பூமிக்கு மிகத்தொலைவிலுள்ள கோள்களையெல்லாம் வலிமை மிக்க விண்நோக்கிகள் மூலம் கண்டு ஆராயும் விஞ்ஞானிகளுக்கு பூமிக்கு மிக அருகில் பூமியை தாக்கக்கூடிய தொலைவிலுள்ள விண்கல்களை கண்டுபிடிப்பது மிக சிரமமாக இருக்கிறதாம். அப்படியே பூமியை தாக்க வரும் விண்கற்களை கண்டுபிடித்துவிட்டாலும் கூட இப்போதைய தொழில்நுட்பத்துக்கு நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்கிறார்கள். உதாரணமாக இன்னும் மூன்று வாரத்தில் ஒரு எரிகல் நியூயார்க் நகரை தாக்கபோகுது எனக்கொண்டால் நம்மால் கடவுளிடம் வேண்டிக்கொள்வதை தவிர வேறெதுவும் செய்ய இயலாது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் சொல்வதும் சரிதான் எரிகல்களை நம் இஷ்டத்துக்கும் திருப்பிவிட நாம் என்ன கடவுளா? கர்த்தர் யோபுவிடம் கேட்கும் போது "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" என கேட்கிறார் (யோபு:38:32).
நாம் மண் அல்லவோ?(சங்:103:14).கர்த்தர் தான் நம்மை காக்க வேண்டும்.கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.(சங்:127:2)
0 comments:
Post a Comment