Tuesday, May 16, 2006

கிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகம்

BIBLE என்பதின் விரிவாக்கம் Behold I Bring Life Eternal எனலாம்.

கிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகமாகிய The Holy Bible-பரிசுத்த வேதாகமம்-விவிலியம்-புனித வேதம்-ன் Old testament-பழைய ஏற்பாடு எனும் பகுதி யூதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் யூத மதத்தையும் பற்றி கூறுகிறது.இதிலுள்ள New testament-புதிய ஏற்பாடு எனும் பகுதி யேசுவின் வாழ்க்கையையும் அவரது சீடர்களை பற்றியும் கூறுகிறது.

பைபிளின் Old testment யூதர்களின் புனிதநூலாகும்."டால்மட்"எனும் நூலும் யூதர்களின் புனித நூல்.

முதன்முதலில் 1785-ல் ஸீகன்பர்க் என்பவர் தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.

தற்போதைய ரோமன் கத்தோலிக்க தமிழ் பைபிள் 1857-ல் மொழிபெயர்க்கப்பட்டது.

நாம் இப்போது பயன்படுத்தும் தமிழ் பரிசுத்த வேதாகமம் 1871-ல் போவர் என்பவர் மொழிபெயர்த்தது.

முதன் முதலில் உலோக எழுத்துக்கள் (Metal types) மூலம் அச்சிடப்பட்ட நூல் பரிசுத்த வேதாகமமாகும்.அப்பொழுது காகிதத்திலல்ல,ஆட்டுத்தோலிலேயே அச்சிட்டனர்.ஜெர்மனியில் 1456-ல் பிரசுரமான இவ்வேதாகமம் பக்கத்துக்கு 42 வரிகள் வீதம் 1282 பக்கங்களைக் கொண்டிருந்தது.அச்சிடப்பட்ட மொத்த பிரதிகள் 300.பிரதியொன்றுக்கு சுமார் 300 ஆடுகளின் தோல் தேவையாயிருந்தது.

தமிழ்மொழிக்கு முதன்முதலில் அச்சு எழுத்துக்கள் 1577-ல் ஹென்ரிக் பாதிரியாரால் உருவாக்கப்பட்டது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment