Thursday, April 26, 2012

எல்லாரையும் மதம் மாற்றுவது எங்கள் திட்டம் அல்ல

இந்த கட்டுரைகளை படிக்கும் போது உங்கள் எண்ணத்தில் உங்களையோ அல்லது இந்த உலகத்தையோ கிறிஸ்தவமயமாக்கும் எண்ணத்தில் நாங்கள் இருப்பது போல உங்களுக்கு தோன்றினால் அதனால் கவலைப்படாதிருங்கள். ஏனென்றால் எல்லோரையும் கிறிஸ்தவர்களாக்கி பார்ப்பது எங்கள் குறிக்கோள் அல்ல. புனித வேதாகமத்தின் ஒரு புத்தகமான மத்தேயு அத்தியாயம் 7, வசனம் 13-ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக கூறினார் “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” கடவுளால் மட்டுமே நரகத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். ஜனங்களை இரட்சிப்பது இறைவனின் செயல், மேலும் எல்லோரும் இரட்சிக்கப்படுவது என்பது கூடாத காரியம் என மேலே நாம் சொன்ன வசனத்திலிருந்து தெரிகிறது. எங்கள் இலக்கு அனைத்து ஜாதி மத இனங்களுக்கும் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை அறிவிப்பதும் அதன் மூலம் அனைத்து ஜாதி மத இனங்களிலும் இருந்து ஒரு சில பேரையாவது இயேசுவுக்கு சீடர்களாக உருவாக்குவதும் ஆகும். எனினும் தேவன் தான் முன்குறித்து தெரிந்தெடுத்தவர்களை மட்டுமே இரட்சிக்கிறார். அவர்களை கிறிஸ்துவின் அடியானாக மாற்றுகிறார்.

இன்று, பூமியில் ஒரு சில நகரங்களில் மட்டுமே கிறிஸ்தவ தேவாலயங்கள் இல்லை. கிறிஸ்தவர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் கூட பெரும்பாலும் ஒரு பழங்கால திருச்சபை ஒன்று இன்னும் சில அங்கத்தினர்களோடு இருப்பதை காணலாம். சில இடங்களில் மக்களின் பூர்வீகத்தை விட திருச்சபையின் சரித்திரம் மிகப்பழமையானதாக இருப்பதை உணரலாம்.  பெரும்பாலான நாடுகளில் அந்நாட்டு தற்போதைய அரசாங்கத்தை விட கிறிஸ்தவ அமைப்புகள் மிகப் பழமையானவையாக இருக்கும்.

பைபிளை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஆளும் அரசாங்கத்துக்கும் சட்ட திட்டங்களுக்கும் கீழ்படிந்து நடக்கவும் சமூகத்தில் பல நற்பணிகளை செய்யவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். முன்பு பொட்டல் காடாய் யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இடங்களில் எத்தனை பள்ளிகளும், கல்லூரிகளும் மருத்துவமனைகளும் அந்த காலத்திலேயே கிறிஸ்தவ மிஷனரிமார்கள் நிறுவியிருக்கிறார்கள் என பாருங்கள்.எந்த உள்ளூர் கிறிஸ்தவனையும் கேட்டுப்பாருங்கள், யாருமே எல்லோரையும் கிறிஸ்தவராக மாற்றுவதே தங்கள் இலட்சியம் என கூறமாட்டார்கள். மாறாக, கிறிஸ்தவர் தாங்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையை பிறரும் தெரிந்து கொள்ளவேண்டும் என மட்டுமே விரும்புவார்கள். அதனால் மற்றவர்கள் தங்கள் விருப்ப வெறுப்புகளை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு மிதவாத முயற்சி மட்டுமே. பிற மார்க்கங்களை பற்றி மேலும் அறிய, அதனை தொடர்ந்து தங்களின் தனிப்பட்ட நம்பிக்கையை தெரிவு செய்து கொள்ள இது ஒரு மத சுதந்திரத்தை கொடுக்கிறது.

II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment