"யுத்தங்களையும் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உதவும்" துணை ஜனாதிபதி திரு.அன்சாரி பேச்சு.
இந்திய துணை ஜனாதிபதி திரு.ஹமீது அன்சாரி அவர்கள், பெங்களூரிலுள்ள எக்கியுமெனிக்கல் கிறிஸ்டியன் சென்டரில் ஒரு பொன் விழா கொண்டாட்டத்தில் பேசும் போது, “மனித வர்க்கத்தில் மடமைத்தனங்கள் தொடர்வதால், உலகின் பல பகுதிகளிலும் மனித வர்க்கம் வெறுப்புணர்வுகளுக்குள்ளும் மோதல்களுக்குள்ளும் உந்தி தள்ளப்படுகிற நிலையில், இயேசுவின் என்றென்றும் நிலைத்திருக்கும் செய்தியான அன்பு மற்றும் மனதுருக்கம், ஜனங்களுக்கு மீட்பின் வழியை காண்பிக்கிறது. நாம் அப்படியே எழுத்தின் பிரகாரமும் ஆவியின் பிரகாரமும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததை பின்பற்றுவோமானால், நம்மால் நிச்சயமாக யுத்தங்களையும் போராட்டங்களையும் இந்த உலகத்தை விட்டு நீக்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் நீடிய சமாதானம் வழியாக மனித சமுதாயத்திற்கு தேவையான முன்னேற்றத்தையும் செழிப்பையும் நாம் ஏற்படுத்த முடியும்" எனக் கூறினார். மேலும் அவர் கூறும் போது "சமுதாயத்தில் தாழ்ந்த வறுமை நிலையிலுள்ள மக்களுக்கு கல்வி,ஆரோக்கியம், தொண்டு வழியாகவும் சமூக சீர்திருத்தங்கள் வாயிலாகவும் நம் இந்திய தேசத்திற்கு கிறிஸ்தவ சமுதாயம் ஆற்றிய சேவைகளை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நானும் கூட, சிம்லாவிலுள்ள ஐரிஸ் சகோதரர்கள் நடத்திய பள்ளியிலும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெசுய்ட்ஸ் நடத்திய கல்லூரியினாலும் உருவாக்கப்பட்டவன் தான்” என்று திரு.அன்சாரி அவர்கள் கிறிஸ்துவைக் குறித்தும் கிறிஸ்தவத்தைக் குறித்தும் பேசினார்.
வேதாகமம் சொல்லுகிறது,இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று.கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.இயேசு சொன்னார் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக"(யோவா:8:36,IIகொரி:3:17, யோவா:14:27)
0 comments:
Post a Comment