Monday, October 01, 2007

பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?

கேள்வியும் பதிலும்...
பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?

கோவிலுக்குச் சென்றுகொண்டிருந்த ஒரு சாதாரண சமுசாரியை இடைமறித்து - அயர்லாந்து ராஜ தந்திரி காலின்ஸ் என்பவர் கீழ்க்கண்டவாறு உரையாடினார்.

"எங்கே போகிறாய்?"

"கடவுளைத் தொழுதுகொள்ள"

"அந்தக் கடவுள் பெரிய கடவுளா,சின்னக் கடவுளா?"

"வானங்களும், வானாதி வானங்களும் கொள்ளாத அவ்வளவு பெரிய கடவுளாகவும்,என் இருதயத்தில் தங்கும்படியான அவ்வளவு சின்னக் கடவுளாகவும் இருக்கிறார்" என்றான் சமுசாரி.

"கடவுளைப் பற்றி எத்தனையோ புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் இந்த சாதாரண விவசாயி கொடுத்த உத்தரவு தான் என்னை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது" என்றார் காலின்ஸ்

சங்கீதம்:111:10
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

வெளி 22:13
நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.

Psalm 111:10
The fear of the LORD is the beginning of wisdom

Revelation 22:13
I am Alpha and Omega, the beginning and the end, the first and the last.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment