Saturday, August 01, 2009

யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்


யெகோவா யீரே தந்தையாம் தெய்வம் நீர் மாத்திரம் போதும் எனக்கு பாடல்
Yehova yirea thanthaiyaam theyvam tamil christian song

யேகோவா யீரே தந்தையாம் தெய்வம் Lyrics


1. யேகோவா யீரே தந்தையாம் தெய்வம்
நீர் மாத்ரம் போதும் எனக்கு
யேகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம்
உம் தழும்புகளால் சுகமானோம்
யேகோவா ஷம்மா என்கூட இருப்பீர்
என் தேவை எல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)

2. யேகோவா ஏலோயீம் சிருஷ்டிப்பின் தேவனே
உம் வார்த்தையால் உருவாக்கினீர்
யேகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
யேகோவா ஷாலோம் உம் சமாதானம்
தந்தீர் என் உள்ளத்தில்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)

3. இயேசுவே நீரே என் ஆத்ம நேசர்
என் மேல் எவ்வள வன்பு கூர்ந்தீர்
என்னையே மீட்க உம்மையே தந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
நீரே என்றென்றும் போதும்

நீர் மாத்ரம் போதும் நீர் மாத்ரம் போதும்
நீர் மாத்ரம் போதும் எனக்கு (2)


யேகோவாவின் நாமங்கள்

யேகோவா
அர்த்தம் : நித்தியமானவர்,அழிவில்லாதவர்,சர்வ வல்லமையுள்ள தேவன்,இருக்கிறவராகவே இருக்கிறவர்.
இருப்பிடம்: யாத்திராகமம் : 6 :2,3; 3:13,14;, சங்கீதம் : 83 : 17;, ஏசாயா : 12:2 ;26:4;, ஆதியாகமம் : 21:33;

யேகோவா நாமங்களாவன...

1.யேகோவா ஏலோஹீம்
அர்த்தம் : நித்தியமான சிருஷ்டிகர்,தன்னிறையுள்ள தேவன்
இருப்பிடம்: ஆதியாகமம் :2 :4-25
தேவனாகிய கர்த்தர் என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

2.யேகோவா அடோனாய்
அர்த்தம் : எல்லாவற்றிர்க்கும் மேலானவர்
இருப்பிடம்:ஆதியாகமம் :15:2,8;
கர்த்தராகிய ஆண்டவர் என்று வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது

3.யேகோவா யீரே
அர்த்தம் : எல்லாவற்றையும் பரர்த்துக்கொள்ளக்கூடியவர்
இருப்பிடம்: ஆதியாகமம் :22:14;

4.யேகோவா நிசி
அர்த்தம் : கர்த்தர் எங்கள் ஜெயக்கொடி
இருப்பிடம்: யாத்திராகமம் :17:15;

5.யேகோவா ரப்பா அல்லது யேகோவா ரபேக்கா
அர்த்தம் : பரிகாரியாகிய கர்த்தர்,குணமாக்கிற கர்த்தர்
இருப்பிடம்: யாத்திராகமம் : 15:26;

6.யேகோவா ஷாலோம்
அர்த்தம் : கர்த்தர் நம் சமாதானம்
இருப்பிடம்: நியாதிபதிகள் : 6:24;

7.யேகோவா சிக்கேனு
அர்த்தம் : நிதியின் கர்த்தர்
இருப்பிடம்:ஏரேமியா :23: 6;

8.யேகோவா மெக்காதீஸ்
அர்த்தம் : பரிசுத்தமாக்குகிற கர்த்தர்
இருப்பிடம்: யாத்திராகமம் : 31:13; லேவியராகமம் : 20 : 8; ஆதியாகமம் :20 : 30;21:8;22:9,16; எசேக்கியேல் :20:12;

9.யேகோவா சபயத்
அர்த்தம் : சேனைகளின் கர்த்தர்
இருப்பிடம் : 1 சாமுவேல் 1:3;

10.யேகோவா ஷம்மா
அர்த்தம் : உடன் இருக்கிற கர்த்தர்
இருபபிடம் : எசேக்கியேல்: 48:35;

11.யேகோவா ஏலியோன்
அர்த்தம் : உன்னதமான கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் :7:17;47:35;

12.யேகோவா ரோகி அல்லது யேகோவா ரூவா
அர்த்தம் : கர்த்தர் என் மேய்ப்பர்
இருப்பிடம் : சங்கீதம் : 23:1;

13.யேகோவா ஓசேனு
அர்த்தம் : உண்டாக்குகிற கர்த்தர்,உருவாக்குகிற கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் : 45:6;

14.யேகோவா ஏலோகேனு
அர்த்தம் : நம்முடைய தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் : சங்கீதம் : 8:9;99:5;

15.யேகோவா ஏலோகேக்கா
அர்த்தம் : உன் தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் : யாத்திராகமம் : 20:2,7;5:9;

16.யேகோவா ஏலோகே
அர்த்தம் : உன் தேவனாகிய கர்த்தர்
இருப்பிடம் :சகரியா : 14:5;

1 comment:

  1. Nice song and very useful information. Can you please post the Lyrics for this song?

    ReplyDelete