Monday, September 12, 2011

செப்.11 கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடாது

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2).என்ன அருமையான வேதவசனம். Our God is in control என்பதை நிரூபிக்கும் வகையில் தினம் தினம் ஆயிரம் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.நாம் விசுவாசத்தில் உறுதிபெற இங்கே அவற்றை அடிக்கடி கூற நாம் விழைகின்றோம். நேற்றைய தினம் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட தினத்தின் 10 ஆவது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் நாடு முழுவதுமிருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் Ground Zero எனப்படும் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு வந்து தாங்கள் இழந்த தங்களுக்கு பிரியமானவர்களை நினைகூர்ந்தார்கள்.ஆகிலும் இங்கு எந்த விதமான ஆன்மீக சம்பந்தமான காரியங்களும் பிரயர்களும் நடக்கக்கூடாது என்பதில் மேயர் புளூம்பெர்க் என்பவர் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.எத்தனையோ வேண்டுகோள்களும் விண்ணப்பங்களும் பொதுமக்கள் விடுத்தும் கூட ”கூடவே கூடாது”வென சகலருக்கும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதனால் அங்கு நடைபெற்ற விசேச நிகழ்ச்சியில் பங்குபெற எந்த ஒரு கிறிஸ்தவ ஊழியருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. மக்களின் ஆறுதலுக்காக நாலுவார்த்தை பேசவோ ஜெபிக்கவோ யாருமே அங்கு இல்லை.ஆனால் கர்த்தரோ இன்னொரு வகையில் தன் நாமத்தை அங்கே பிரஸ்தாபப்படுத்தினார்.அதை நியூயார்க் நகர மேயரோ அல்லது நியூயார்க் மாகாண கவர்னரோ தடைசெய்ய இயலவில்லை. ஏனென்றால் அதை செய்தது சாட்சாத் அமெரிக்க அதிபரே ஆவார்.யார் தடை செய்யக் கூடும்.

அமெரிக்க அதிபர் ஒபாமா மேடையேறி வழக்கமான தனது உரையை நிகழ்த்தாமல் வேதாகமத்தில் சங்கீதம் 46-ஐ எடுத்து வாசிக்கத்தொடங்கினார். ”தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம்.” இவ்வாறாக வாசிக்க தொடங்கி முழு சங்கீதத்தையும் வாசித்து முடித்தார். ”யாக்கோபின் தேவன்” அங்கு அமெரிக்க அதிபராலேயே மகிமைப்படுத்தப்பட்டார். ஜனங்கள் இவ்வசனங்களை கேட்டு ஆறுதலும் தேறுதலும் அடைந்தார்கள்.கர்த்தருக்கே மகிமை. “Amazing Grace” பாடல் மூன்று இடங்களிலுமே பாடப்பட்டது.முன்னாள் நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானி பிரசங்கியின் புத்தகம் மூன்றாம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களை வாசித்து பின் “நாம் இழந்த ஒவ்வொரு ஆத்துமாக்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அவர்களை நாம் பரலோகத்தில் மீண்டும் சந்திக்க உதவுவாராக.நம் தேசத்தை கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக." என உரையாற்றினார். கர்த்தருக்கு விரோதமாக பேசிய எழும்பிய சக்திகள் அங்கே முடக்கப்பட்டது. கர்த்தரே வெற்றி சிறந்தார். அவர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடைபடாது அன்றோ?

மேலே நாம் சொன்ன நியூயார்க் நகர மேயர் புளூம்பர்க் ஒரு யூதராவார்.அவரும் மேடையில் பேசினார்.அவர் பேச மேற்கோள் தேடியது பைபிளில் அல்ல. சேக்ஸ்பியரில்.அந்தோ பரிதாபம்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment