Showing posts with label USA. Show all posts
Showing posts with label USA. Show all posts

Thursday, April 26, 2018

அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை

80 சதவீத அமெரிக்கர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எனவும், ஆனால் அதில் 53 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே  பைபிள் குறிப்பிடும் தெய்வத்தை நம்புகிறார்கள் எனவும் ஒரு சர்வே தெரிவிக்கிறது. எது என்னவானாலும் நமது வேதாகமம் சொல்லுகிறது "கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது." என்று. உண்மை தானே? (சங்கீதம் 144:15).

Saturday, November 15, 2014

தேவனாலே எல்லாம் கூடும்

மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும்.மத்:19:26

Thursday, May 15, 2014

உலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்


உலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழகிய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய‌ 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945‍ ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய‌ ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் "JESUS DIED FOR OUR SINS." என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷ‌ங்கள் அங்கு இருக்கின்றன‌. ஆமாங்க‌ அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது? எதற்காக போவது? உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)
http://fieldsofthewoodbiblepark.com/

Thursday, February 20, 2014

ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை

வரப்போகிற உலகளாவிய சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்து சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் என பூமியில் எல்லோரையும் ஆட்டிப்படைப்பான் என்கிறது வேதாகமம் (வெளி:13.16). வசதியுள்ளோர்க்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் இன்டர்நெட் சீக்கிரத்தில் உலகமுழுவதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகளில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அதை அவுட்டெர்நெட் என்கிறார்கள். இப்படியாக ஒருநாள் உலக மக்கள் அனைவர் கையிலும் இன்டர்நெட் உலகம் இலவசமாக‌ வந்துவிடும். அப்படியே உலகத்தின் மீது அதிகாரம் செய்யவும் அந்திகிறிஸ்துவுக்கு எளிதாய் போய்விடும். அதன் வழி ஜனங்களை அவன் அதிகாரம் பண்ணலாம் ஆட்டிப்படைக்கலாம். அப்புறம் வேதம் சொல்லுவது போல கொள்ளவும் விற்கவும் அவனறியாமல் முடியாது ஆகிவிடும். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை என்று (மத்தேயு 24:22). அன்பு சகோதர சகோதரிகளே அதற்கு முன்பாகவே இப்பூவியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதுதான் புத்திசாலித்தனம். மணவாட்டியாய் கிறிஸ்துவோடு கூட எடுத்துக்கொள்ளப்பட நீங்கள் தயாரா? இல்லை அந்திகிறிஸ்துவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறீர்களா? இயேசு கிறிஸ்து சொன்ன புத்தியுள்ள கன்னிகைகள் போல‌ நாம் எல்லோரும் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.

Sunday, November 10, 2013

பில்லி கிரஹாம் இறுதி பிரசங்கம் The Cross - Billy Graham's Message To America


எப்படி அழாம‌ல் இருக்க முடியும் அவரால்? அமெரிக்க தேசத்தின் எழுப்புதலையும் பிற்பாடு இப்போதைய பின்னடைவையும் கண்டவரன்றோ அவர். சமீபத்தில் தனது 95 ஆவது வயதை கட‌ந்து ஆனால் இன்னமும் நம்பிக்கையாக அமெரிக்காவுக்காக பரிதபித்து அழுது கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் பில்லி கிரஹாம். ந‌மது கண்முன்னே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியின் மாபெரும் தேவ மனிதர். அவரின் பிறந்த நாளையொட்டி அவரது இருதய ஏக்கம் இங்கே அவரது "இறுதி பிரசங்கமாக" வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தேவாசீர்வாதம் பெறுங்கள். "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" என்ற சங்கீதம் 71:18 வசனப்படி தேவனும் அவரை கைவிடவில்லை. இறுதி அறிவிப்பும் அவர் கொடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் பாடு.
http://watchbillygraham.com/


Friday, September 20, 2013

சந்திரனில் வைக்கப்பட்ட முதல் புஸ்தகம்

On December 24, 1968, in what was the most watched television broadcast at the time, the crew of Apollo 8 read in turn from the Book of Genesis as they orbited the moon. Bill Anders, Jim Lovell, and Frank Borman recited verses 1 through 10, using the King James Version text. On February 5, 1971, the First Lunar Bible was carried to the surface of the moon on board the Apollo 14 lunar module Antares by Lunar Module Pilot Edgar D. Mitchell.The Apollo Prayer League was a group of NASA engineers, scientists, administrators and astronauts.The Apollo Prayer League created a microfilm Bible and 300 microfilm copies were carried to the lunar surface. The microfilm is about 1.5 inches square, and yet contains all 1,245 pages of the King James Bible. These pages so small that they must be read under a microscope. This Lunar Bible is the only complete copy of the Bible to have flown to the surface of the Moon. Praise God!!

Sunday, September 01, 2013

கடல் வழிகளை உலகுக்கு காட்டிய சங்கீத புத்தகம்

"நவீன கால‌ கடல் வழிகளின் தந்தை" என அழைக்க‌ப்படும் மேத்யூ மவுரிக்கே (Matthew Fontaine Maury (1806 – 1873)) அவர் சமுத்திரத்தின் வழிகளை கண்டுபிடிக்க‌ ஒரு உந்துகோலாக அமைந்தது வேதபுத்தகம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? வேதாகமத்தை மிகவும் நேசித்த ஒரு நபர் அவர். ஆரம்ப காலத்தில் அமெரிக்க கடற்படையில் பணிபுரிந்த போது அவர் ஒரு விபத்தில் அகப்பட்டு தன் இடது காலை இழந்துவிட படுக்கையியேலே வெகுகாலம் கழித்தார். மேத்யூ மவுரி அவ்வாறு படுக்கையில் இருந்த போது வேதபுத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்போது சங்கீத புத்தகம் 8‍‍ம் அதிகாரத்தில் "Paths of the Seas" என இருப்பதை அவர் படிக்க நேரிட்டது. ("The fowl of the air, and the fish of the sea, and whatsoever passeth through the paths of the seas" Psalms 8:8 ). அப்படியானால் சமுத்திரங்களிலும் வழிகள் இருக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அவர் முற்றிலும் குணமடைந்த‌ பின்பு கடல் வழிகளை பற்றி பல ஆய்வுகள் செய்து அதில் மிகப்பெரிய வல்லுனர் ஆனார். அதனால் அவரை "Pathfinder of the Seas" என்றும் "Father of Modern Oceanography and Naval Meteorology" என்றும் , "Scientist of the Seas" என்றும் அழைப்பர். The Physical Geography of the Sea (1855) எனும் புகழ்பெற்ற நூலை எழுதினார். இன்றைக்கும் விர்ஜீனியாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அவர் வடிவ‌ சிலையை ஒரு வேதாகமத்தின் கூட‌வே சேர்த்து வடிவமைத்துள்ளனர். அவ்வளவாய் அவர் வேதாகமத்தை நேசித்தார்.உலகத்துக்கும் ஆசீர்வாதமாய் அமைந்தார். தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது... ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளிலிருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். தானியேல் 2:20-22


Friday, May 24, 2013

காற்றின்வழி

என்ன‌வெல்லாமோ தொழில்நுட்ப‌ங்க‌ள் வ‌ந்திருக்கிற‌தென்று சொல்லுகிறார்க‌ள். ஆனால் இந்த‌ காற்று போகும் பாதையை முன்கூட்டியே க‌ண்ட‌றிந்து அங்கிருக்கும் ம‌க்க‌ளை வெளியேற்றுகிறார்க‌ளா பாருங்க‌ள்? இத‌ற்கிடையே "க‌ட‌வுள் துக‌ளை" க‌ண்டுபிடிக்க‌ப்போகிறார்க‌ளாம். வேதாக‌ம‌ம் என்ன‌ சொல்லுகிற‌து."காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது." (யோவான்:3:8)என்கிற‌து. மேலும் "காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது...இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்" (பிர‌ச‌ங்கி:11:5) என்கிறது வேத‌ம்.காற்றின் வ‌ழிக‌ளை க‌ண்டுபிடிக்க‌ முடியாது தான் போலிருக்கிற‌து.

Tuesday, April 30, 2013

சோதோம் கொமாரா ரிட்ட‌ன்ஸ்


"உங்க‌ளை நினைத்தால் எங்க‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌து ஜேச‌ன் காலின்ஸ்!. ந‌ம‌து நாட்டில் இதொரு மிக‌ப்பெரிய‌ முன்னேற்ற‌ம்" என‌ அமெரிக்க‌ முத‌ல் பெண்ம‌ணி மிச‌ல் ஒபாமா த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

என்ன‌மோ ஜேச‌ன் காலின்ஸ் மிக‌ப்பெரிய‌தொரு அரிய‌ சாத‌னையை ப‌டைத்துவிட்டார், வ‌றுமையை ஒழிக்க‌ வ‌ழி க‌ண்டு பிடித்து விட்டார். தீவிர‌வாதிக‌ளின் ச‌தியை ஒட்டு மொத்த‌மாக‌ முறிய‌டித்து விட்டார் என‌ நினைக்க‌ வேண்டாம். த‌ன்னை ஒரு கே (Gay) என‌ அவ‌ர் அறிவித்துவிட்டாராம்.அத‌ற்கு தான் இந்த‌ ஆர்பாட்ட‌ம்.வேதாக‌மமோ அதை "ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து" என்கிற‌து (ரோமர்:1:27)

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னின் ம‌க‌ள் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னோ ஒரு ப‌டி முன்னே போய் த‌ன‌து வாழ்த்துசெய்தியில் இவ்வாறாக‌ எழுதுகிறார்.

Clinton wrote. "It is also the straightforward statement of a good man who wants no more than what so many of us seek: to be able to be who we are; to do our work; to build families and to contribute to our communities."

என்ன‌து "to build families"சா
என்ன‌ப்பா ஆச்சு இவ‌ங்க‌ளுக்கு? ந‌ல்லாதானே இருந்தாங்க‌?
ஆணோடே ஆண்,பெண்ணோடே பெண் இருந்து அவலட்சணம் செய்து விட்டு குடும்ப‌த்தை எப்ப‌டி க‌ட்டுவ‌துப்பா? ந‌ல்லா இருக்குதே க‌தை? எப்ப‌டி இவ‌ர்க‌ளையெல்லாம் குருடாக்கியிருக்கிறான்யா அவ‌ன்? 
இவ‌ர்க‌ளுக்கெல்லாம் விண்ண‌ப்ப‌ம் ஏறெடுப்ப‌துவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

Thursday, March 28, 2013

ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா


ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா
வேதாக‌ம‌த்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிட‌ப்ப‌டுவ‌துண்டு.
இந்த‌ நாட்டின் பிர‌தான‌ ந‌க‌ர‌மாக‌ இருந்த‌து தான் பெட்ரா. இப்ப‌டி
ஒரு‌ நாடே கிடையாது.இது ஒரு க‌ற்ப‌னை பிர‌தேச‌ம்.
இதிலிருந்தே வேதாக‌ம‌ம் ஒரு பொய் என‌ தெரிகிற‌து என‌
ஒரு கூட்ட‌த்தார் ஒரு கால‌த்தில் வேத‌த்தை அவ‌தூறு செய்து
கொண்டிருந்தார்க‌ள். புதைந்து போய் கிட‌ந்த‌ இந்த‌ பெட்ரா
ந‌க‌ர‌த்தை 1812ல் சுவீட‌னை சேர்ந்த‌ ஒரு யாத்ரீக‌ர் Johann Burckhardt
என்ப‌வ‌ர் க‌ண்டுபிடித்தார்.அத‌ன் பிற‌கு அவ‌ர்க‌ள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயின‌ர்.வேதாக‌ம‌ம் சொல்வ‌தெல்லாம் உண்மை
என‌ மீண்டும் ஒரு முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த பெட்ரா நக‌ர‌ம்
முழுக்க‌ முழுக்க‌ பாறைக‌ளை குடைந்தே செதுக்கி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.
ப‌ல‌ ஆச்ச‌ரிய‌ அதிச‌ய‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. ஆனால் வேதாக‌ம‌ம்
முன்னுரைத்த‌ப‌டி இந்ந‌க‌ர‌ம் பாழாய்போன‌து.

எரேமியா:49:17 சொல்கிற‌து "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" ‌.ஆமாங்க‌ய்யா..ஒபாமா கூட‌ பார்த்து பிர‌மித்துப்போனார்.

Edom shall be a desolation: every one that goeth by it shall be astonished. Jeremiah 49:17

Thursday, March 21, 2013

ஜெபிக்க‌ சொல்லும் நாசா


பூமிக்கு மிக‌த்தொலைவிலுள்ள‌ கோள்க‌ளையெல்லாம் வ‌லிமை மிக்க‌ விண்நோக்கிக‌ள் மூல‌ம் க‌ண்டு ஆராயும் விஞ்ஞானிக‌ளுக்கு பூமிக்கு மிக‌ அருகில் பூமியை தாக்க‌க்கூடிய‌ தொலைவிலுள்ள‌ விண்க‌ல்க‌ளை க‌ண்டுபிடிப்ப‌து மிக‌ சிர‌ம‌மாக‌ இருக்கிற‌தாம். அப்ப‌டியே பூமியை தாக்க‌ வ‌ரும் விண்க‌ற்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டாலும் கூட‌ இப்போதைய‌ தொழில்நுட்ப‌த்துக்கு ந‌ம்மால் ஒன்றும் செய்ய‌ இய‌லாது.அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க‌ வேண்டும் என்கிறார்க‌ள். உதார‌ணமாக‌ இன்னும் மூன்று வார‌த்தில் ஒரு எரிக‌ல் நியூயார்க் ந‌க‌ரை தாக்க‌போகுது எனக்கொண்டால் ந‌ம்மால் க‌ட‌வுளிட‌ம் வேண்டிக்கொள்வ‌தை த‌விர‌ வேறெதுவும் செய்ய இய‌லாது என‌ அமெரிக்க‌ விண்வெளி ஆராய்ச்சி மைய‌ த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார். அவ‌ர் சொல்வ‌தும் ச‌ரிதான் எரிக‌ல்க‌ளை ந‌ம் இஷ்ட‌த்துக்கும் திருப்பிவிட‌ நாம் என்ன‌ க‌ட‌வுளா? க‌ர்த்த‌ர் யோபுவிட‌ம் கேட்கும் போது "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" என‌ கேட்கிறார் (யோபு:38:32).


நாம் ம‌ண் அல்ல‌வோ?(சங்:103:14).கர்த்தர் தான் ந‌ம்மை காக்க‌ வேண்டும்.க‌ர்த்த‌ர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.(சங்:127:2)

Monday, December 17, 2012

அழுகிறவர்களுடனே அழுங்கள்

துக்க‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு ஆறுத‌லும் தேறுத‌லும் அளிப்ப‌து தேவ‌ வ‌ச‌ன‌ங்க‌ளே என்றால் அது மிகையாகாது‌. அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தி ஒபாமா கூட‌ நேற்று க‌னேட்டிக‌ட்டில் த‌ங்க‌ள் சிறும‌ல‌ர்க‌ளை துப்பாக்கி சூட்டில் இழ‌ந்து‌ த‌விக்கும் குடும்ப‌ங்க‌ளின் ம‌த்தியில் பேசும் போது வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ளை மேற்கோள்காட்டி அவ‌ர்க‌ளுக்கு ஆறுத‌ல் கூறினார். அவ‌ர் கூறும் போது....
"நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்."....(11கொரி:4:16-18,11கொரி:5:1) ....

"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று இயேசு சொன்னார்."....(ம‌த்:19:14) ..."

தேவ‌ன் த‌ம‌து வீட்டுக்கு அவர்க‌ளையெல்லாம் அழைத்துக்கொண்டார்.மீந்திருக்கும் நாமும் ந‌ம்மை பெல‌ப்ப‌டுத்திக்கொண்டு அவ‌ர்க‌ள் நினைவில் ந‌ம் தேச‌த்தை த‌குதிப்ப‌டுத்துவோம்‌. நம்மை பிரிந்த‌‌வ‌ர்க‌ளை க‌ட‌வுள் ஆசீர்வ‌தித்து அவ‌ர்க‌ளை உன்ன‌த‌த்தில் சேர்த்துக் கொள்வாராக‌.அவ‌ர் த‌ம‌து இர‌க்க‌த்தால் இங்கிருக்கும் ந‌ம்மை ப‌ரிசுத்த‌மாய் அர‌வ‌ணைத்துக் கொள்வாராக‌.இப் ப‌குதியையும் ந‌ம் தேச‌த்தையும் பாதுகாத்து ந‌ம்மை ஆசீர்வ‌தித்த‌ருள்வாராக‌"
என்று பேசினார்.

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15

Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/

Tuesday, December 04, 2012

2012-ல் உல‌க‌ம் அழியுமா?


http://www.nasa.gov/topics/earth/features/2012.html


Sunday, November 11, 2012

என் ஜனங்கள் என்னை விட்டுவிட்டார்கள்

அமெரிக்காவில் அதிபர் தேர்தலும் முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டது. இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தங்களுக்கு யார் வேண்டும் என மக்களே தீர்ப்பளித்து விட்டார்கள். மேலும் மெய்னே,மெரிலேண்ட், வாசி்ங்டன் மற்றும் மின்னசோட்டா மாகாணங்கள் கூட முழு மனதாக ஒருபால் திருமணத்துக்கு (Same sex marriage) ஏக ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். அருமையான முன்னேற்றம். மன்னன் எவ்வழியோ அப்படியே மக்கள் வழியும். நாட்டு அதிபரே அதற்கு வெளிப்படையாக ஆதரவை தெரிவித்து விட இனியும் யோசிக்க என்ன இருக்கிறது. எங்கேயோ போய்கொண்டிருக்கிறது தேசங்கள். தான் பேசப் போன பல்கலைகழகத்தில் இருந்த கிறிஸ்தவ அடையாளங்களையெல்லாம் டிவியில் தெரியாதபடி திரை போட்டு மறைக்க சொன்னவர் தானே அவர். இயேசு கிறிஸ்துவை குறிக்கும் I.H.S.அதாவது இலத்தீன் மொழியில் Iesus Hominum Salvator பொருள் இயேசு, மனிதரின் இரட்சகர் என்ற அடையாளத்தையும் சிலுவையும் வேண்டுமென்றே மறைத்தார்களே. மற்றதெல்லாம் இனிக்க கிறிஸ்து மட்டும் ஏனோ பயங்கர கசப்பு. அதிபருக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பகவத்கீதையை வைத்து பதவிப்பிரமாணம் எடுக்க இருக்கிறார் ஹவாயிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பெண் துளசி கப்பர்ட். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேச தலைவர்கள் பொறுப்பாய் செயல்பட்டு தங்கள் பணிகளை இறை பயத்தோடு செய்ய நம் ஜெபங்களில் இவர்களை கருத்தாய் நினைத்துக்கொள்ளுங்கள்.

எரேமியா:2:13. என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்.

Tuesday, October 23, 2012

பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்

படத்தில் நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்” சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க் மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும். 

ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)

Wednesday, August 29, 2012

வில்லியம் கோல்கேட் கண்ட ஆசீர்வாதம்

இனிமேலும் என்னால் உன்னை கவனித்துக் கொள்ள முடியாது. நீ தான் சொந்தமாக காலில் நின்றுகொள்ள வேண்டும் என அந்த ஏழை தந்தை கேட்டுக்கொள்ள இந்த பதினாறு வயது சிறுவன் தனக்குள்ள எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு பட்டணம் நோக்கி பிரயாணம் புறப்பட்டான்.அவன் வந்து சேர்ந்த இடம் நியூயார்க் மாநகரம். சோப்பு செய்து விற்று பிழைக்க வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்.

நாட்டுபுற பையனுக்கு நகரத்தில் வேலை கிடைப்பதென்பது மிகவும் கடினமாக காரியமாக இருந்தது. அவனது தாயாரின் இறுதி வார்த்தைகளும் தான் பயணித்து வந்த படகின் கேப்டனும் அவனுக்கு கொடுத்த தெய்வீக ஆலோசனைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. தனது வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புவித்து தனது வருமானத்தின் ஒவ்வொரு டாலரிலும் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக தேவனுக்கு கொடுக்க முடிவெடுத்தான். முதல் டாலர் வருமானம் வந்ததும் அதில் பத்தில் ஒரு பங்கான பத்து செண்டை தேவனுக்கு கொடுத்தான். தொடர்ந்து அவன் அதை செய்ய ஆரம்பித்தான். டாலர்கள் கொட்ட ஆரம்பித்தன. சீக்கிரத்தில் இவன் ஒரு சோப்பு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனான். சில வருடங்கள் கழித்து இவன் உடன் பங்குதாரர் மரித்து போகவே மொத்த நிறுவனத்தின் பொறுப்பும் இவன் கையில் வந்தது. இவன் இப்போது ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனாலும் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கராராக செலுத்த தன் கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதிசயகரமாக இவரது தொழில் வளர்ந்தது.நேர்மையான இந்த மனிதர் பின் தேவனுக்கு பத்தில் இரண்டு பங்கை வழங்க தொடங்கினார்.பின் பத்தில் மூன்று பங்கு, பின் பத்தில் நான்கு பங்கு, பின் பத்தில் ஐந்து பங்கு என இறைவனுக்கு தாராளமாக வழங்கினார். விரைவில் உலகமெங்கும் வீடுகள் தோறும்  உச்சரிக்கப்படும் பொருளாகி விட்டது இவர் தயாரிப்புகள்.

அவர் தான் மறைந்து போன வில்லியம் கோல்கேட்(1783–1857).William Colgate கோல்கேட் பிராண்டு தயாரிப்புகளின் நிறுவனர், சொந்தக்காரர். தேவன் மீது கொண்ட அவரது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டது.கோல்கேட் நிறுவனத்தின் இன்றைய நிர்வாகம் பற்றி நமக்கு அதிகமாய் தெரியாவிட்டாலும் அந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கான இரகசியத்தை நாம் இங்கே கூறியிருக்கிறோம். இக்கதை இங்கே கோல்கேட் பொருட்களை விளம்பரப்படுத்த எழுதப்படாமல் கடவுள் மீது விசுவாசம் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதை நேர்மையாக கொடுத்து வந்தால் அதை தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தை விளம்பரப்படுத்துகிறதாய் இருக்கிறது.

ஆதாரம்
God`s Tenth and Man`s Mite - By Ashley G. Emmer,Signs of the Times, August 2, 1938.

மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Saturday, August 18, 2012

உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும்

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரில் வரும் 2014-ஆம் ஆண்டில் மிகப்பெரிய நிகழ்வுவொன்று நடக்கவிருக்கின்றதாம். மிசிசிபி ஆறும் மிசவுரி ஆறும் கூடும் இவ்விடத்தில் இந்தியாவிலிருந்து 350,000 நிர்வாண சாமியார்கள் (naga sadhu) பறந்துவர மாபெரும் கும்பமேளாவுக்கு திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் ஸ்பான்சர் செய்பவர்கள் ரெடிமேட் ஆடைகளில் புகழ்பெற்ற Gap மற்றும் Banana Republic நிறுவனங்கள். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கூட இந்நிகழ்வைத்தொடந்து விபூதி-வெண்மை ஐபோன் ஒன்றை அறிமுகப்படுத்தவும் iBathed என்றொரு அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தவும் முன்வந்துள்ளதாம்.செயிண்ட் லூயிஸ் நகராட்சி ஒரு பெரிய இடத்தை இந்நிகழ்வுக்காக ஒதுக்க அனுமதித்துள்ளது.

http://www.hinduismtoday.com/blogs-news/hindu-press-international/major-retailer-sponsors-2014-kumbha-mela-in-america/10962.html

ஆனால் இந்நகரின் இன்றைய நிலை மிக பரிதாபம் மிசிசிபி ஆறு கடும் வறட்சியினால் வற்றிக்கொண்டிருக்கிறதாம். வழக்கத்துக்குமாறாக 13 அடி தாழ்வாக நீர்மட்டம். இது இப்படியே தொடந்தால் கப்பல் மற்றும் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டு தினமும் மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது இப்படியிருக்க வறட்சியின் ஆரம்பகட்டத்திலேயே ஒரு மனம் வருந்தும் சம்பவம் செயிண்ட் லூயிஸ் நகரில் நடந்துள்ளது. செயிண்ட் லூயிஸ் நகரின் ஒரு சர்ச் இலவசமாக உணவு வழங்குவதாக ஒரு செய்தி பரவ எல்லோரும் அதிசயிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஜனங்கள் அங்கு கட்டுக்கடங்காமல் கூடி விட்டதால் மிகப்பெரிய குழப்பம் கொந்தளிப்பே அங்கு உருவாகிவிட்டது. போலீசார் வந்து ஜனங்களை கலைத்துவிட்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவில் அல்ல. அமெரிக்காவின் நிலமை இது.ஜெபமே ஜெயம்.பிரியமானவர்களே  நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் (ஜெபத்தில்) அழுங்கள்.(லூக்கா 23:28)

எரேமியா:50:38. வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.

Saturday, August 04, 2012

இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது

அமெரிக்காவின் Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் இப்போது செய்தித்தாள்களில் மிக பிரபலம். இந்த ரெஸ்டாரண்டுகளை பற்றி முன்பு கேள்விபட்டிராதவர்கள் கூட இப்போது அதிகம் அதிகமாய் கேள்விபடுகிறார்கள். சிலர் போற்றுகிறார்கள். பலர் தூற்றுகிறார்கள். நடப்பது தான் என்ன?
இந்த நிறுவனத்தின் CEO-வான டேன் கேத்தி (Dan Cathy) சொன்ன ஒரு கருத்து தான் இன்று அமெரிக்காவில் பிரளயமாகியிருக்கிறது. அப்படி அவர் என்னத்தான் சொல்லிவிட்டார்.

“குடும்பம் எனும் அமைப்புக்கு தான் எங்கள் முழு ஆதரவும். அது பைபிள் அடிப்படையிலான குடும்பம். எங்கள் நிறுவனம் கூட ஒரு குடும்ப நிறுவனம் தான், ஒரு குடும்பம் தலைமை ஏற்று நடத்தும் நிறுவனம். முதல் மனைவிகளோடேயே நாங்கள் இன்னும் வாழ்கின்றோம். அதனால் கடவுளுக்கு நன்றி. இந்த கருத்து எல்லாருக்கும் பிடிக்காது என்று தெரியும் ஆனாலும் கடவுளுக்கு நன்றி, ஏனென்றால் இந்த தேசத்தில் தான் நாம் நம் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவிலிய கோட்பாடுகள் படி வாழ முடிகின்றது” என்றார். அவ்வளவுதான்.Source

இதுதான் இன்று சர்ச்சையாகியிருக்கின்றது.மேல் சொன்ன டேன் கேத்தியின் கருத்து ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்து கொள்ளும் கூட்டத்தின் அடி மனதை தொட்டதால் இன்று இந்த பிரளயம். கொடியேந்தி இந்த ரெஸ்டாரண்டை மொத்தமாக புறக்கணிப்போம் என கிளம்பியிருக்கின்றார்கள். நேற்று அவர்கள் ஒன்று கூடி Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் முன் குழுமி ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் உதடோடு உதடு முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துகொண்டார்கள். அமெரிக்காவின் பாஸ்டன் நகர மேயர் கூட எங்கள் நகருக்குள் Chick-fil-A ரெஸ்டாரண்ட் வர அனுமதிக்க மாட்டோம் என பிரகடனம் செய்துள்ளார். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.(சங்கீதம் 2:4)

சிக்-பில்-ஏ நிறுவனம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் நிறுவனர் ட்ரூயெட் கேத்தி (Truett Cathy) இதை விவிலிய கோட்பாடுகளின் படி நடத்துவதில் மிக ஆர்வம் கொண்டவராய் இருந்தார். எடுத்துக்காட்டாக ஞாயிற்று கிழமைகளில் ரெஸ்டாரண்டுகளை திறக்காமல் இருத்தல் அதனால் குடும்பங்கள் சர்சுக்கு ஒழுங்காக செல்ல முடியும், கடன் வாங்காமல் நிறுவனத்தை நடத்துதல், வருமானத்தில் ஒரு பகுதியை சமூகநலனுக்கு அளித்தல் போன்றன. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இன்று அபரிதம். 1600 க்கும் அதிகமான ரெஸ்டாரண்டுகள் அமெரிக்காவெங்கும். வாரந்தோறும் புதிதுபுதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. கர்த்தர் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பது ஒன்றும் ஆச்சரியமல்லவே.(மல்கியா 3:10)

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்யலாம் என உன் கருத்தை நீ சொல்ல உனக்கு அதிகாரம் இருக்கும் போது, என் கருத்தை நான் சொல்ல எனக்கு அதிகாரமில்லையா? நல்ல கதையாக இருக்கிறது.

சங்கீதம் 5:12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.

Wednesday, July 11, 2012

அமெரிக்காவில் திறப்பின் வாசல் ஜெபங்கள் 2012

கடந்த வருடம் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்ற திறப்பின் வாசல் ஜெபங்கள் இந்த வருடமும் டெக்சாஸ், கலிபோர்னியா மற்றும் வாசிங்டன் டி.சி பகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்ட் கோஸ்ட் பகுதியிலிருந்து வாசிங்டன் டி.சி திறப்பின் வாசல் ஜெபத்தில் பங்கு பெறுவோர் பென்சில்வேனியா இடமாற்றத்தை கவனிக்கவும்.

  • Thirappin vasal jebam 2012 at Highland Lakes Camp North Spicewood Texas USA July 13,and 14 Yesu viduvikiraar Bro.Mohan.C.Lazaras and Bro.David Stewart Jr
  • Thirapin vaasal jebam 2012 at Family Community Church San Jose Bay Area SanFrancisco California USA July 19,20 and 21
  •  Thirappin vaasal jebam (Stand in the Gap Prayer) 2012 at Hotel Brunswick Lancaster PA  Washington DC America July 26,27 and 28 Jesus Redeems
எசேக்கியேல் 22:30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

Thursday, April 12, 2012

பாலிவுட் நடிகர் ஜானி லீவரின் சாட்சி

முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவரின் (Johnny Lever) சாட்சியை நீங்கள் இங்கே கேட்கலாம். இது போன்ற பிரபலங்கள் தேவனுக்கு சாட்சியாக இறுதி வரைக்கும் நிலைத்திருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 8:29 தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.

Testimony of Bollywood comedian Johnny Lever at an event in Queens New York.Hindi translated to English.

Watch it on a Cell Phone
His interview in Hindi