Thursday, October 06, 2011

இப்படியும் ஊழியம் செய்யலாம்

டெக்சாஸ் மாகாணத்தில் கிவிக் கார் எனும் ஆட்டோமொபைல் ஒர்க் ஸாப் வைத்திருப்பவர் சார்லி விட்டிங்டன். இவர் வொர்க் சாப்பில் யோவான்:3:16-ரை வாசித்து காண்பித்தால் போதும் ஆயில் சேஞ்ச் செய்யும் போது வழக்கமான விலையிலிருந்து 15 டாலர்கள் வரை தள்ளுபடி தருவதாக அறிவித்து கூப்பன்கள் வெளியிட்டு உள்ளார். வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சுது, நற்செய்தியை மக்களுக்கு சொன்னதும் ஆச்சுது என்பது அவர் எண்ணம்.வழக்கம் போல சில எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் விடுவதாக இல்லை “என் விசுவாசத்தில் நான் உறுதியாய் நிற்கிறேன் அவ்வளவுதான்” என்கிறார் சார்லி. எதாவது சட்டத்தை காட்டி பயமுறுத்தி அதற்கு தடைபோடலாமென முயற்சித்தார்கள். அதற்கான வழி ஒன்றும் இல்லை என அட்டர்னி ஒருவர் தெரிவித்து விட்டார். அந்த அட்டர்னி வேடிக்கையாக கூறும்போது “பைபிளை படித்தால் பல வெகுமானங்கள் கிடைக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஆயில் சேஞ்சின் போது டிஸ்கவுண்டும் கிடைக்கும் என்பதை கடவுள் அர்த்தப் படுத்தவில்லை என நம்புகிறேன்” எனக் கூறினார்.

யோவான்:3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

http://religion.blogs.cnn.com/2011/10/01/quote-john-316-for-an-oil-change/

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment