Monday, October 08, 2007

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை பாடல் வரிகள்

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும்

என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும்

-பாஸ்டர்.வெஸ்லி (அரியலூர்)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment