இன்றைய சூழலில் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மத்திய சிறையிலிருந்து விடுபட்டு ஜார்ஜ் கோட்டைக்கு அரசாள செல்பவரும் உண்டு.பாராளுமன்றத்தில் அமைச்சராய் இருந்து பின் நடுத்தெருவுக்கு அனாதையாய்ப் போனோரும் உண்டு.இதைப்பற்றிய பைபிள் பொன்மொழி இதோ..... இனிமேல் சில Interesting bible words-ம் உங்களுக்காக அவ்வப்போது...
பிரசங்கி:4:14. அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
Interesting Bible words
Ecclesiastes:4:14 For out of prison he cometh to reign; whereas also he that is born in his kingdom becometh poor.
Tuesday, February 28, 2006
சிறையிலிருந்து கோட்டைநோக்கி
Monday, February 27, 2006
திரும்பி வந்த நாணயம்
சேக்கல் எனப்படும் நாணயம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலில் புழக்கமாய் இருந்தது.இஸ்ரேல் நாட்டிலிருந்து யூதர்கள் சிதறடிக்கப்பட்டதை தொடர்ந்து சேக்கல் நாணயம் முற்றிலும் காணாமல் போய் இருந்தது.இப்போது பைபிள் வாக்கியப்படி மீண்டும் இஸ்ரேல் நாடு உருவானது மட்டுமல்லாமல் மீண்டும் பழைய பைபிள் கால இஸ்ரேல் நாட்டின் நாணயமான சேக்கல் உயிர்பெற்று வந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.The currency had been the Israeli pound until June 1980, when it was changed to the shekel.
எசேக்கியேல்:45:12. சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.
The shekel
After nearly 2,000 years the shekel has been reinstated as the common monetary unit in Israel, again, just as predicted.Since 1980, the sheqel has been the currency of the modern state of Israel, first the Israeli sheqel, then (since 1985) the Israeli new sheqel. As of January 16, 2006, 1 US Dollar equals approximately 4.60 NIS (New Israeli Shekel, also referred to as ILS), 1 Euro equals approximately 5.6 NIS, and 1 pound sterling equals approximately 8.16325 NIS. There are 100 agorot to a shekel.
Ezekiel 45:12-16 NIV - "The shekel is to consist of twenty gerahs. Twenty shekels plus twenty-five shekels plus fifteen shekels equal one mina.... All the people of the land will participate in this special gift for the use of the prince in Israel."
Sunday, February 26, 2006
யூப்ரடீஸ் நதி வற்றுமா?
வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலுடன் போரிடும் என பைபிள் சொல்லுகிறது.இது சில வருடங்களுக்கு முன்பு வரை சாத்தியமில்லாதிருந்தது.அப்பெரு நதியாவது..வற்றுவதாவது..?..ஆனால் இன்று அது சாத்தியமாகிவிட்டது.துருக்கி நாடு கட்டியுள்ள சில அணைகளால் அந்த நதியின் ஓட்டத்தை இப்பொது தடுத்து நிறுத்த முடிகிறதாம்.யூப்ரடீஸ் நதி வற்றும் என்ற பைபிள் வாக்கியம் எப்படி நடக்கிறதென்று பாருங்கள்.
வெளி:16:12. ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
Revelation:16:12 The sixth angel poured out his bowl on the great river Euphrates, and its water was dried up to prepare the way for the kings from the East.
Euphrates River to Be Dried Up
In Revelation 16:12, the Bible predicts that the Euphrates River
will be dried up to prepare the way for the kings of the east to invade Israel. This will happen at the time of the battle of
Armageddon according to verse 16 of the same chapter. The battle of Armageddon will be the final battle at which time Jesus
will return and fight on the side of the nation of Israel. Immediately thereafter He will establish His kingdom and usher in His
one thousand-year reign of peace. On January 13, 1990, the Indianapolis Star carried the headline “Turkey Will Cut Off Flow of
Euphrates for One Month.” The article stated that a huge reservoir had been built by Turkey. While filling up the reservoir, the
flow of the Euphrates would be stopped for one month and a concrete plug for a diversion channel built. These things have now
been done. With this newly built dam, Turkey has the ability to stop the Euphrates River at will. The conditions for fulfilling this
1,900 year-old prophecy are now in place.
Thursday, February 23, 2006
ஆடாத ஆட்டமெல்லாம்...போட்டவங்க மண்ணுக்குள்ளே
மனிதன் மண்ணிலே பிறக்கிறான்,மண்ணிலே சவமாகிறான்.இந்த இரண்டையும் இணைந்து தான் "பிரசவம்" என்கிறார்கள் போலும்.மண்ணிலிருந்து இரும்பை பிரித்தெடுத்து இரும்பு பொருட்கள் செய்வது போல,கீழ்கண்ட தனிம கலவையில் செய்த மண்பொம்மையானது அதில் உயிர் நுழைந்ததும் மனிதனாகிறான்.உயிர் போனதும் அவன் சவமாகி, பின் அத்தனிம கலவை மண்பொம்மை மண்ணோடு மண்ணாகிப்போகிறது.
அதைதான் "கடவுள் மனிதனை மண்ணிலிருந்து படைத்தார்" என்கிறது பைபிள்.
Oxygen 65.0 %
Carbon 18.5 %
Hydrogen 9.5 %
Nitrogen 3.3 %
Calcium 1.5 %
Total 97.8 %
ஆதியாகமம்:2:7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆதியாகமம்:3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
Genesis:2:7 the LORD God formed the man from the dust of the ground and breathed into his nostrils the breath of life, and the man became a living being.
Genesis:3:19 By the sweat of your brow you will eat your food until you return to the ground, since from it you were taken; for dust you are and to dust you will return."
Origin of Man
According to the Bible, man was formed from the dust of the ground:
"And the Lord God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living being." Genesis 2:7
Over the years, scientists laughed at this passage, arguing that it would be foolish to actually believe that man could have been formed from the soil of the ground. Now, however, it is Christians who are laughing! A Reader's Digest article in November of 1982, reported the discovery made by NASA Arms Research Center, confirming the Biblical account of man's origin. These scientists discovered that every single element found in the human body exists in the soil covering our planet. The scientists concluded, "We are just beginning to learn. The Biblical scenario for the creation of life turns out to be not far off the mark."
Wednesday, February 22, 2006
பிரசவ வேதனை
மனித இனத்துக்கு மட்டுமே பிரசவவேதனை இத்தனை அதிகம் என "விகடன்,ஹாய் மதனில்" மதன் குறிப்பிடுகிறார்.பைபிளை புரட்டிய போது இதற்கு விடைகிடைத்தது.உலக துவக்கத்தில் கடவுள் மனிதனை படைத்த காலத்தில் ஏவாள் தடை செய்யப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டு பாவம் செய்தபடியால் கடவுள் பெண்டிருக்கு கொடுத்த தீர்ப்பு-அந்த வேதனை என்கிறது பைபிள்.ஆச்சர்யம் தான்!!!!
-------------------------------------------------------------------------------------
ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
முட்டையிடும் பிராணிகள் பிரசவ வேதனையில் இருந்து தப்பிவிட்டது பற்றி..?
முட்டையென்ன, குட்டி போடும் பிராணிகளுக்கும் பிரசவ வேதனை கிடையாது! பிரசவத்தின்போது ஏதோ வித்தியாசமாக உணருமே தவிர, மாடு, ஆடு, நாய்... ஏதாவது குட்டி போடும்போது, ‘அலறி’ப் பார்த்திருக் கிறீர்களா? மனித இனத்துக்கு மட்டுமே பிரசவ வேதனை உண்டு. காரணம், இந்தப் பாழாய்ப் போன தலை! மூளை வளர வளர, மண்டையும் பெரிசாகிவிட்டது. பெண்ணின் ‘பிரசவ வாயில்’ எதிர்பாராத, திடீர் பரிணாமப் பிரச்னை!
-------------------------------------------------------------------------------------
நன்றி:விகடன் ஹாய் மதன் கேள்வி&பதில்
ஆதியாகமம்:3:16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
Genesis 3:16 To the woman he said,
"I will greatly increase your pains in childbearing;
with pain you will give birth to children.
Your desire will be for your husband,
and he will rule over you."
Tuesday, February 21, 2006
என்னாலேயல்லாமல்
உங்கள் comment-க்கு மிக்க நன்றி பகுத்தறிவாளன்.உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது.வியப்பைத்தருகிறது.உங்கள் கேள்விகளும் எனது பதில்களும் இங்கே...
நான் இதிலெல்லாம் பண்டிதன் இல்லை. எனினும் முயல்கிறேன் Mr.பகுத்தறிவாளன்.
பகுத்தறிவாளன்:"பைபிளில் கூறப்பட்ட முன்னறிவிப்புகளை முழுமையாக நம்பும் உங்களிடம் பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட ஓர் விஷயத்தைக் குறித்து எனது ஓர் சந்தேகம் கேட்பதற்கு உண்டு. அதனை பின்னர் கேட்கிறேன்."
தோமா:உங்கள் கேள்வியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
பகுத்தறிவாளன்://பைபிள் சொல்லுகிறது"இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று."// இது "ஆறாவது பேரரசு - நம்பமுடியாதது" பதிவில் பைபிள் கூறுவதாக நீங்கள் எழுதியிருப்பது. இதில் மகா தேவன் - கடவுள், ராஜாவுக்கு-இயேசுவுக்கு இனிமேல் சம்பவிப்பதை தெரிவிப்பதாக பைபிள் கூறுகிறது. அதாவது தேவன் - கடவுள் வேறு ராஜா-இயேசு வேறு என்று பைபிள் கூறுகிறது. நீங்கள் தேவன் - கடவுள், ராஜா-இயேசு இருவரும் ஒருவர் தான் எனக் கூறுகிறீர்கள். இந்த இரண்டில் எது சரி.
தோமா:இங்கு மகாதேவன்என்பது ----தேவனாகிய கர்த்தர்
இங்கு ராஜா என்பது -அக்காலத்தில் பாபிலோனை ஆண்ட நேபுகாத்நேச்சார் ராஜா .தேவனாகிய கர்த்தர் இந்த ராஜாவுக்கு காண்பித்த சொப்பனத்திற்க்கு தானியேல் இங்கு அர்த்தம் சொல்கிறான்.இங்கு ராஜாஎன்பது யேசுவை குறிக்கவில்லை.
பகுத்தறிவாளன்://அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.//இது "அரசியலும் கிறிஸ்தவமும்" பதிவில் நீங்கள் எழுதியிருப்பது. இதன் அர்ந்தம் இயேசு தான் தேவன் - கடவுள் என்று நீங்கள் கூற வருவது போல் உள்ளது
தோமா:சொப்பனத்தில் கண்ட அந்த கல் தான் யேசு.
வெளி:20:6. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
பகுத்தறிவாளன்:நீங்கள் கூறுவது போல் இயேசு தான் கடவுளா அல்லது பைபிள் கூறுவது போல் கடவுளும் இயேசுவும் வெவ்வேறானவர்களா?
தோமா:எனது நம்பிக்கை மனுகுலத்தை மீட்க பிதாவாகிய தேவன் யேசுவாகிய ரட்சகரை உலகத்துக்கு அனுப்பினார்."என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."என்ற யேசுவின் வார்த்தையை நம்புகிறேன்.அவ்வளவே.
யோவான் :12:44. அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான்.49. நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
யோவான் :14:6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
உங்கள் ஆரோக்கியமான விவாதத்துக்கு மிக்க நன்றி.
John:12:44 Then Jesus cried out, "When a man believes in me, he does not believe in me only, but in the one who sent me. 45When he looks at me, he sees the one who sent me.
John:14:6 Jesus answered, "I am the way and the truth and the life. No one comes to the Father except through me
Monday, February 20, 2006
இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
இருபதுகோடி பேர் கொணட ராணுவம் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் இஸ்ரேலை நோக்கி படையெடுத்து செல்லும் என்று பைபிள் சொல்லுகிறது.இது சில ஆண்டுகளுக்கு முன் வரை சாத்தியமே இல்லை.ஏனெனில் உலகில் மக்கள் தொகையே மிககுறைவாக இருந்தது.ஆனால் இன்று இது சாத்தியம்.கூட்டணி நாடுகளாகவோ இல்லை தனி நாடாகவோ இது இன்று சாத்தியம்.உதாரணமாக சீனா படை பலம் 375,520,255.பைபிள் வாக்கியங்கள எப்படி நிஜமாகுதென்று பாருங்களேன்.
(China has the largest armed army in the world. According to 2003 estimates, the manpower available for military service was 375,520,255 people, of which 206 million were fit for active duty.)
வெளிப்படுத்தின விசேஷம்:9:15. அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
16. குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன்.17. குதிரைகளையும் அவைகளினால் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன.(பாருங்கள்...தீயைகக்கும் நவீன ஆயுதங்கள் பற்றி அந்த காலமே பைபிள் கூறியிருக்கிறது.)
In Revelation 9:16, the Bible says that an army of 200 million will one day march toward Israel. Of course, this prophecy hasn't been fulfilled yet, at least not literally. But, as the world's population rises above 6 billion, it is increasingly possible for a coalition of countries to amass an army of 200 million, and this would have been have been unthinkable even 100 years ago.
Revelation 9:16 - The number of the mounted troops was two hundred million. I heard their number.
Thursday, February 16, 2006
பைபிளில் இந்தியா
எஸ்தர் 1:1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
எஸ்தர் 8:9 மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
(இங்கே அகாஸ்வேரு-Xerxes என்பவர் பெர்ஸிய பேரரசின் மன்னர்,டேரியஸ்-Darius மன்னனின் மகன்)
மத்தேயு 2:1 ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,
(இங்கே கிழக்குஎன்பது இந்தியாவை குறிக்கலாம்-அந்த காலங்களில் நமது தேசத்தில் அநேக ஞானபண்டிதர்கள்,வானசாஸ்திரிகள்,காலத்தை கணிப்பவர்கள் இருந்தார்கள் என எடுத்துக்கொண்டால்)
India in Bible
Esther 1:1 This is what happened during the time of Xerxes, the Xerxes who ruled over 127 provinces stretching from India to Cush
Esther 8:9 They wrote out all Mordecai's orders to the Jews, and to the satraps, governors and nobles of the 127 provinces stretching from India to Cush.
Matthew 2:1 After Jesus was born in Bethlehem in Judea, during the time of King Herod, Magi from the east came to Jerusalem
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை -உள்ளே? வெளியே?
நன்றி ஜோ / Joe .பாருங்கள்.இந்த வாக்கியங்களை மறந்துவிட்டேன்.
"என்னை ஆண்டவனே ஆண்டவனே என்பன் விண்ணரசில் சேரமாட்டாம் .என் வார்த்தைகளின் படி நடப்பவன் எவனோ ,அவனே விண்ணரசில் சேருவான்"
"வெளிவேடக்காரர்களே! உங்களுக்கு ஐயோ கேடு"
மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.22.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? என்பார்கள்.23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்
மத்தேயு 23:27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள்., அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.28. அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
Matthew:7:21 "Not everyone who says to me, 'Lord, Lord,' will enter the kingdom of heaven, but only he who does the will of my Father who is in heaven. 22Many will say to me on that day, 'Lord, Lord, did we not prophesy in your name, and in your name drive out demons and perform many miracles?' 23Then I will tell them plainly, 'I never knew you. Away from me, you evildoers!'
Matthew:23:27 "Woe to you, teachers of the law and Pharisees, you hypocrites! You are like whitewashed tombs, which look beautiful on the outside but on the inside are full of dead men's bones and everything unclean. 28In the same way, on the outside you appear to people as righteous but on the inside you are full of hypocrisy and wickedness.
கிறிஸ்தவத்தில் சீர்கேடு.
ravi srinivas கேட்டிருந்தார் Does bible mention anything about the stupid and crazy christian fundamentalists....என்று.அவருக்குஎன் பதில் ஆமாம் என்பதே.
கடைசி காலங்களில் அனேகர் கிறிஸ்துவின் அடிப்படைபோதனைகளை மறந்துவிட்டு பைபிளை புரட்டி திரித்து புதிய நவீன கிறிஸ்தவத்தை பேசுவார்கள்.ஏசுவின் போதனைகளான ஆவியில் எளிமை, சாந்தகுணம், நீதியின்மேல் பசிதாகம், இரக்கம் காண்பித்தல், இருதயத்தில் சுத்தம்,சமாதானம் பண்ணுதல், நீதியினிமித்தம் துன்பப்படுதல், நற்செயல்கள் செய்தல்,உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுதல்,தீமையோடு எதிர்த்து நிற்காதிருத்தல்,கேட்கிறவனுக்குக் கொடுத்தல்,சத்துருக்களைச் சிநேகித்தல்;சபிக்கிறவர்களை ஆசீர்வதித்தல்; பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்தல்;நிந்திக்கிறவர்களுக்காகவும் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுதல் ஆகியவற்றை மறந்து விட்டு Sunday ஆனால் Church செல்லுதல்,வெள்ளை ஆடை உடுத்தல்,நகை ஆபரணங்கள் போடாதிருத்தல்,ஒரு கன்னத்தில் அறைந்தால் அதே அறையை அவனுக்கு மறு கன்னத்தில் திருப்பி காட்டுதல்,அனாதை ஆசிரமம் கட்டிசம்பாதித்தல்,பணக்காரர்களுக்கு தனி மரியாதைஏழைகளுக்கு தனி மரியாதை தருதல்,துப்பாக்கி மற்றும் பட்டயம் தூக்குதல் என்றாகிவிட்டது.இவர்களை பற்றியும் பைபிள் முன்பே கூறியிருக்கிறது.
கடவுளுக்கு தொண்டுசெய்கிறேன்என நினைத்துக்கொண்டு படுபயங்கர காரியங்களை செய்பவர்கள் பற்றியோவான் :16:2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.
பெரிய கூட்டங்களை கூட்டி நானே கிறிஸ்துஎன கூறிக்கொண்டு பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்பவர்கள் பற்றிமத்தேயு :24:5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்.24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.
பெரிய கூட்டங்களை கூட்டி நானே கிறிஸ்துஎன கூறிக்கொண்டு ,இது கடைசி காலம்என்பவர்களை பற்றி
லூக்கா 21:8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
பெரிய கிறிஸ்தவ ஆலயங்களை வியாபாரம் பண்ணுவது போல் நடத்துபவர்கள் பற்றிமத்தேயு 21:13 என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
பைபிளை திரித்து கூறும் கள்ள பாதிரிமார்கள் பற்றி
II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.
John:16:2 They will put you out of the synagogue; in fact, a time is coming when anyone who kills you will think he is offering a service to God.
Matthew 24:5 For many will come in my name, claiming, 'I am the Christ,' and will deceive many.
Matthew 7:15 Watch out for false prophets. They come to you in sheep's clothing, but inwardly they are ferocious wolves.
Luke 21:8 He replied: Watch out that you are not deceived. For many will come in my name, claiming, 'I am he,' and 'The time is near.' Do not follow them.
Matthew 21:13 It is written, he said to them, 'My house will be called a house of prayer,' but you are making it a 'den of robbers'.
Peter 2:1 But there were also false prophets among the people, just as there will be false teachers among you. They will secretly introduce destructive heresies, even denying the sovereign Lord who bought them— bringing swift destruction on themselves.
Wednesday, February 15, 2006
பெருகிப்போன அறிவு
Knowledge is power என்று சொல்லிக்கொண்டு இன்று உலகில் அறிவு பெருகிப்போய் இருக்கிறது.உலகை புரட்டிப்போட்டுகொண்டிருக்கும் Information technology-யும் அறிவு சார்ந்த துறையே.இன்று பெரும்பாலானரின் உழைப்பு என்பது அந்த காலம் போல் உடலுழைப்பு அல்ல. மூளைக்கு வேலையே.18 முதல் 22 மாதத்துக்கு ஒரு முறை மனித அறிவு இரட்டிப்பாகிறது என்கிறார்கள்.கணிணி,தொலைத்தொடர்பு,மருத்துவம்,போக்குவரத்து,தனி மனித வசதி மற்றும் வீடுகளில் என தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது.காலையில் பேங்களூர் அலுவலகத்தில் கையொப்பமிட்டுவிட்டு....மதியம் மும்பை பறந்து முக்கிய மீட்டிங்கில் கலந்து கொண்டு.... மாலை மீண்டும் பெங்களூர் வந்து ,வாரயிறுதி என்பதால் குடும்பத்தோடு இருக்க மீண்டும் இரவு சென்னை ரெயிலேறி இப்படி அங்கும் இங்கும் ஓட பத்து வருடத்துக்கு முன்பு வரை சாத்தியமில்லை.இன்றுஎல்லோரும் இங்குமங்கும் ஓடுகிறார் கார்,பைக்,விமானம்,ரெயில்என்று.அறிவும் பெருகிப்போய்விட்டது. பைபிள் இந்த நிலை வரும் என்று முன்பே எடுத்துரைத்திருக்கிறது.
தானியேல் 12:4.தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
Increase In Knowledge, Travel, Planes, & Cars
New technology is rapidly being developed and regularly leaves us standing in awe. The benefits are numerous, the possibilities exciting, and the hope for the future of technology is high.
The Bible says that there will be a great increase in knowledge during the last days.
Daniel 12:4 says:
But thou, O Daniel, shut up the words, and seal the book, even to the time of the end: many shall run to and fro, and knowledge shall be increased.
This is certainly true for the day and age we are living. It's incredible when you consider the total accumulation of all the earths' knowledge now doubles every 18-22 months. The knowledge of the world is increasing dramatically and this is exactly what the Bible says will happen in the last days. The Bible even mentions travel, planes, and cars as end time signs. Wow!
Tuesday, February 14, 2006
இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
இந்த தேசம் இந்நாட்களில் உலகத்துக்கு ஒரு தேவையில்லாத சுமை,பாரமான கல்.எல்லா நாட்களும் தொலைகாட்சி,வானொலி மற்றும் பத்திரிகைகளில் இதன் பெயர்.ஒரு சின்ன தேசம்,நியூஜெர்சி அளவே....சொல்லிகொள்ளும் படியான இயற்கை வளம் கிடையாது.பின் ஏன் எல்லோரும் இதை எதிரியாய் பார்க்கிறார்கள்.அது இன்னும் ஆச்சர்யம்.இங்கிலாந்திடமிருந்து விடுதலையாகி 1948 -ல் தனி நாடானார்கள்.அடுத்த நாள் முதலே போரும் சண்டையும்.அனைத்து அராபியர்களின் பயங்கர எதிரி.அமெரிக்காவுக்கு பாரமான தோழன்,இந்தியா ஹாய் சொல்வதோடு சரி,ரஷ்யா மற்றும் பிற நாடுகளுடன் சொல்லி கொள்ளும் படியான உறவு இல்லை.நீங்கள் இஸ்ரேல் போனதான ஸ்டாம்பிங் உங்கள் பாஸ்போட்டில் இருந்தால் எந்த அரபு நாடுக்குள்ளும் நீங்கள் நுழைய முடியாது.அரபு நாடுகள் இதை இன்னும் ஒரு நாடாகவே அங்கீகரிக்கவில்லை.தினம் குண்டு வெடிப்புகள்.நியூயார்க் செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு காரணமே அமேரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதுதான் என்கிறார்கள்.அதை தொடர்ந்து இனி மேலும் இஸ்ரேலை அமெரிக்கா ஆதரிக்க கூடாது என அமெரிக்காவில் பேசப்பட்டது.இப்போது எல்லா நாடுகளும் இஸ்ரேல் விவகாரத்தில் அடக்கிவாசிக்கவே விரும்புகின்றன.இப்படியாய்எல்லோருக்கும் இஸ்ரேல் ஒரு பாரமானகல்.இதை பைபிள் 2000 ஆணடுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறது. இனி உலகில் நடக்கப்போகும் அநேக நிகழ்வுகழுக்கு இந்த நாடு முக்கிய காரணமாக அமையும்.நம்பினால் நம்புங்கள்.
சகரியா:12:3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்
Israel-burdensome stone :
From a secular standpoint it would probably be a mystery why Israel is always in the news. It is a tiny nation that is about the same size as the State of New Jersey and it has no major natural resources.
Israel is important, however, because God made promises to Israel that will be fulfilled. One of the Bible's greatest predictions about Israel has already come to pass. In 1948, Israel was reborn as a nation. The rebirth of the Jewish state should have put aside any doubts that God had abandoned the apple of His eye.
"And in that day will I make Jerusalem a burdensome stone for all people: all that burden themselves with it shall be cut in pieces, though all the people of the earth be gathered together against it" (Zech. 12:3).
Monday, February 13, 2006
இஸ்ரேல் தேசத்தின் உதயம்
நூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் என்று ஒரு தேசமே இல்லை.யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டிருந்தனர்.யாருக்கும் அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு தேசத்தை கட்டுவார்கள் என்ற நம்பிக்கையிருந்ததில்லை.ஆனால் இன்று அது ஒரு ஆசீர்வதிக்கப் பட்ட தேசமாயிருக்கிறது.
இவ்வாறு இந்த தேசம் மீண்டும் உருவாகும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிளில் சொல்லியிருக்கிறது.
ஏசாயா 11:12--இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
எரேமியா 32:37. இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன்
எரேமியா 16:15இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு:24:
32. அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.( இங்கு அத்திமரம் என்பது இஸ்ரவேல் தேசத்தை குறிக்கிறது.)
33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்
So இதுவும் கடைசிகாலங்களுக்கான அடையாளம்.
பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
கிபி 70 -ல் யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்பட்டு போனார்கள்.அப்புறமாய் 2000 ஆண்டுகள் தாய்நாடென்று ஒன்றின்றி சிதறி கிடந்தார்கள்.இந்தியாவில் கேரளாவில் கூட காணகிடந்தார்கள்.ஆனால் எங்குபோயினும் அநேக உபத்திரவங்கள் மத்தியிலும் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்து வந்திருக்கின்றனர்.அவர்களுக்கு 1940 முதல் 1944 வரை மிக மோசமான காலம்.6 மில்லியன் யூதர்கள் ஹிட்லரால் கூண்டோடு கொல்லப்பட்டனர்.யூதர்கள் தங்களை யூதர்கள் என சொல்ல பயந்த காலம் அது."கடைசி தீர்வு"என ஹிட்லர் யூதர்களை கொன்றுகுவித்தான்.அந்நேரம் யாராவது 1967 ல் இஸ்ரேல் என ஒரு நாடு யூதர்களால் உருவாகி அது ஒரு மிகச் சிறந்த போர்படையுடன் விளங்கும் என யாராவது கூறியிருந்தால் அது மிகப்பெரிய காமெடியாகவே இருந்திருக்கும்.
எசேக்கியேல் 37:12 ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
பைபிளில் சொன்னது அப்படியே நடந்தது.பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன் என்ற கடவுள் வார்த்தைபடி இன்று அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்கு வந்துள்ளனர்.
இது கடவுளின் திட்டமே.
Rebirth of Israel
There is no greater prophetic fulfillment. The nation of Israel was driven from her land in 70 AD. For almost 2,000 years, the Jewish people existed without a homeland; yet, while being sifted through the nations, they retained their identity. The low point came between 1940 and 1944. Hitler was determined to implement his "final solution." When Allied soldiers entered the Nazi concentration camps, they were horrified by what they discovered. Six million Jews had been gassed, shot, tortured and cremated. In 1944, if you would have told the soldiers that opened these camps that the Jewish people would have their own nation and would become the premier military power in the Middle East by 1967, they would have thought you were crazy. But that is exactly what happened. The most amazing thing about all of this is that it was prophesied over 2,500 years ago.
The prophecy of Ezekiel 37 is called Ezekiel's bone yard. Verse 12 states: "Thus saith the Lord GOD; Behold, O my people, I will open your graves, and cause you to come up out of your graves, and bring you into the land of Israel."
Friday, February 10, 2006
நோவாவின் நாட்கள்
நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்.அப்படிஎன்றால் என்ன?.தங்கள் முன்னே தான் எழும்பிக்கொண்டிருந்தது நொவாவின் பேழை.உண்மையில் அவர்கள் தான் பேழையை கட்டிக்கொண்டிருந்தார்கள்.அது மட்டுமல்ல நோவாவே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான் பெருமழை வருகிறது என்று ஆனால் யாரும் நம்பத் தயாராய் இல்லை. பெருமழை வந்து அள்ளிக்கொண்டு போகிறவரையும் யாரும் நோவாவை நம்பவில்லை.இன்றைக்கும் அப்படிதான்.கண்முன்னே திருச்சபை எழும்பிக்கொண்டுள்ளது.எங்கு நோக்கினும் இயேசு வருகிறார் இயேசு வருகிறார் முழக்கம்.ஆனால் யாரும் நம்ப தயாராய் இல்லை.கடைசி நிமிடம் வரை இவர்கள் இப்படியே இருப்பர்.மின்னல் ஒளிக்கிறது,ஆங்காங்கே இடி இடிக்கிறது மழை வரும் அறிகுறியே. நோவா கால மக்கள் நோவாவை பார்த்து சிரித்தார்கள் மழை வருதாம் அள்ளிக்கொண்டு போகுதாம்.அதே தான் இன்றும்.ஆங்காங்கே அறிகுறிகள் தெரிந்தாலும் இயேசுவாவது வருவதாவது கிண்டலடித்துக் கொள்கிறார்கள் கலியுகத்தில் இதெல்லாம் சகஜமென்று.பேருந்தையே தள்ளிக்கொண்டு போகும் பெருமழையும் பேர் வெள்ளமும் வெளியே உள்ளே “காதலிக்க நேரமில்லை” பார்த்து கொட்டி கொட்டி சிரித்து கொண்டிருந்தார்களாம் Bro.Sam Jebadurai எப்போதோ ஒருமுறை சொன்னதாக நியாபகம்.கப்பல் மூழ்குவது கண்ணெதிரெ தெரிந்தும் தப்பிக்க முயலாமல் இசை வாசித்துக்கொண்டிருக்கும் பரிதாபத்துக்குரியவர்கள் இவர்கள்.எப்படியாயினும் கண்களை மூடிக்கொண்டிருக்காமல் (இருட்டாகத்தான் இருக்கும்) தலைகளை உயர்த்திப் பாருங்கள்.தெளிவாக அறிகுறிகள் தெரியும் கார்காலத் துவக்கம். நோவக்கால மனிதர் போல் பேழையை உருவாக்குபவர்களாக நாம் இராமல் பேழையில் நுழைபவர்களாக நாம் இருப்போம்.
ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
அந்த இரும்பும்-களிமண்னுமான வளவளா பேரரசு ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படும்.எப்படி?யேசுபிரான் இந்த பூமியை ஆளுவார்.
“அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையில்பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்னையும் வெண்கலத்தையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”
அந்த கல் யேசுவே…நம்பமுடியலை தானே….என்னாலும்தான்…ஆனால் அது உண்மை.
பைபிள் சொல்லுகிறது“இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்று.”
ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
வரலாற்றை திருப்பி பார்த்தால் நாலாவது பேரரசான ரோம பேரரசானது துண்டாடப்பட்டு இப்போது நாம் காணும் ஐரோப்பிய நாடுகளாக பிரிந்து போய்விட்டன.(கால் விரல்களை போல).அவர்கள் மீண்டும் ஒன்றிணய முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார்கள்.லூயி,நெப்போலியன்,ஹிட்லர் காலத்திலிருந்தே.இப்போது ஐரொப்பிய யூனியனாகி நிற்கிறது.அவர்கள் மட்டுமல்ல அராபு நாடுகளும் சரி,ஆசிய நாடுகளும் சரி ஒன்றிணய முயற்சி மேற்க்கொண்டிருக்கிறார்கள்.என்னத்தான் ஒன்றிணய முயற்சி மேற்க்கொண்டாலும் இரும்பும் களிமண்ணும் ஒட்டவே ஒட்டாது போல சேர்ந்தும் பிரிந்திருப்பார்கள்.கடைசியில் இது உலகளாவிய அரசு,ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன் என்கிற ரீதியில் போய் கொண்டிருக்கும்.யார் இந்த உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன் ?பார்க்கலாம்.
தானியேல்-2:41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும்.
43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
பலிக்கும் கனவு-ஆச்சரியம்
தானியேல் கண்ட பெரிய சிலை கனவுசிலர் கனவு பலிக்கும் என்பார்கள்.இங்கே தானியேல் என்ற மனிதன் கண்ட கனவு எப்படி பலிக்கிறது என பாருங்கள்.அவர் கனவில் ஒரு பெரிய சிலையை காண்கிறார்.அது
1.தலை பசும்பொன்னும்
2.அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும்
3.அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும்,
4.கால்கள் இரும்பும்,
5.அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது
6.கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி அவைகளை நொறுக்கிப்போட்டது.
இங்கே கண்ட ஆறு உடல் பாகங்களும்…. ஆறு உலக பேரரசுகளை குறிக்கிறது.
தலை பசும்பொன்-பாபிலொனிய பேரரசு -கிமு606 முதல் கிமு539 வரை–நேபுகாத் நேச்சார் காலம்-உலக அதிசயம் தொங்கும் தோட்டம் புகழ்
மார்பும் அதின் புயங்களும் வெள்ளி -மேதிய பெர்ஸிய பேரரசு -கிமு539முதல் கிமு331 வரை-சைரஸ் மன்னர்--மாரத்தான் புகழ்
வயிறும் அதின் தொடையும் வெண்கலம்-கிரேக்க பேரரசு-கிமு331முதல் கிமு168 வரை-அலெக்ஸான்டர் காலம்-கிளியோபட்ரா புகழ்
கால்கள் இரும்பு-ரோம பேரரசு-கிமு168முதல் கிபி476 வரை-யேசு பிறநத காலம்-ஜூலியஸ் சீசர் புகழ்
பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணும்-?????????
கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் -?????????????????
கடைசி இரண்டு பேரரசுகள்-என்னவாச்சு? பார்க்கலாம்
Head of gold Babylonian Empire 606BC to 539BC
Chest and arms of silver Medo-Persian Empire 539BC to 331BC
Belly and thighs of bronze Greek Empire 331BC to 168BC
Legs of iron Roman Empire 168BC to 476AD
The feet mixed of iron and clay ???????????????
The stone breaking the statue, then becoming a mountain??????????
For further reference http://www.remnantofgod.org/daniel2.htm
கடவுள் இந்தியாவை நேசிக்கிறார்
யேசுவின் சீடராகிய தோமா ஒரு சந்தேகப் பேர்வழி.
யேசு கொல்லப்பட்ட பின்பு உயிரோடு எழும்பியதை அவர் நம்பவில்லை.அவர் யேசுவின் கையிலும்,இடுப்பிலும் உள்ள காயங்களை கண்டபின்பே யேசு உயிரோடு எழும்பியதை நம்பினார்.அப்பேர்பட்டவர் இந்தியா வந்தது,அவர் கல்லறை சென்னையில் இன்றும் நினைவாக இருப்பது யேசு உயிரோடு எழும்பியதற்கு அசைக்கமுடியாத அத்தாட்சி.முதல் நூற்றாண்டிலேயே இவர் இந்தியா வந்ததால்…பிரிட்டனுக்கும்,ஜெர்மனிக்கும் கிறிஸ்தவம் வரும் முன்னே அது இந்தியா வந்தது என்பது மிகவும் உண்மை.கடவுள் இந்தியாவை நேசிக்கிறார்.
In English-
God Loves IndiaOne of a disciple of Jesus, Thomas was a doubting person. After the crucification of Jesus, John never believed his resurrection. Thomas believed Jesus resurrection only after seeing his scar on his hand and hip. That sort of person, he came to India to teach Christianity and his cemetery is still in Chennai, which is strong evidence that Jesus is alive. Since he came to India in the first century itself that mean Christianity came to India even before it reaches Britton or Germany. That’s very true and God loves India.
தோமா-இந்தியாவுக்காக
இந்தியாவை பொருத்தவரை கிறிஸ்தவ மதம் என்பது வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்தது என கருதப்படுகிறது .ஆனால் அது உண்மையில்லை.பாரதத்தின் முதல் கிறிஸ்தவர் தோமாவாகத்தான் இருக்க முடியும்.யேசுபிரானின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரான இவர் கிபி 70 களில் இந்தியா வந்து கிறிஸ்தவத்தையும் யேசுவின் அன்பையும் போதித்து திரிந்தார்.யேசுவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் இந்தியா வந்தது அதுவும் தமிழ்நாடு வந்தது நமக்கெல்லாம் பெருமை.சென்னையில் அந்த முதல் கிறிஸ்தவர்,யேசுவின் சீடர் தோமா ஈட்டியால் குத்தி கொல்லப்பட்டார்.அவர் நினைவாக இன்றும் பரங்கிமலையில் புனித தோமா ஆலயமும் அவர் கல்லறையும் உள்ளது.இந்தியாவுக்காக அதுவும் தமிழ் நாட்டுக்காக கடவுள் தன் சீடரையே அனுப்பிவைத்தது கடவுளுக்கு நம் மேல் உள்ள கரிசனையை காட்டுகிறது அல்லவா?.
In English:
Thomas for IndiaAccording to India, Christianity is a religion which came to India through English people. But that’s not the fact. Thomas is the first Christian of India. He is one of the disciple of Jesus, he cam to India in AD 70`s and was preaching Christianity and Gods love to all the people. Its pride for us God send one of his disciples to India, that too specially to Tamil Nadu. That first Christian, disciple of Jesus was speared to death in Chennai (Madras).In his memorial even you can find today a church over there in St.Thomas mount also his cemetery in Chennai. God send his disciple to India that too to Tamil Nadu that shows his concern on us. Isn’t it?
மறுக்க முடியாத நிஜங்கள்
கிறிஷ்தேசுவின் நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.
இந்த Blog-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.காலங்களில் மிகப் பெரிய மாற்றங்கள்.நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது.சுற்றிலும் நடக்கும் காரியங்களை யாரும் கவனிப்பதே இல்லை.அவரவர் வேலையே அவரவருக்கு முடிக்க சரியாய் இருக்கிறது.இயந்திர உலகில் எல்லாம் சுலபமாயும் ஆச்சர்யமாயும் தெரிந்தாலும் தனிமனித வாழ்க்கை ஏனொ விரக்தியில் தான் உள்ளது.சுகபோகங்களின் மத்தியிலும் உள்மனது உண்மையை தேடுகிறது.இதெல்லாம் யாரும் மறுக்க முடியாத நிஜங்கள்.தேவன்சொன்னது தான் நினைவுக்கு வருகிறது.வானமும் பூமியும் மறைந்துபோம் அவர் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.A/C அறையில் நிம்மதியாய் நீ இருந்தாலும்,செவ்வாய் போய் செட்டில் ஆக நீ பார்த்தாலும் நீயும் நானும் மனிதன் தான் . அவர் தேவன் தான். அவர் சொன்னது நடக்கதான் செய்யும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தொடர்ந்து இதை தான் அலசப்போகிறோம்
அரசியலும் கிறிஸ்தவமும்
ரொம்ப பேருக்கு அரசியலும் மதமும் சம்பந்தமே இல்லாத விஷயங்கள்.
அரசியல் ஒரு சாக்கடை.மதம் புனிதமானது.பெரும்பாலானோர் அரசியல் வாழ்வு ஓட்டு போடுதலோடு முடிந்து விடுகிறது.மதம்,வெள்ளியோ ஞாயிறோ கோயில் சென்று மனதுருக பிரார்த்திப்பதில் ,இஷ்டமானதை வேண்டுவதில் இருக்கிறது.அனைவருக்கும் கட்வுள் முக்கியமானவர்.மிகவும் தேவையானவர்.ஆனால் யாருமே அரசியலுக்கும் மதத்துக்கும் இருக்கும் தொடர்பை ஒத்துக்கொள்ளமாட்டர்கள்.இஸ்ரவேல் பிரச்சனைக்கும் இயேசுவுக்கும் சம்பந்தம் உண்டென்றால் யார் ஒத்துகொள்வார்.அல்லாவுக்கும் அரேபியா பெட்ரொலுக்கும் தொடர்புண்டென்றாலோ,ஜார்ஜ் புஷ்க்கும் பைபிள்ளுக்கும்,இரான் பூகம்பத்துக்கும் பிசாசுக்கும் என முடிச்சுபோட்டால் நீங்கள் ஒத்துக்க மாட்டீர்கள்.தொடர்ந்து படியுங்கள்.இறைவன் ஆதியில் உலகை படைத்து மனிதனிடம் இதை ஆண்டுகொள் என்று பொறுப்பை ஒப்படைத்தார்.அன்று தொடங்கியது அரசியல்.மனிதன் தான் மண்ணின் ராஜா என வைத்திருந்தார் கடவுள்.அன்றிலிருந்து இந்த பூமியை எத்தனையோ ராஜாக்கள் ஆண்டு வந்திருக்கிறார்கள்.அதைத்தான் புனித நூல்களான பைபிள்,குரான் போன்றவற்றில் படிக்கிறோம்.கடவுள் ராஜாக்களை ஏற்ப்படுத்துகிறவர்.ராஜாக்களை சிம்பாசனத்திலிருந்து தள்ளுகிறவர்.தானியேல் புஸ்தகம் கூறுகிறது உலகின் மிக முக்கியமான அரசாங்கங்களைப்பற்றி அதாவது ராஜியங்களைப் பற்றி.தானியேல் கனவில் வரும் சிலை பற்றிய விளக்கத்தில்இரும்புத்தனமான பாபிலொனியராஜியம், அலெக்ஸாண்டரின் உலகளாவிய கிரேக்க ராஜ்யம்,ரோம ராஜியம்,இப்போது உருவாகிக்கொண்டிருக்கும் இரும்பும் களிமண்ணும் போல ஒட்டாதிருக்கும் யூரோ ராஜியம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.
இப்படியாக கடவுளே உருவாக்கிய ராஜியம்கள் அநேகம்.அதனை அதால பாதாளத்திற்க்கு தள்ளிவிட்டவரும் அவரே.இறுதிகாலத்தில் இப்பொ மனிதன் தன் ஆளுமை தன்மையை இழந்து போனான்.தான் லாயக்கு இல்லை என்றாகிவிட்டது.எனவே தான் இப்போ மன்னராட்சி எல்லாம் பொய்விட்டது.ஒருவர் மட்டும் தான் ராஜாவாகமுடியும்.மனிதன் மண்ணின் மன்னராக முடியாது.அதை உலக வரலாற்றில் தெளிவாக பார்த்தாயிற்று.இப்பொதைக்கு எங்கும் ஜனநாயகமே.ஆனால் தானியேல் கனவுபடி கடைசி ராஜியம் ஒன்று வருகின்றது.அதாவது ஐரொப்பிய ராஜியம் அந்திகிறிஸ்து தலைவனாக. எங்கிருந்தோ வந்த ஒருகல் அந்த ராஜியத்தை அடித்து நொறுக்கி மண் மேடாக்கி போடும்.
அந்த கல் இயேசுவே.அவர் ராஜாவாக சீக்கிரமாய் வருகிறார்.மன்னனாகவரும் அவர் ஆயிரம் ஆண்டுகள் இதே பூமியை ஆட்சி செய்வார்.தேவன் அரசாளுவார்.
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்