"நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்."....(11கொரி:4:16-18,11கொரி:5:1) ....
"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று இயேசு சொன்னார்."....(மத்:19:14) ..."
தேவன் தமது வீட்டுக்கு அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டார்.மீந்திருக்கும் நாமும் நம்மை பெலப்படுத்திக்கொண்டு அவர்கள் நினைவில் நம் தேசத்தை தகுதிப்படுத்துவோம். நம்மை பிரிந்தவர்களை கடவுள் ஆசீர்வதித்து அவர்களை உன்னதத்தில் சேர்த்துக் கொள்வாராக.அவர் தமது இரக்கத்தால் இங்கிருக்கும் நம்மை பரிசுத்தமாய் அரவணைத்துக் கொள்வாராக.இப் பகுதியையும் நம் தேசத்தையும் பாதுகாத்து நம்மை ஆசீர்வதித்தருள்வாராக"என்று பேசினார்.
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15
Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/
0 comments:
Post a Comment