Friday, September 30, 2011

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டும்


ஆர அமர இருந்து இந்த அழகான அகாபே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நோட்டீசை உருவாக்கியவர்கள் மேலே ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”மோ அல்லது ”Praise the Lord”டோ அல்லது ஒரு வேத வசனமோ போட்டிருக்கலாம். தோதான வேத வசனம் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எட்டு பாஸ்டர்மார்களும் ஒரே மனதாக இந்த விசயத்திலாவது ஒன்று கூடுவது நல்ல விசயம். நல்ல நோக்கத்துக்காக நாலும் செய்யலாம் என்பார்கள். சிறார்களையும், இளைஞர்களையும் எளிதில் சென்றடைய இது ஒரு நல்ல வழி. ஆனாலும் அந்நோக்கம் இந்த கைப்பிரதியில் கூட தெரியவில்லை என்பது தான் சோகம். இளம் தலைமுறையினருக்கு அதுதான் பிடிக்கிறது வென இக்காலத்தில் பலதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ராப் இசையும் பாப் இசையும் கிறிஸ்தவத்தில் வலிய புகுத்துவது எந்த அளவுக்கு நல்லதோ தெரியவில்லை. ஏதோ கத்தி பாடுகிறார்கள் ஆடுகிறார்கள் ஆனால் வார்த்தைகள் ஒன்றும் கேட்பதுமில்லை புரிவதும் இல்லை.சில இசைகள் பிசாசுக்கே உரியது நாம் அதில் தெய்வீகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விளையாட்டு நல்லது. சரீரத்துக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொள்வதை கற்றுக்கொள்வார்கள். அப்படியே இப்படி கிரிக்கட் ஆடியாவது திருச்சபைகள் இடையே சகோதரத்துவம் வளர்ந்தால் ரொம்ப நல்லது.
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.(I கொரிந்தியர் 10:31)
எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.(I கொரிந்தியர் 9:22 )
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.(லூக்கா 11:42)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment