Tuesday, October 09, 2007

கடவுளைக் காட்டு...

கடவுளைக் காட்டு...
சூரியனின் சூட்சமம்

"கடவுள் நம்மைப் பார்க்கிறவர் என்று சொல்லுகிறீரே,அந்த கடவுளை எனக்கு காட்டும்" என்றார் திரேஜன் சக்கரவர்த்தி யூதரபியிடம்.

"கடவுள் ஆவியாய் இருக்கிறாரே,அவரைக் கண்ணால் பார்க்க முடியாதே" என்றார் யூதரபி."நாம் பார்க்கமுடியாத கடவுள் நம்மை எப்படிப் பார்ப்பார்,இது பித்தலாட்டம்;மேலும் நீர் சொல்வதை நான் நம்பமுடியாது;கடவுளை இப்பொழுது எனக்கு காட்டத்தான் வேண்டும்" என்று வற்புறுத்தி கட்டாயப்படுத்தினார் சக்கரவர்த்தி.

மத்தியானம் 12 மணிக்கு சக்கரவர்த்தியை அழைத்துக்கொண்டு வெளியே போய் "இப்பொழுது சூரியனைப்பாரும்" என்றார் யூதரபி.

"கண் கூசுகிறதே,சூரியனை என்னால் எப்படிப் பார்க்கமுடியும்?" என்றார் சக்கரவர்த்தி.

"கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவைகளில் ஒன்றாகிய சூரியனையே உம்மால் பார்க்க முடியவில்லையே,சிருஷ்டிகராகிய கடவுளை எப்படிப் பார்க்கமுடியும்" எனச் சொல்லிச் சென்றார் யூதரபி.

சக்கரவர்த்திக்கு பேச நாவெழவில்லை.

சங்கீதம் 14:1
தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.

வெளி 4:11
கர்த்தாவே, தேவரீர்,...நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்,

Psalm 14: 1
The fool hath said in his heart, There is no God.

Revelation 4:11
Thou art worthy, O Lord,...for thou hast created all things,

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment