எப்படி அழாமல் இருக்க முடியும் அவரால்? அமெரிக்க தேசத்தின் எழுப்புதலையும் பிற்பாடு இப்போதைய பின்னடைவையும் கண்டவரன்றோ அவர். சமீபத்தில் தனது 95 ஆவது வயதை கடந்து ஆனால் இன்னமும் நம்பிக்கையாக அமெரிக்காவுக்காக பரிதபித்து அழுது கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் பில்லி கிரஹாம். நமது கண்முன்னே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியின் மாபெரும் தேவ மனிதர். அவரின் பிறந்த நாளையொட்டி அவரது இருதய ஏக்கம் இங்கே அவரது "இறுதி பிரசங்கமாக" வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தேவாசீர்வாதம் பெறுங்கள். "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" என்ற சங்கீதம் 71:18 வசனப்படி தேவனும் அவரை கைவிடவில்லை. இறுதி அறிவிப்பும் அவர் கொடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் பாடு.
http://watchbillygraham.com/
0 comments:
Post a Comment