Thursday, February 10, 2011

உலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள்

வேதாகமத்தின் உபாகமம் புத்தகத்தில் 28-ம் அதிகாரம் 64-ம் வசனத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனமானது அப்படியே யூதர்கள் வாழ்வில் நிறைவேறியது. ”கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனைதுவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்” என்பதே அந்த தீர்க்கத்தரிசனம். கிறிஸ்துவுக்கு முன் 1400 வாக்கில் எழுதப்பட்ட இந்த வாக்கு பிற்பாடு பல்வேறு ஆண்டுகளில் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக நிறைவேறியது. யூதர்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு எதிரிகளால் துரத்தி அடிக்கப்பட்டனர். இதனை வரலாற்றில் யூத டயஸ்போரா (Jewish Diaspora) என்பார்கள். ஒரு கட்டத்தில் யூதர்கள் இல்லாத நாடே உலக வரை படத்தில் இல்லாத நிலமை இருந்தது. இன்றைக்கும் இஸ்ரேலுக்கு திரும்பிப் போய் மிஞ்சி இருக்கும் யூதர்கள் வட அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும், உக்ரேனிலும் இருக்கின்றனர். நமது நாட்டில் கூட கேரளா மாநிலத்தில் ஒரு கூட்டம் யூதர்கள் முன்பு வந்து தஞ்சம் புகுந்திருந்தனர். உலக வரலாற்றிலேயே அதிகமாக மேற்சொன்ன பைபிள் வசனப்படி சிதறடிக்கப்பட்டவர்கள் யூதர்கள் தான் என்பதை நம் மாநில நிதியமைச்சர் அன்பழகன் அவர்கள் கூட ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment