Thursday, May 15, 2014

உலகிலேயே மிகப் பெரிய பத்து கட்டளைகள்


உலகிலேயே மிகப் பெரிதாக பத்து கட்டளைகள் எழுதப்பட்டுள்ள இடம் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் The Fields of the Woods Bible Park (Murphy, NC ) எனும் இடத்தில் உள்ளது. இங்கு ஒரு அழகிய பசுமையான குன்றின் சரிவில் மிகப்பெரிய எழுத்துக்களில் பத்து கட்டளைகளை அழகாக எழுதி வைத்துள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்களும் சுமார் 5 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்டதாகும். இந்த குன்றில் ஏறக்குறைய‌ 350 படிகள் உள்ளன. இதன் வழியாக ஏறி உச்சிக்கு சென்றால் அங்கே திறந்த நிலையில் இருக்கும் மிகப்பெரிய பரிசுத்த வேதாகமத்தை காணலாம். 1945‍ ம் ஆண்டில் இந்த பூங்கா நிறுவப்பட்டதாம். இது தவிர எதிரே ஒரு அழகிய‌ ஜெபமலை, வேத சத்தியங்கள் செதுக்கப்பட்ட தலைக்கற்கள், இயேசுவின் கல்லறையின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், கொல்கொதா மலைமேட்டின் ஒரு நிஜ நிலை மாதிரி வடிவம், புற்களால் "JESUS DIED FOR OUR SINS." என அழகாக செதுக்கி எழுதப்பட்ட ஒரு பூங்கா, அந்த கால மிஷனெரிமார்கள் பயன்படுத்திய ஒரு குட்டி விமானம் என நாம் காண பல விசேஷ‌ங்கள் அங்கு இருக்கின்றன‌. ஆமாங்க‌ அதெல்லாம் அந்த காலம். அமெரிக்கா அமெரிக்காவாக இருந்த காலம். இப்போது பத்து கட்டளைகளையும் உடைத்து தள்ளிவிட்டு சோதோம் காலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த பூங்கா கூட சீக்கிரத்தில் பூட்டப்பட்டு விடலாம். யார் அங்கு போவது? எதற்காக போவது? உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும்.(லூக்கா 19:42)
http://fieldsofthewoodbiblepark.com/

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment