார்.அவர் அனுபவித்திராத வேதனையையோ அவர் பட்டிராத கஷ்டத்தையோ புதிதாக நான் ஒன்றும் அனுபவித்து விடப் போவதில்லை - எமி


பனிப்பாறைகள்
சமயத்துக்கு சமயம் மாறும்
மாய அன்பினில் மாய்ந்திடாதே(-அவை பனிப்பாறைகள்)
மனித அன்பினில் மயங்கிடாதே(-அவை பனிப்பாறைகள்)
மகிபன் யேசுவின் மாசற்ற அன்பை
மகிழ்வுடன் நீயும் பெற்றுக்கொள்வாய்
(19:8:93)

உலகம் முடியும் வரையும்
உந்தனோடிருப்பேன் என்றவர்
வாக்கு மாறிடா தேவனன்றோ
நம்பிடுவாய் துணை அவரே

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.சங்கீதம்:48:14

Thursday, May 04, 2006

நோவாவும் ஆலிவ் இலையும்

ஒலிவ (Olive) இலையானது சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார்.இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது.

ஆதியாகமம்:8:11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

Tuesday, May 02, 2006

பழைய ஏற்ப்பாட்டு சம்பவங்கள் - கால வரிசைப்படி

· ஆதாம்-ஏவாள் காலம்...............................ஏறத்தாழ கிமு 4000.
· நோவா கால பெருவெள்ளம்.............................ஏறத்தாழ கிமு 2400.
· ஆபிரகாம்...............................ஏறத்தாழ கிமு 2000.
· யாக்கோபு.................................ஏறத்தாழ கிமு 1900.
· யோசேப்பு................................ஏறத்தாழ கிமு 1800.
· மோசே.................................ஏறத்தாழ கிமு 1400.
· எகிப்திலிருந்து இஸ்ரேல் ஜனங்கள் விடுவிக்கப்படல்............................ஏறத்தாழ கிமு 1400.
· ரூத்..................................ஏறத்தாழ கிமு 1150.
· சாமுவேல்................................ஏறத்தாழ கிமு 1100.
· சவுல் ராஜா காலம்..................................ஏறத்தாழ கிமு 1053.
· தாவீது ராஜா காலம்.................................ஏறத்தாழ கிமு 1013.
· சாலோமோன் ராஜா காலம்...............................ஏறத்தாழ கிமு 973.
· இஸ்ரேல் நாடு பிரிக்கப்பட்டது (1 இராஜாக்கள் 12)...ஏறத்தாழ கிமு 933.
· கலிலேயா சிறைபிடிக்கப்பட்டது.....................ஏறத்தாழ கிமு 734.
· இஸ்ரேல் நாடு சிறைபிடிக்கப்பட்டது...................ஏறத்தாழ கிமு 721.
· யூதேயா பாபிலோனிய அரசின் கீழ் வந்தது............ஏறத்தாழ கிமு 606.
. யோயாக்கீன் ராஜா சிறைபிடிக்கப்பட்டது................ஏறத்தாழ கிமு 597.
· எருசலேம் அழிக்கப்பட்டது.................ஏறத்தாழ கிமு 586.
· சிறையிருப்பிலிருந்து திரும்புதல்.................ஏறத்தாழ கிமு 536 .
· தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது........................ஏறத்தாழ கிமு 520.
· எஸ்தர் பெர்ஸியாவின் ராணி ஆன காலம்........ஏறத்தாழ கிமு 478.
· எஸ்றா எருசலேம் சென்றது................ஏறத்தாழ கிமு 457.
· நெகேமியா அரண் கட்டியது............ஏறத்தாழ கிமு 444.

பைபிள் உண்மைகள்

பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்

பழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்

புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.

பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.

பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.

காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.

பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.

பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.

பழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும் உள்ளன.

-தொகுக்கப்பட்டது