துளிர்க்கும் அத்தி மரம் - சகோ.வின்சென்ட் செல்வகுமார்
Saturday, April 28, 2012
துளிர்க்கும் அத்திமரம்
Thursday, April 26, 2012
எல்லாரையும் மதம் மாற்றுவது எங்கள் திட்டம் அல்ல
இன்று, பூமியில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் கூட பெரும்பாலும் ஒரு பழங்கால திருச்சபை ஒன்று இன்னும் சில அங்கத்தினர்களோடு இருப்பதை காணலாம். சில இடங்களில் மக்களின் பூர்வீகத்தை விட திருச்சபையின் சரித்திரம் மிகப்பழமையானதாக இருப்பதை உணரலாம். பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு தற்போதைய அரசாங்கத்தை விட கிறிஸ்தவ அமைப்புகள் மிகப் பழமையானவையாக இருக்கும்.
பைபிளை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆளும் அரசாங்கத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கவும் சமூகத்தில் பல நற்பணிகளை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முன்பு பொட்டல் காடாய் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இடங்களில் எத்தனை பள்ளிகளும், கல்லூரிகளும் மருத்துவமனைகளும் அந்த காலத்திலேயே கிறிஸ்தவ மிஷனரிமார்கள் நிறுவியிருக்கிறார்கள் என பாருங்கள்.எந்த உள்ளூர் கிறிஸ்தவனையும் கேட்டுப்பாருங்கள், யாருமே எல்லோரையும் கிறிஸ்தவராக மாற்றுவதே தங்கள் இலட்சியம் என கூறமாட்டார்கள். மாறாக, கிறிஸ்தவர் தாங்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை பிறரும் தெரிந்து கொள்ளவேண்டும் என மட்டுமே விரும்புவார்கள். அதனால் மற்றவர்கள் தங்கள் விருப்ப வெறுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு மிதவாத முயற்சி மட்டுமே. பிற மார்க்கங்களை பற்றி மேலும் அறிய, அதனை தொடர்ந்து தங்களின் தனிப்பட்ட நம்பிக்கையை தெரிவு செய்து கொள்ள இது ஒரு மத சுதந்திரத்தை கொடுக்கிறது.
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
Thursday, April 12, 2012
பாலிவுட் நடிகர் ஜானி லீவரின் சாட்சி
முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவரின் (Johnny Lever) சாட்சியை நீங்கள் இங்கே கேட்கலாம். இது போன்ற பிரபலங்கள் தேவனுக்கு சாட்சியாக இறுதி வரைக்கும் நிலைத்திருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 8:29 தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்.
Testimony of Bollywood comedian Johnny Lever at an event in Queens New York.Hindi translated to English.
Watch it on a Cell Phone
His interview in Hindi
Monday, April 09, 2012
உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி
உலகப்பிரகாரமான பத்திரிகைகள் வழியாக சாத்தானானவன் "நரகம் என்று ஒன்று இல்லையெனில்”(What if there is no hell),”பரலோகம் ஒரு மறுபார்வை” (Rethinking Heaven) என்பது போன்ற பொய் பேசும் அட்டைப்பட செய்திகளை பெரிதாக வெளியிட்டு எப்படியாவது சிலரை பின்னுக்கு தள்ள அல்லது ஏற்கனவே பின் தங்கி இருப்போரை தக்கவைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கின்றான், ஆச்சரியமாக இதுபோன்ற செய்திகள் பெரிதாகவும் பிரதானமாகவும் காட்டப்படும். அதே வேளையில் நமது ஆவியை உற்சாகமூட்டும் நமது விசுவாசத்தை இன்னும் பெலப்படுத்தும் செய்திகளை பிசாசானவன் நம் கண்ணில் காட்டாமல் மறைத்துக் கொள்ளுவான். அவனது வலையில் விழுந்து விடாமல் சோர்ந்து போகாமல் விளக்குகளில் எண்ணெயோடு மணவாளனுக்காக விழித்து காத்திருந்த கன்னிகைகளூடே நாமும் சேர்ந்து கொள்ளுவோம்.
இந்த வருட உயிர்த்தெழுதல் திருநாளை சிறிது வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறது வடக்கு கரோலினாவிலுள்ள ஒயிட்வில் (Whiteville) எனும் சிற்றூர். திட்டமிட்டபடி காலை ஆறு மணிக்கெல்லாம் சபை பாகுபாடின்றி அனைத்து சபை மக்களும் ஊரின் மையத்திலுள்ள ஒரு புல்வெளியில் குழுமினர். அங்கேயே காலை உயிர்த்தெழுதல் ஆராதனையை முடித்துக்கொண்ட அவர்கள் அடுத்து கிளப்பியது சாக்பீசும் கையுமாக ஊரின் தெருக்களுக்கு. நடைபாதையெங்கும் வேதத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் எழுதி முடிப்பதுதான் அவர்கள் திட்டம், அப்படியே ஏறக்குறைய 1000 பேர்கள் கூடி ஊர் நடைபாதைகள் எங்கும் ஒருமித்து எழுதியதால் ஒரு மணிநேரத்திலேயே புதிய ஏற்பாட்டின் 7957 வசனங்களையும் எழுதிமுடித்தனர். இந்த உற்சாக நிகழ்ச்சியில் 15000 சாக்பீஸ்கள் 1332 சதுர அடி பரப்பில் எழுத பயன்படுத்தப்பட்டன. முழுவேதாகமத்தையும் இப்படி எழுதி முடிக்க முடியுமா என்பது தான் அவர்கள் அடுத்தகட்ட திட்டம். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது.( சங்கீதம் 133:1) அந்திசாய்ந்ததும் நண்பர்களெல்லாரும் மறக்காமல் எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு அழித்துவிட்டனர். வேத வசனங்களை யாரும் மிதித்துவிடக்கூடாது பாருங்கள்.
சங்கீதம் 119:77 உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
http://www.newsobserver.com/2012/04/08/1986972/columbus-county-residents-plan.html
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்