Thursday, October 04, 2007

சுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது

பிரபல தமிழ் கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்கள் (Shuddhanadha Bharati 1897-1990) கிறிஸ்துவைப்பற்றி இவ்வாறு பாடினார்.
Tamil poet Shuddhanadha Bharati wrote about Jesus Christ as follows.

மரணத்தை வென்றவனே! மன்னவனே அன்புருவே!
தரணி உய்யப் பிறந்தவனே! தாவீதரசன் குலக் கொளுந்தே
கருணையுடன் அவதரித்தாய்! காத்திடவே மெய்யறத்தை
அரண் எமக்குன் திருவருளே அறிவெல்லாம் அமர்ந்தவனே!

நலத்தினைப் பழகிக் காட்டி நன்னெறித் தவத்தில் ஓங்கி
நலத்தினை மாந்தர் உய்ய நவின்றனை அன்பினாலே,
நலத்தினை அறியா மாக்கள் நவிலருங் கொடுமை செய்ய.
நலத்தினை அறியக் காட்ட நல்கினை பலியாய் உன்னை.

உன் பெயராலே இந்த உலகினில் உயிர்ப்போம்!நாங்கள்
உன் பெயராலே உண்போம்,உன் அருள் சிறக்க வாழ்வோம்
உன் பெயராலே எங்கும் உத்தமத் தொண்டு செய்வோம்.
உன் பணித் திறத்திற்கெங்கள் உழைப்பெலாம் ஈந்து வாழ்வோம்.


II தீமோத்தேயு 1:10
நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக்கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்

2 Timothy 1:10
But is now made manifest by the appearing of our Saviour Jesus Christ, who hath abolished death, and hath brought life and immortality to light through the gospel:

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment