நவீனகால இஸ்ரேலின் மிகப் பிரபலமான ரபியாகக் கருதப்படுபவர் இட்சாக் கடூரி. 108ஆவது வயதில் இவரது மரணத்தின் போது 200000 இஸ்ரேலியர்கள் எருசலேமிலே கூடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் பிரபலமான மதிப்பிற்குரிய இந்த இட்சாக் கடூரி ரபியின் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றனவாம். இந்தோனேசியா சுனாமியையும் அதைத்தொடந்த அழிவுகளையும் இவர் முன்னறிவித்ததாக கூறுகிறார்கள். 2006ஆம் ஆண்டில் இட்சாக் கடூரி தான் இறந்த போது ஒரு பேப்பர் குறிப்பை ஒரு சீலிட்ட கவரில் விட்டு சென்றிருந்தார். தான் மேசியாவைக் கண்டேன் என்றும் அவரது பெயரை இந்த குறிப்பில் எழுதியிருக்கிறேன் என்றும் என் இறப்பிற்கு பின் ஒரு வருடம் கழித்து இந்த குறிப்பை திறந்து பார்த்து உண்மையான மேசியாவை தெரிந்து கொள்ளுங்கள் என அறிவித்து சென்றிருந்தார். அவரது மரணத்திற்கு பின் சரியாக ஒரு வருடம் கழித்து 2007ல் அவரது குறிப்பை திறந்து படித்தபோது அதில் எபிரேய மொழியில் ஜெசுவா அதாவது இயேசு என்று எழுதப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இந்த குறிப்பை பிராடு போர்ஜரி எனச்சொல்லி ஒதுக்கிதள்ளிவிட்டனர்.
இதே பிரபல ரபி சொல்லிச் சென்றிருக்கும் இன்னொறு வாக்கு ஏரியல் ஷாரோனின் மரணம் பற்றியது. அதாவது ஏரியல் ஷாரோனின் மரணத்தை தொடர்ந்து மேசியா வெளிப்படுவார் என்பதாகும். இந்த வார்த்தைகளை கடூரி சொல்லும் போது இன்னும் ஏரியல் ஷாரோன் இஸ்ரேலின் பிரதமாக திடகாத்திரமாக இருந்து வந்தார். அடுத்து சில மாதங்களில் ஜனவரி 2006ல் கடூரியும் இறந்து விட அதே மாதம் ஏரியல் ஷாரோனும் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையானார். கடந்த எட்டு வருடங்களாக மரணிக்காமல் கோமா நிலையிலேயே இருந்துவந்த ஷாரோன் இப்போது மரணம் அடைந்திருக்க கடூரியின் தீர்க்கதரிசனம் இப்போது மிக பிரபலமாக பேசப்படுகிறது. எட்டு வருடங்களாக அவரை சாகவிடாமல் கோமாவிலேயே அவரை வைத்து இருந்தது மிக ஆச்சரியமான விசயமாகும்.
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். எபிரெயர் 10:37